14
February, 2025

A News 365Times Venture

14
Friday
February, 2025

A News 365Times Venture

புதுக்கோட்டை: “எங்களுக்கு பெரியார் மண் இல்லை… பெரியாரே மண்தான்!'' -சீமான் காட்டம்

Date:

புதுக்கோட்டையில் நாம் தமிழர் கட்சியின் நிர்வாகி இல்ல நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,

”குடியரசு தின ஆளுநர் உரையில் ஆளுநர் கூறியது குற்றச்சாட்டு தானே?. அதனால், அதனை பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டிய அவசியம் கிடையாது. பெரியார் பற்றி பேசும்போது, ‘பார்த்து பேச வேண்டும்’ என்று கூறும் பழ.நெடுமாறன் தான் பார்த்து பேச வேண்டும். பெரியாருடைய கொள்கை தான் பெண்களை பிரபாகரன் படையில் சேர்க்க தூண்டியது என்றால், தேர்தல் களத்தில் நின்ற அண்ணாவும், கலைஞர் கருணாநிதியும் ஏன் அதனை நிறைவேற்றவில்லை?. தற்போது இதுபோன்ற கருத்துகளை கூறும் பழ.நெடுமாறன் பல்வேறு புத்தகங்கள் எழுதிய போது ஏன் அதனை கூறவில்லை?.

பழ.நெடுமாறன்

பிரபாகரன் போராடிக் கொண்டிருக்கும் பொழுது இதனை பதிவு செய்து இருக்கலாமே.. என்னை பார்த்து அவர்கள் பதட்டம் அடைகிறார்களா, இல்லை அவர்களைப் பார்த்து நான் பதட்டம் அடைகிறேனா?. உலகத் தமிழினம் என்னை மன்னிக்காது என்று பழ.நெடுமாறன் கூறியுள்ளார். உங்களை மன்னிக்கின்ற தமிழினம் என்னை மன்னிக்காது தான். பிரபாகரனை கடுமையான விமர்சனம் செய்த கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஆதரவாக இருந்தவர் பழ.நெடுமாறன். இறுதிப் போரின் போது தி.மு.க-வும், காங்கிரஸூம் துணை நின்றார்கள் என்று பக்கம் பக்கமாக கட்டுரை எழுதி விட்டு இதே தி.மு.க, காங்கிரஸூக்கு 2024 தேர்தலில் ஆதரவு அளித்த பழ.நெடுமாறனை உலகத் தமிழ் மக்கள் மன்னித்தார்கள் என்றால் என்னை மன்னிக்க வேண்டாமா? . ‘பிரபாகரனை தற்போது தான் சந்தித்து வந்தேன். ஐந்தாம் கட்ட ஈழப் போர் தொடங்க உள்ளது’ என கூறிய பழ.நெடுமாறனை மன்னிப்பார்கள்… என்னை மன்னிக்க மாட்டார்களா?.

seeman

பெரியார் பற்றி பேசுவதற்கு யாரிடமாவது ஆதரவை நான் கேட்டேனா?. உலக நாடுகள் எதிர்த்து நிற்கும் போது தனியாக நின்று போரிட்ட பிரபாகரனின் மகன் நான். நீங்கள் எத்தனை கூட்டணியுடன் வேண்டுமானாலும் அழைத்து வந்து என்னை வென்று பாருங்கள். திராவிடனுக்கு ஒரு தலைவன் தான். தமிழனுக்கு எண்ணில் அடங்கா தலைவர்கள் இருக்கிறார்கள்.

வேங்கை வயல் வழக்கில் சி.பி.ஐ விசாரணை..

எங்கள் மாநில காவல்துறையையும், உளவுத்துறையையும் குறைத்து மதிப்பிட்டு விட்டு சி.பி.ஐ விசாரணை கேட்பது மாநில உரிமைக்கும் தன்னாட்சி கேட்பதற்கும் நேர் எதிரானது.. வேங்கை வயல் வழக்கில் மறு விசாரணை செய்ய வேண்டும்… தீர ஆய்வு செய்ய வேண்டும் என்று வேண்டுமென்றால் கூறலாமே தவிர, சி.பி.ஐ விசாரணை கேட்பது தேவையில்லை. சி.பி.ஐ விசாரணை செய்து எந்த குற்றத்திற்கு சரியான தீர்வை ஏற்படுத்தியுள்ளது?. அது ஒரு ஏமாத்து.. வேங்கை வயல் வழக்கை தீர விசாரிக்க வேண்டும். இதில் ஆடியோ எப்படி தற்போது வெளியாகி உள்ளது. ஒருவருக்கு ஒருவர் பேசிய ஆடியோவை பதிவு செய்து வெளியிடுவது தான் அரசின் வேலையா?. என்னை இதுபோன்று காட்டிய போது அனைவரும் சிரித்தீர்கள்.

சீமான்

அனைத்து கட்சிகளும் எதிராக இருப்பதை வரவேற்கிறேன்..

பெரியாரைப் பற்றி பேசுவதற்கு அனைத்து கட்சிகளும் எதிராக இருப்பதை நான் ஏற்கிறேன். வரவேற்கிறேன். பெரியாருடைய பிராமண எதிர்ப்பை ஏற்கிறவர்களாக இருந்தீர்கள் என்றால் ஏன் பிராமண பெண்ணின் தலைமையை ஏற்று அம்மா அம்மா என்று கும்பிடு போட்டீர்கள்?. பெரியார் சொன்னதை திராவிட கட்சிகள் செய்ததா.. பார்ப்பன எதிர்ப்பு என்று சொன்ன பிராமண பெண் தான் ஆதித்தமிழன் ஒருவரை பொதுத் தொகுதியில் திருச்சியில் நிற்க வைத்து வெற்றி பெற வைத்தார்.

பெரியார் எதிர்த்த பிராமண பெண் தான் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த ஒருவரை சபாநாயகராக நிறுத்தி அனைவரையும் எழுந்து நிற்க வைத்தது பிராமண பெண் தான். பெரியார் சொன்ன சமூக நீதியையும், பெண்ணிய உரிமையையும் அவர் சொன்ன அனைத்தையும் ஒவ்வொரு மேடையிலும் பட்டியலிட்டு பேசி பாருங்கள்‌. பெரியாரை ஆதரித்து பேசினேன் தான் நான். அதனை இல்லை என்று சொல்லவில்லை. ஆனால், தற்போது தலை வலிக்கிறது. மாத்திரை போடுகின்றேன். பெரியாரை நான் புள்ளி அளவிற்கு தான் விமர்சித்து பேசியுள்ளேன். என்னை விட ஆயிரம் மடங்கு விமர்சித்து பேசியது பேரறிஞர் அண்ணாவும், கலைஞர் கருணாநிதியும் தான். அதற்கான சான்றுகளை எடுத்து தருகிறேன்.

விஜயை இழுக்க வேண்டாம்…

தி.மு.க 7-வது முறையாக ஆட்சிக்கு வர வாய்ப்பு இல்லை. உண்மையையும், நேர்மையையும் எடுத்துக்கொண்டு வலுவான கருத்து வைக்கும் போது சில சலசலப்புகள் ஏற்படத்தான் செய்யும். ஏற்கெனவே உள்ள ஒரு கோட்பாட்டையும், மரபையும் தகர்த்து புதிய ஒரு கோட்பாட்டை, கட்டமைப்பை கட்டமைக்க நினைக்கும் போது அதை ஏற்பார்கள், எதிர்ப்பார்கள், ஆதரிப்பார்கள், விமர்சிப்பார்கள் என்றெல்லாம் அச்சப்படக்கூடாது. அதை துணிந்து செய்கிறவனுக்குத் தான் ஒரு போர் வீரனுக்கு உள்ள துணிவும், வீரமும் தேவைப்படுகிறது. அப்படி, நின்றவன் தான் உலகெங்கிலும் உள்ள மாறுதல்களை கொண்டு வந்திருக்கின்றான். இதான் வரலாறு. அப்படிதான் நாங்கள் கட்டமைத்துக் கொள்கிறோம். நீங்கள் கட்டமைத்துள்ள திராவிடம், இந்தியம் என்ற கோட்பாடுகளை தகர்த்து உண்மையாக இருக்க வேண்டிய, இருந்திருக்க வேண்டிய தமிழ் தேசியக் கோட்பாட்டை இந்த நிலத்தில் கட்டமைக்கும் பொழுது அடித்தளம் ஆடத்தான் செய்யும். அதற்கு எதுவும் நான் செய்ய முடியாது.

சீமான்

எனது கட்சியிலிருந்து நிறைய பேர் தி.மு.க-வில் சேர்ந்து விட்டதால் அந்த நிமிடத்தில் இருந்து தமிழ்நாடு முதலமைச்சர் என் கட்சியில் சேர்ந்து விட்டார் போல. அதனால்தான் தமிழன் என்ற தகுதியை இழந்து விட்டால் வாழ்ந்தும் பயனில்லை என்று கூறியுள்ளார். இதை நான் பேசும் பொழுது, ஐயோ ஐயோ என்று கூறினார்கள். நாங்கள் அடித்த அடியில் தமிழன் பெருமைகளை பேசி வருகின்றனர். தற்போது பெரியவர்களுக்குள் சண்டை நடந்து வருகிறது. அதனால், இதில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜயை இழுக்க வேண்டாம். மெயின் ரவுடிகளோடு மோதிக் கொண்டிருக்கும் பொழுது அவரை போய் எதற்கு இழுக்க வேண்டும்?.

“பெரியார் மண் இல்லை, பெரியாரே மண்தான்..”

திரும்பத் திரும்ப கூறி வருகிறேன். பெரியார் மண் பெரியார் மண் என்று யாரும் பேச வேண்டாம். இது, சேர, சோழ, பாண்டியன் மண். புலித்தேவன், மருது பாண்டியன், வேலு நாச்சியார் அம்மன். வ.உ.சி, முத்துராமலிங்க தேவர் மண் காமராஜர் கக்கனின் மண். வருகிறவர், போகிறவர்கள் எல்லாம் பெரியாருமண் பெரியார் மண் என்று கூறினால் கோபம் வெளிவந்து விடும் எனக்கு. எங்களுக்கு பெரியார் மண் இல்லை, பெரியாரே மண்தான். பெரியாரைப் பற்றி பேசுவதால் அனைவரும் என்னை எதிர்க்கிறார்கள் என்று கூறுகிறீர்கள்.

சீமான்

`4 ஆண்டுகள் ஆகியும் ஏன் நிலைநாட்டவில்லை?’

அ.தி.மு.க-வுக்கும், தி.மு.க-வுக்கும் என்ன வித்தியாசம் உள்ளது. எங்கு மாறுபாடு உள்ளது. கொடியில் தான் வித்தியாசம் உள்ளது.

ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு, பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை, கொடநாடு கொலை வழக்கு உள்ளிட்ட அவற்றிற்கு இரண்டு மாதங்களில் தீர்வு காண்கிறேன். நீதியை நிலைநாட்டுகிறேன் என்று தி.மு.க ஆட்சிக்கு வந்தது. ஆனால், தற்போது நான்கு ஆண்டுகள் ஆகியும் ஏன் நிலைநாட்டவில்லை?. கொள்ளையில், திருட்டில் இருட்டிலும் இவர்கள் இருவரும் கூட்டு தான். இதில் .அ.தி.மு.க-வும் ஒரே கட்சி தான்.

`பெரியாரை ஏற்றீர்கள் என்றால்..’

பெரியாரின் பார்ப்பன எதிர்ப்பை ஏற்றீர்கள் என்றால் ஏன் பார்ப்பனிய பெண்ணை தலைமையாக ஏற்றீர்கள்?. அவரின் அமைச்சரவையில் ஏன் இருந்தீர்கள்?. அதற்கு பதில் இருக்கிறதா பெரியாரின் கடவுள் மறுப்பை ஏற்கிறீர்களா?. பெரியாரின் தாலி அறுப்பை ஏற்கிறீர்களா?. தற்போது வாயை தான் நான் திறந்து உள்ளேன். இன்னும் பேச ஆரம்பிக்கவில்லை. ஒவ்வொன்றாக இது போல் பேசுவேன். நீங்கள் பதில் சொல்லிக்கொண்டே வாருங்கள். அனைவரது புத்தகமும் அரசுடமையாக்கும்போது பெரியாரின் புத்தகம் மட்டும் ஓரிடத்தில் மட்டுமே உள்ளது. அவை ஏன் அரசுடைமையாக்கவில்லை?. அது அறிவுசார் சொத்து… எங்களுக்கே வேண்டும் என்று வீட்டுக்குள் பூட்டி வைத்து இருப்பது யார்?. தற்போது தோண்டும் போது ஒவ்வொன்றாக வருகிறது. மொத்தத்தில் அனைத்தையும் வெளியிட்டார்கள் என்றால் அனைவரும் படித்துவிட்டு உண்மையில் அவர் பெரியார் என்றால் தலை வணங்கி ஏற்று கொண்டு போய் விடுகின்றோம். நான் கூட்டணி வைத்து தான் இருக்கிறேன். 8 கோடி மக்களுடன் கூட்டணி வைத்திருக்கிறேன்” என்றார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ಹೂಡಿಕೆದಾರರ ಸಮಾವೇಶ: ಉತ್ಸಾಹದಿಂದ ಓಡಾಡಿದ ಎಂ ಬಿ ಪಾಟೀಲ

ಬೆಂಗಳೂರು, Feb.12,2025: ಜಾಗತಿಕ ಹೂಡಿಕೆದಾರರ ಸಮಾವೇಶದಲ್ಲಿ ಬುಧವಾರ ದಿನವಿಡೀ ಬೃಹತ್...

മലയോര ഹൈവേ; 250 കി.മീ പണി പൂര്‍ത്തിയായി, ഒരു വര്‍ഷത്തിനകം 200 കി.മീ കൂടി; ആദ്യ റീച്ചിന്റെ ഉദ്ഘാടനം നാളെ

തിരുവനന്തപുരം: കാസര്‍ഗോഡ് ജില്ലയിലെ നന്ദാരപ്പടവ് മുതല്‍ തിരുവനന്തപുരം ജില്ലയിലെ പാറശ്ശാലവരെ നീളുന്ന...

`மனைவி கணவரை தவிர்த்து வேறொருவர் மீது காதலும், நெருக்கமும் கொண்டிருப்பது தகாத உறவாகாது'- MP ஹைகோர்ட்

மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் தன்னுடைய மனைவிக்கு வேறு ஒருவருடன் தொடர்பு...

Lalu Prasad Yadav: “మా బావకు కిడ్నాపర్లలో సంబంధం”.. లాలూ బావమరిది సంచలన ఆరోపణ..

Lalu Prasad Yadav: లాలూ ప్రసాద్ యాదవ్‌పై ఆయన బావమరిది,...