29
September, 2026

A News 365Times Venture

29
Tuesday
September, 2026

A News 365Times Venture

'இந்த புலி நகத்தை ஆந்திராவுல வாங்கினேன் தம்பி' – யூடியூபரால் கைதான கோவை நபர்

Date:

வைரல் கன்டென்ட்களை தரும் யூடியூபர்களை விட சர்ச்சைக்குரிய கன்டென்ட்களால் சிக்கலில் விடும் யூடியூபர்கள் அதிகரித்து வருகிறார்கள். கோவை மாவட்டத்தில் ‘கோயம்புத்தூர் மாப்பிள்ளை’ என்ற பெயரில் ஒரு இளைஞர் யூடியூப் மற்றும் இன்ஸ்டாகிராமில் கோவை தொடர்பான வீடியோக்களை பகிர்ந்து வருகிறார்.

கோவை

அவர் சமீபத்தில் வெளியிட்ட வீடியோ சர்ச்சையாகியுள்ளது. அதில் ராமநாதபுரம் பகுதியைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவரிடம் பேட்டி எடுத்திருந்தார்.

அவர் தன்னுடைய கழுத்தில் புலி நகத்தால் செய்யப்பட்ட செயின் அணிந்திருந்தார். இதுகுறித்து பாலகிருஷ்ணன், “பொதுவெளியில் சொல்லக் கூடாது. இருந்தாலும் சொல்கிறேன். இந்த புலி நகத்தை ஆந்திராவில் இருந்து வாங்கினேன். எனக்கு வேட்டைக்கு செல்ல ஆசைதான்.

யூடியூபருக்கு பேட்டி

இருந்தாலும் வேட்டைக்கு செல்லவில்லை.” என்று கூறியிருந்தார். இந்த வீடியோ வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுகுறித்து வனத்துறையினர் விசாரணையில் இறங்கினார்கள். பாலகிருஷ்ணனின் வீட்டை சோதனை செய்தனர்.

சோதனையின் போது அவர் வெளியூர் சென்றிருந்தார். சோதனையில் ஒரு புள்ளிமானுடைய கொம்பின் துண்டுகள் கண்டறியப்பட்டன. இதுதொடர்பாக வனத்துறையினர் பாலகிருஷ்ணன் மீது வழக்குப்பதிவு செய்தனர். மேலும் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கைது

அவரிடம் இருந்து செயின் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. செயின் மற்றும் மான் கொம்பு ஆய்வுக்காக அனுப்பப்பட்டுள்ளது. அந்த அறிக்கை கிடைத்ததும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என்று வனத்துறை கூறியுள்ளது.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ಪ್ರೀತಿಗೆ ನಿರಾಕರಣೆ: ಪೆಟ್ರೋಲ್ ಸುರಿದು, ಯುವತಿ ತಬ್ಬಿಕೊಂಡು ಬೆಂಕಿ ಹಚ್ಚಿಕೊಂಡ ಯುವಕ

ಮೈಸೂರು, ಸೆಪ್ಟಂಬರ್,29, 2026 (www.justkannada.in):  ಪ್ರೀತಿಸುವಂತೆ ನಿರಂತರವಾಗಿ ದುಂಬಾಲು ಬಿದ್ದಿದ್ದ...

‘വിഷം പഠിപ്പിക്കുന്നു’; സര്‍വകലാശാലാ പാഠ്യപദ്ധതിയിലെ അംബേദ്കര്‍ രചനകളില്‍ പ്രധാനമന്ത്രിയുടെ ഓഫീസിന്റെ പരിശോധന

ന്യൂദല്‍ഹി: രാജ്യത്തെ സര്‍വകലാശാലകളിലെ പാഠ്യപദ്ധതിയില്‍ ഉള്‍പ്പെടുത്തിയിട്ടുള്ള അബേദ്ക്കറിന്റെ രചനകളെക്കുറിച്ച് പ്രധാനമന്ത്രിയുടെ ഓഫീസ്...

மின்சாரத்துறையில் தனியார்: “இதற்கு பெயர்தான் தூய ஆட்சியா? வெட்கக்கேடு! " – சீமான் காட்டம்

வீடுகளில் மின் பயன்பாட்டைக் கணக்கெடுக்கும் பணியில் தனியார் ஒப்பந்த நிறுவனங்களின் மூலம்...

Work From Home: ఉద్యోగులకు అలర్ట్.. నవంబర్ 1 నుంచి వర్క్ ఫ్రం హోం..

ఢిల్లీలో శీతాకాలంలో వాయు కాలుష్యాన్ని అరికట్టేందుకు, పరిశుభ్రమైన గాలిని అందించేందుకు ఢిల్లీ...