14
February, 2025

A News 365Times Venture

14
Friday
February, 2025

A News 365Times Venture

BJP: வெளியான மாவட்டத் தலைவர்கள் பட்டியல்; கொதிக்கும் சீனியர்கள்; சர்ச்சையில் தமிழக பாஜக!

Date:

கடந்த நவம்பரில் தமிழக பா.ஜ.கவில் உட்கட்சி தேர்தல் தொடங்கியது. முதலில் கிளை பொறுப்பாளர்கள், மண்டல தலைவர்களுக்கான முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதைத்தொடர்ந்து மாவட்டத் தலைவர் பதவிக்குத் தேர்தல் நடந்தது. முதல்கட்டமாக 33 மாவட்டங்களுக்கான முடிவுகள் வெளியிடப்பட்டிருக்கிறது. இதில் ஏற்பட்ட அதிருப்தியின் காரணமாகத் திருநெல்வேலி மாவட்டத் தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். மேலும் செங்கல்பட்டு, வேலூர், கோவை எனப் பல இடங்களில் நிர்வாகிகள், தலைமை மீது கடும் அதிருப்தியில் இருக்கிறார்கள். எனவே, என்னதான் நடக்கிறது கமலாலயத்தில்?

அண்ணாமலை

இதுகுறித்து நம்மிடம் பேசிய கமலாலய சீனியர்கள், “பா.ஜ.க-வில் மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை தீவிர உறுப்பினர் சேர்க்கை நடைபெறும். பிறகு பூத் கமிட்டி அமைக்கப்பட்டு மண்டல் தலைவருக்கான தேர்தல் நடத்தப்படும். அதில் பூத் கமிட்டி உறுப்பினர்கள் வாக்களிப்பார்கள். பிறகு மண்டல் கமிட்டி தலைவர்களும், உறுப்பினர்களும் இணைந்து மாவட்டத் தலைவர்களைத் தேர்வு செய்வார்கள். இதையடுத்து மாநிலத் தலைவர், தேசியத் தலைவர் தேர்வு செய்யப்படுவார்கள். தமிழக பா.ஜ.கவில் என்றைக்குத் தீவிர உறுப்பினர் சேர்க்கை தொடங்கியதோ அப்போதிலிருந்தே பிரச்னையும் ஆரம்பித்துவிட்டது. ஒருகோடி பேரை உறுப்பினராக இணைக்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்ட நிலையில், அதில் பாதியைக் கூடத் தொட முடியவில்லை.

பல இடங்களில் பூத் கமிட்டி அமைப்பதிலும் சிக்கல் ஏற்பட்டது. இந்த சூழலில்தான் 33 மாவட்டங்களுக்கான தலைவர் பட்டியல் சமீபத்தில் வெளியானது. இந்த தேர்தல் பெயரளவுக்கு மட்டுமே நடத்தப்பட்டுள்ளது. மூத்த தலைவர்கள் தங்களுக்கு இருக்கும் செல்வாக்கைப் பயன்படுத்தி ஆதரவாளர்களைப் பதவிக்குக் கொண்டு வந்திருக்கிறார்கள்” என நிர்வாகிகள் பலரும் குமுறுகிறார்கள். குறிப்பாகத் திருநெல்வேலி, வேலூரில் இந்த பிரச்னை வெளிப்படையாகவே வெடித்திருக்கிறது.

மாவட்டத் தலைவர்கள் நியமனம்
மாவட்டத் தலைவர்கள் நியமனம்

திருநெல்வேலியைப் பொறுத்தவரையில் வடக்கு, தெற்கு என இரு மாவட்டங்கள் இருக்கின்றன. இங்குத் தலைவராக முறையே தயாசங்கரும், தமிழ்ச்செல்வனும் இருந்து வந்தனர். தற்போது புதிதாக வெளியான பட்டியலில் வடக்கு மாவட்டத் தலைவராக முத்து பழவேசம் என்பவர் நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தயாசங்கரும், பொதுச் செயலாளர் வேல் ஆறுமுகமும் பா.ஜ.க-விலிருந்து விலகுவதாக அறிவித்தனர்.

இதுதொடர்பாக தயாசங்கர் சமூக வலைத்தளப்பாக்கத்தில், “இத்துடன் பா.ஜ.கவில் எனது அரசியல் பயணம் முடிவடைகிறது. என்னுடன் இதுவரை பயணித்த சகோதர, சகோதரிகளுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்” எனத் தெரிவித்திருந்தார். மேலும் வேல் ஆறுமுகமும், “கட்சியிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்கிறேன்” என அறிவித்திருந்தார். இதற்குத் தயாசங்கர் தரப்பு மீண்டும் மாவட்டத் தலைவர் பதவியை எதிர்பார்த்து இருந்தது. ஆனால் நயினார் தனது ஆதரவாளர் முத்து பழவேசத்தைக் கொண்டுவந்திருக்கிறார். இதில்தான் அந்த மாவட்டத்தில் சர்ச்சை வெடித்திருக்கிறது.

பாஜக
பாஜக

இதேபோல் வேலூர் மாவட்டத் தலைவராகத் தசரதன் நியமனம் செய்யப்பட்டதற்கும் எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது. இவர் ஏற்கெனவே இரண்டு முறை மாவட்டத் தலைவராக இருந்திருக்கிறார். கடந்த முறை மனோகரன் என்பவர் நியமனம் செய்யப்பட்டார். இந்த சூழலில்தான் மீண்டும் தசதரனுக்குப் பதவி வழங்கப்பட்டிருக்கிறது. இதை மனோகரன் தரப்பு ரசிக்கவில்லை. அதாவது அண்ணாமலையின் ஆதரவாளராக இருப்பவர்தான் மனோகரன். இவர் மீது கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது சரியாக வேலை செய்யவில்லை என்பது உள்ளிட்ட பல்வேறு புகார்கள் கிளம்பியது. இதனால் பா.ஜ.க அமைப்பு பொதுச் செயலாளர் கேசவ விநாயகம் தனது ஆதரவாளர் தசதரனை கொண்டுவந்திருக்கிறார்.

இதேபோல் செங்கல்பட்டு வடக்கு மாவட்டத் தலைவராக வேதா சுப்பிரமணியம் இருந்து வந்தார். தற்போது ரகுராமன் என்பவர் நியமனம் செய்யப்பட்டிருக்கிறார். இதற்கு வேதா சுப்பிரமணியம் தரப்பு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இப்படி மாநிலம் முழுவதும் சர்ச்சை வெடித்திருக்கிறது. இதனால் மீதம் உள்ள மாவட்டங்களுக்கான தலைவர் பட்டியலை வெளியிடுவதற்கு அகில இந்தியத் தலைமை தயக்கம் காட்டி வருகிறது. அதிலும் ஏராளமான சர்ச்சைகள் வெடிக்க வாய்ப்புள்ளது” என்றனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3PaAEiY

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ಹೂಡಿಕೆದಾರರ ಸಮಾವೇಶ: ಉತ್ಸಾಹದಿಂದ ಓಡಾಡಿದ ಎಂ ಬಿ ಪಾಟೀಲ

ಬೆಂಗಳೂರು, Feb.12,2025: ಜಾಗತಿಕ ಹೂಡಿಕೆದಾರರ ಸಮಾವೇಶದಲ್ಲಿ ಬುಧವಾರ ದಿನವಿಡೀ ಬೃಹತ್...

മലയോര ഹൈവേ; 250 കി.മീ പണി പൂര്‍ത്തിയായി, ഒരു വര്‍ഷത്തിനകം 200 കി.മീ കൂടി; ആദ്യ റീച്ചിന്റെ ഉദ്ഘാടനം നാളെ

തിരുവനന്തപുരം: കാസര്‍ഗോഡ് ജില്ലയിലെ നന്ദാരപ്പടവ് മുതല്‍ തിരുവനന്തപുരം ജില്ലയിലെ പാറശ്ശാലവരെ നീളുന്ന...

`மனைவி கணவரை தவிர்த்து வேறொருவர் மீது காதலும், நெருக்கமும் கொண்டிருப்பது தகாத உறவாகாது'- MP ஹைகோர்ட்

மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் தன்னுடைய மனைவிக்கு வேறு ஒருவருடன் தொடர்பு...

Lalu Prasad Yadav: “మా బావకు కిడ్నాపర్లలో సంబంధం”.. లాలూ బావమరిది సంచలన ఆరోపణ..

Lalu Prasad Yadav: లాలూ ప్రసాద్ యాదవ్‌పై ఆయన బావమరిది,...