19
February, 2025

A News 365Times Venture

19
Wednesday
February, 2025

A News 365Times Venture

TVK : `எமோஷனல் விஜய்; 30 நிமிட முக்கிய சந்திப்பு' – பனையூர் மீட்டிங்கின் 10 ஹைலைட்ஸ்!

Date:

தவெகவின் மூன்றாம் கட்ட மாவட்டச் செயலாளர்களை அறிவிக்க பனையூர் அலுவலகத்துக்கு வந்திருந்தார் விஜய். கூடுதலாக மாநில நிர்வாகிகளின் பட்டியலை வெளியிட்டிருக்கும் விஜய், புதுவரவாக கட்சிக்குள் வந்திருக்கும் ஆதவ் அர்ஜூனா, சி.டி.ஆர்.நிர்மல் குமார் போன்றோரையும் புன்சிரிப்போடு வரவேற்றிருக்கிறார். வேகமெடுத்திருக்கும் தவெக முகாமின் இன்றைய மீட்டிங்கின் முக்கிய அப்டேட்ஸ் இங்கே.

விஜய்

*வழக்கம்போல மதியத்துக்கு மேல் அலுவலத்துக்கு வருமாறுதான் விஜய்யின் இன்றைய வருகையும் திட்டமிடப்பட்டிருந்தது. 19 மாவட்ட நிர்வாகிகள் இன்று அழைக்கப்பட்டிருந்தனர். காலை 8:30 மணி முதலே நிர்வாகிகள் ஆஜராகத் தொடங்கிவிட்டனர். இன்னும் அறிவிப்பு வராத மாவட்டங்களுக்கு பதவியைப் பிடிக்க ஆனந்திடம் பேச்சுவார்த்தையில் ஈடுபடும் எண்ணத்திலும் சில நிர்வாகிகள் வந்திருந்தனர். ஆனால், லிஸ்ட்டில் பெயர் இருப்பவர்கள் மட்டும்தான் உள்ளே அனுப்பப்பட்டதால் பேச்சுவார்த்தைக்கென வந்தவர்கள் கேட்டுக்கு வெளியேவே காத்திருந்ததையும் பார்க்க முடிந்தது.

*ஆதவ் அர்ஜூனா தரப்பில் ஒரு வாரம் முன்பாகவே விஜய் தரப்பிடம் எல்லாம் பேசப்பட்டு கட்சியில் இணைவதென முடிவாகிவிட்டதாம். வளர்பிறை நாளில் முக்கிய இணைப்புகளையும் அறிவிப்புகளையும் வெளியிட்டால்தான் எல்லாம் சரியாக இருக்குமென ஒரு தரப்பு அதற்கு தகுந்தாற்போல இணைப்பைத் திட்டமிட்டதாகத் தகவல் சொல்கிறார்கள் தவெக வட்டாரத்தினர்.

*முதலில் ஆதவ் அர்ஜூனா தரப்பு ஆட்கள்தான் மதியம் 12:10 மணியளவில் பனையூர் அலுவலகத்துக்கு வந்து சேர்ந்தனர். அவர்கள் வந்துசேர்ந்த கொஞ்ச நேரத்திலேயே அதிமுக கொடி அகற்றப்பட்ட காரில் சி.டி.ஆர். நிர்மல் குமாரும் வந்து சேர்ந்தார். இறுதியாக மதியம் 12:35 மணிக்கு ஆதவ் அர்ஜூனாவும் தன்னுடைய உதவியாளர்களுடன் பனையூர் அலுவலகத்துக்கு வந்தார்.

ஆதவ்

*ஆதவ் அர்ஜூனா, சி.டி.ஆர்.நிர்மல் குமார் என இருவரின் வருகைக்காகவும் வாசலிலேயே காத்து நின்ற ஆனந்த் சிரித்த முகத்துடன் இருவரையும் வரவேற்று சென்றார். ஆதவ் காரிலிருந்து இறங்கியவுடனே, ‘அண்ணே எப்டி இருக்கீங்க…’ என வணக்கம் சொல்ல ஆனந்தும் பூரித்துப் போய் ‘வாங்க..வாங்க..’ என கட்டியணைத்துக் கொள்ள இருவரும் மீடியாக்களுக்கு போஸ் கொடுத்தனர்.

நிர்மல் குமார்

*இவர்களெல்லாம் கிட்டத்தட்ட 12:40 மணிக்குள்ளாகவே பனையூரில் ஆஜராகிவிட்டாலும் விஜய் 1:30 மணியளவில்தான் வந்தார். விஜய்க்காக இருவரும் கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் காத்திருந்தனர்.

*முதல் இரண்டு கட்ட மா.செக்கள் அறிவிப்பின் போதும் மீடியாக்களின் கண்களில் விஜய் படவே இல்லை. காரில் இருந்தபடியே அலுவலகத்துக்கு வந்துவிட்டு அப்படியே சென்றுவிடுவார். மீடியாக்களுக்கு அலுவலகத்துக்குள் அனுமதியும் கிடையாது. சேட்டிலைட் சேனல்கள் தங்களிடம் இருக்கும் சகல தொழில்நுட்பங்களையும் பயன்படுத்தி ட்ரோன்களை விட்டுதான் விஜய்யின் விஷுவலை எடுப்பர். மீடியாக்களின் கோரிக்கையைத் தொடர்ந்து இன்று அலுவலகத்தின் கேட் முன்பாக விஜய் காரிலிருந்து இறங்கி மீடியாக்களுக்கு போஸ் கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. விஜய்யின் டிரைவரிடமும் இந்தத் தகவல் பகிரப்பட்டிருந்தது. ஆனால், இதில் ஒரு ட்விஸ்ட் நடந்தது.

விஜய்

*விஜய் வீட்டிலிருந்து கிளம்பும்போதே அவரை ஃபாலோ செய்து வரவும் சேட்டிலைட் சேனல்கள் சார்பில் யூனிட் போட்டிருப்பார்கள். விஜய்யின் கார் முன்பாகவே தங்களின் காரின் மேற்கூரையில் ஏறி படம்பிடித்தவாறே வருவார்கள். இன்றும் அப்படித்தான். சீஷோர் 8th அவன்யூக்குள் விஜய்யின் கார் நுழைந்து அலுவலகத்தை நோக்கி வருகையில், அவருக்கு முன்பாக சென்று கொண்டிருந்த செய்தி சேனலின் ஒளிப்பதிவாளர் மேற்கூரையிலிருந்து கீழே விழுந்துவிட்டார். இதை பார்த்த விஜய்யே கொஞ்சம் பதறிப்போய்விட்டார். உடனே காரிலிருந்து இறங்கியவர் அந்த ஒளிப்பதிவாளரிடம் அடி எதுவும் பட்டதா என விசாரித்துவிட்டு அப்படியே நடக்கத் தொடங்கிவிட்டார். கூட்டமும் விஜய்யை சுற்றி வளைக்க ஆரம்பிக்க பெர்சனல் செக்யூரிட்டிகளின் உதவியால் கூட்டத்தில் சிக்காமல் அலுவலகத்துக்குள் நுழைந்தார்.

*விஜய் வருவதற்கே மதியம் 1:30 க்கு மேல் ஆகிவிட்டதால் 19 மாவட்ட நிர்வாகிகளுக்கும் தடபுடலாக மதிய உணவு ஏற்பாடு செய்திருந்தார்கள். திருப்தியான வெஜ் விருந்தை சுவைத்த பிறகே விஜய்யுடனான மீட்டிங்கிற்கு நிர்வாகிகள் தயாராகினர்.

ஆதவ்

*அலுவலகத்துக்குள் நுழைந்தவுடனேயே காத்திருந்த ஆதவ் அர்ஜூனாவையும் சி.டி.ஆர்.நிர்மல் குமாரையும்தான் விஜய் சந்தித்திருக்கிறார். நிர்மல் குமார் பொக்கே கொடுக்க, ஆதவ் அர்ஜூனா சில தலைவர்களின் புகைப்படம், அரசியலமைப்புச் சட்டம் மற்றும் விகடனின் எல்லாருக்குமான தலைவர் அம்பேத்கர் நூலை விஜய்க்கு வழங்கி தவெகவில் இணைந்திருக்கிறார். இருவருடனும் கிட்டத்தட்ட அரைமணி நேரம் விஜய் பேசியிருக்கிறார். இந்தச் சந்திப்புக்கு முன்பாகவே தனிப்பட்ட முறையில் இருவரும் விஜய்யை சந்தித்து அவர்களுக்கான பொறுப்புகள் உறுதிசெய்யப்பட்ட பிறகே வெளியே தெரியும்படிக்கு இந்த சந்திப்பு நிகழ்த்தப்பட்டிருக்கிறது. மதியம் 2:10 மணியளவில் இருவருமே பனையூரிலிருந்து கிளம்பிவிட்டனர்.

*’2026 கண்டிப்பாக சிறப்பான ஆண்டாக இருக்கும்.’ என சி.டி.ஆர்.நிர்மல் குமார் மட்டும் ஊடகத்தினரிடம் சொல்லிவிட்டு சென்றார்.

*ஆதவ், நிர்மல் குமார் மீட்டிங்கை முடித்துவிட்டு நிர்வாகிகளுக்கான மீட்டிங்கை தொடங்கியிருக்கிறார் விஜய். புதிதாக சிலர் கட்சியில் இணைந்ததாலோ என்னவோ இன்று வழக்கத்தை விட ஜாலியான மோடில் இருந்திருக்கிறார் விஜய். நிர்வாகிகளை அழைத்து பேசுகையில் ஜாலியாக சூழலை இலகுவாக்கும் வகையில் கமென்ட்களை அடித்து கலகலவென்றே இருந்திருக்கிறார்.

விஜய்

*நிர்வாகிகள் மத்தியில் மைக்கை பிடிக்கையில், ‘உங்களையும் தமிழ்நாட்டு மக்களையும் நம்பிதான் அரசியலுக்கு வந்திருக்கேன். உங்க மேல இருக்க அன்புலயும் மரியாதைலயும்தான் பெரிய ஆளுங்க யாருக்குமே பதவி கொடுக்காம உழைச்சவங்களா தேடிப் பார்த்து பதவி கொடுத்திருக்கேன்.’ என எமோஷனலாகவும் பேசியிருக்கிறார் விஜய்.

ஆனந்த்

*சர்ச்சைகளுக்கு பெயர் போன முன்னாள் பெண் எம்.பி ஒருவரும் திமுகவிலிருந்து நீக்கப்பட்ட மூத்த நிர்வாகி ஒருவரும் தவெகவில் இணைய தயாராக இருக்கிறார்களாம். விஜய்தான் பச்சைக்கொடி காட்டவில்லையாம். ‘கொஞ்சம் யோசித்து முடிவெடுப்போம்.’ என்கிற மனநிலையில் இருக்கிறாராம்!

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

മഹായുതിയില്‍ ഭിന്നത; ‘വൈ’ കാറ്റഗറി സുരക്ഷയില്‍ ഷിന്‍ഡെക്ക് അതൃപ്തിയെന്ന് റിപ്പോര്‍ട്ട്

മുംബൈ: 2024 നിയമസഭാ തെരഞ്ഞെടുപ്പിന് ശേഷം മഹാരാഷ്ട്രയിലെ ബി.ജെ.പി നേതൃത്വത്തിലുള്ള മഹായുതി...

"தமிழ்நாடு இன்னொரு மொழிப்போரைச் சந்திக்கவும் தயங்காது…" – உதயநிதி எச்சரிக்கை!

மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், 'தமிழ்நாடு அரசு புதிய கல்விக்...

Vijayawada Metro Project: స్పీడందుకున్న విజయవాడ మెట్రో రైల్ ప్రాజెక్ట్ పనులు..!

Vijayawada Metro Project: విజయవాడ మెట్రో రైలు ప్రాజెక్టుకు సంబంధించి పనులు...