19
February, 2025

A News 365Times Venture

19
Wednesday
February, 2025

A News 365Times Venture

“தாக்கப்பட்டாரா அல்லது நடிக்கிறாரா..?'' -சைஃப் அலிகான் நடனம்; பா.ஜ.க அமைச்சர் சர்ச்சை பேச்சு!

Date:

மகாராஷ்டிராவில், எப்போதும் சர்ச்சையாக பேசுவதை வழக்கமாக கொண்டவர் மீன்வளத்துறை அமைச்சராக இருக்கும் நிதேஷ் ரானே. இவர் முன்னாள் மத்திய அமைச்சர் நாராயண் ரானேயின் மகனாவார்.

தற்போது புனேயில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய நிதேஷ் ரானே, நடிகர் சைஃப் அலிகானை குப்பை என்று விமர்சித்துள்ளார். இது தொடர்பாக அவர் பேசுகையில், ”பங்களாதேஷிகள் மும்பையில் என்ன செய்கிறார்கள் என்று பாருங்கள். அவர்கள் சைஃப் அலிகான் வீட்டிற்குள் நுழைந்துள்ளனர். இதற்கு முன்பு அவர்கள் ரோடு தடுப்புக்கு வெளியில் நின்றார்கள். ஆனால் இப்போது அவர்கள் வீட்டிற்குள் வர ஆரம்பித்துவிட்டார்கள். அவரை (சைஃப்) தூக்கிச்செல்ல வந்திருக்கலாம். அது நல்லது. குப்பைகளை அகற்றவேண்டும்.

சைஃப் அலிகான் மருத்துவமனையில் இருந்து வெளியில் வரும்போது நடனமாடிக்கொண்டே வருகிறார். இதனால் அவர் உண்மையிலேயே பிளேடால் தாக்கப்பட்டாரா அல்லது நடிக்கிறாரா என்று சந்தேகமாக இருக்கிறது. அவர் பேசிக்கொண்டே நடனமாடிக்கொண்டு வெளியில் வருகிறார்.

முஸ்லிம் நடிகர்களுக்கு எதாவது பிரச்னை என்றால் ஒவ்வொரு அரசியல்வாதியும் உதவ ஓடிவருகின்றனர். அதேசமயம் ஒரு இந்து நடிகர் பாதிக்கப்பட்டால் அவ்வாறு செய்வதில்லை.

ஷாருக்கான், சைஃப் அலிகான் என எந்த கான் பாதிக்கப்பட்டாலும் தேசியவாத காங்கிரஸ் தலைவர் ஜிதேந்திர அவாத், சுப்ரியா சுலே கவலைப்பட ஆரம்பித்து விடுகின்றனர். நடிகர் சுஷாந்த் சிங் சித்ரவதை செய்யப்பட்டபோது யாரும் கவலைப்படவில்லை” என்று பேசினார்.

சைஃப் அலிகான் – Saif Ali Khan

இதற்கு முன்பு சிவசேனா (உத்தவ்) கட்சி எம்.பி. சஞ்சய் ராவுத்தும் இதே சந்தேகத்தை கிளப்பி இருந்தார். இது தொடர்பாக அவர் அளித்திருந்த பேட்டியில், ”இந்த சம்பவத்திற்குப் பிறகு, மும்பையில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துவிட்டது, உள்துறை அமைச்சகம் தோல்வியடைந்துவிட்டது, மகாராஷ்டிரா அரசு சீர்குலைந்துவிட்டது, மும்பையில் உள்ள ஒவ்வொரு குடிமகனும் பாதுகாப்பற்ற சூழ்நிலையில் இருப்பது போன்ற சூழல் உருவாகியுள்ளது. ஆனால், சைஃப் அலிகான் மருத்துவமனையில் இருந்து வெளியே வந்த விதத்தை பார்க்கும்போது, நான்கு நாள்களுக்கு முன்பு எதுவும் நடக்காதது போல் தெரிகிறது.சைஃப் அலிகான் குடும்பத்தினர் இதை வெளிப்படுத்த வேண்டும். ஆறு மணி நேரம் அறுவை சிகிச்சை செய்த ஒருவர் நான்கு நாள்களுக்குள் இவ்வளவு நல்ல நிலையில் வெளியே வர முடியுமா?” என்று கேள்வி எழுப்பினார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

മഹായുതിയില്‍ ഭിന്നത; ‘വൈ’ കാറ്റഗറി സുരക്ഷയില്‍ ഷിന്‍ഡെക്ക് അതൃപ്തിയെന്ന് റിപ്പോര്‍ട്ട്

മുംബൈ: 2024 നിയമസഭാ തെരഞ്ഞെടുപ്പിന് ശേഷം മഹാരാഷ്ട്രയിലെ ബി.ജെ.പി നേതൃത്വത്തിലുള്ള മഹായുതി...

"தமிழ்நாடு இன்னொரு மொழிப்போரைச் சந்திக்கவும் தயங்காது…" – உதயநிதி எச்சரிக்கை!

மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், 'தமிழ்நாடு அரசு புதிய கல்விக்...

Vijayawada Metro Project: స్పీడందుకున్న విజయవాడ మెట్రో రైల్ ప్రాజెక్ట్ పనులు..!

Vijayawada Metro Project: విజయవాడ మెట్రో రైలు ప్రాజెక్టుకు సంబంధించి పనులు...