மோடி 3.0 அரசின் முதல் முழு மத்திய பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். இந்தப் பட்ஜெட்டில், பீகாருக்கு ஐ.ஐ.டி விரிவாக்கம், உணவு பதப்படுத்துதல் தேசிய நிறுவனம், மேற்கு கோசி கால்வாய் திட்டத்திற்கு நிதி உதவி, கிரீஃன்பீல்ட் விமான நிலையம், மக்கான வாரியம் என எக்கச்சக்க திட்டங்கள் அறிவிக்கப்பட்டன.
இதனால், “பீகாரில் இந்த ஆண்டு தேர்தல் நடக்கவிருப்பதால், பீகார் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது” என்று எதிர்க்கட்சித் தலைவர்கள் தொடர்ச்சியாக விமர்சித்து வருகின்றனர்.
இந்த நிலையில், மத்தியில் ஆளும் கூட்டணியில் ஐந்தாவது பெரிய கட்சியான லோக் ஜனசக்தி கட்சி (ராம் விலாஸ்) தலைவரும், மத்திய கேபினட் அமைச்சருமான பீகாரைச் சேர்ந்த சிராக் பஸ்வான், எதிர்க்கட்சிகளை விமர்சித்திருக்கிறார்.
இதுகுறித்து, “அப்படியென்றால் பீகார் தேர்தலில் எதிர்க்கட்சிகள் போட்டியிடக் கூடாது. பீகாரும் இந்த நாட்டின் ஒருபகுதிதான். அதற்கு எதாவது கிடைக்கிறதென்றால் அதில் என்ன தவறு? ஐ.ஐ.டி., கிரீன்ஃபீல்டு விமான நிலையங்கள், உணவு பதப்படுத்துதல் நிறுவனம் உள்ளிட்ட அறிவிப்புகள் வெளியாகியிருக்கின்றன. இவை அனைத்தும் பீகார் இளைஞர்களுக்குப் பெரிதும் பயனுள்ளதாக இருக்கும். இதில் என்ன பிரச்னை. ஒரு பீஹாரி என்ற முறையில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.

பட்ஜெட் சமயங்களில் நாட்டின் ஏதோவொரு பகுதியில் தேர்தல்கள் நடக்கும்தான். எதிர்க்கட்சிகளுக்கு இவ்வளவு ஆட்சேபனைகள் இருந்தால், ஒரே நாடு ஒரே தேர்தலை ஆதரித்து, விவாதத்தை முடிவுக்குக் கொண்டுவரலாம்” என்று சிராக் பஸ்வான் சாடியிருக்கிறார்.
அதேபோல், ஐக்கிய ஜனதா தளத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர் லாலன் சிங், “பீகாரின் வளர்ச்சி நடவடிக்கைகளை எதிர்க்கட்சிகள் ஏன் எதிர்க்கின்றன?” என்று கேள்வியெழுப்பியிருக்கிறார்.
மத்திய பட்ஜெட் குறித்து உங்களின் கருத்துகளை கமெண்ட்டில் பதிவிடவும்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb