இந்த ஆண்டு நவம்பர் மாதம் பீகாரில் தேர்தல்கள் வர இருக்கும் நிலையில், பட்ஜெட்டில் பீகாருக்குப் பல திட்டங்கள் அள்ளிக்கொடுக்கப்பட்டுள்ளன.
இன்று நிர்மலா சீதாராமன் பீகாரின் பாரம்பரிய கலையான மதுபானி கலை பொறிக்கப்பட்ட சேலையை அணிந்துவந்தபோதே, பீகாருக்கு ஜாக்பாட் இருப்பதாக ஊகிக்கப்பட்டது.
அதன்படியே, தாமரை விதை வாரியம், தேசிய உணவு தொழில்நுட்பம், தொழில்முனைவு மற்றும் மேலாண்மை நிறுவனம் எனப் பல திட்டங்கள் வழங்கப்பட்டுள்ளன.
பீகாருக்கு ஸ்பெஷல் திட்டங்கள்!
தாமரை விதை நுகர்வு சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. அதை சூப்பர் உணவு எனக் குறிப்பிட்ட நிர்மலா சீதாராமன், விவசாயிகள் தாமரை விதை சாகுபடி செய்ய உதவும் வகையில் வாரியம் அமைக்கப்படும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
பீகாரின் உள்கட்டமைப்பை வலுப்படுத்தும் விதமாக பாட்னா விமான நிலையம் விரிவுபடுத்தப்படும் என்றும், நான்கு புதிய கிரீன்ஃபீல்ட் விமான நிலையங்கள் மற்றும் பிஹ்தாவில் ஒரு பிரவுன்ஃபீல்ட் விமான நிலையம் அமைக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.
கிழக்கு இந்தியாவில் உணவு பதப்படுத்தலை ஊக்குவிக்கும் விதமாகப் பீகாரில் ‘தேசிய உணவு தொழில்நுட்பம், தொழில்முனைவு மற்றும் மேலாண்மை நிறுவனம்’ அமைக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.
பீகாரின் மிதிலாஞ்சல் பகுதியில் நடந்துவரும் சுற்றுச்சூழல் வள மேலாண்மை திட்டமான கோசி கால்வாய் திட்டத்துக்கு நிதியுதவி வழங்கப்படும் எனக் கூறியுள்ளார். இந்த திட்டத்தின் மூலம் 50,000 ஜெக்டேக்கர் விவசாய நிலங்கள் பயன்பெறும் என்கின்றனர்.
பீகாரில் உள்ள ஐஐடி நிறுவனமும் விரிவுபடுத்தப்படும் எனக் கூறியுள்ளனர்.
கடந்த ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவால் தனிப்பெரும்பான்மை பெற முடியாதபோது நிதிஷ் குமாரின் ஜே.டி.யு கட்சியும் சந்திரபாபு நாயுடுவின் டிடிபி கட்சியும் ஆதரவளித்து பாஜகவை ஆட்சிக்கட்டிலில் அமரவைத்தன.
Budget 2024ல் பீகார் மாநிலம் முழுவதும் சாலைகள் அமைக்கும் திட்டங்களுக்காக மட்டும் 26,000 கோடி நிதியை வழங்கியது மத்திய அரசு.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3OITqxs