23
April, 2025

A News 365Times Venture

23
Wednesday
April, 2025

A News 365Times Venture

“கலெக்டர் இருக்கையில் இன்பநிதியின் நண்பர்… தமிழகத்தின் சாபக்கேடு!'' – அண்ணாமலை காட்டம்

Date:

மதுரையில் நடந்த தொழில் முனைவோர்களுக்கான நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, பின்பு செய்தியாளர்களிடம் பேசும்போது, “அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு தமிழர்களின் அடையாளம், பெருமை. அடுத்த ஆண்டு நடைபெறும் ஜல்லிக்கட்டில் பாஜகவின் மூத்த தலைவர்கள் பங்கேற்க உள்ளார்கள்.

அண்ணாமலை

`கலெக்டர் இருக்கையில் இன்பநிதியின் நண்பர்’

ஜல்லிக்கட்டு போட்டிக்கு துணை முதலமைச்சர் வருவதோ, அவரது மகனையும் கூட்டி வந்தததோ தவறு கிடையாது. மகனை முதல் இருக்கையில் அமர வைத்தது தவறுதான். பின்னாலுள்ள இருக்கையில் அமர வைத்திருக்கலாம். அதைவிட பெரிய தவறு, துணை முதல்வர் மகன் இன்பநிதியின் நண்பர்களை முதல் இருக்கைக்கு கொண்டு வர வேண்டும் என்பதற்காக அமைச்சர் மூர்த்தி செய்தது. என்னை எழுந்திரிக்க வற்புறுத்தவில்லை என்று கலெக்டர் கூறுகிறார். அப்புறம் எதற்கு இருக்கையை விட்டுக் கொடுத்தார்.

கலெக்டர் அமர்ந்திருந்த இருக்கையில் இன்பநிதியின் நண்பர் அமர்ந்திருக்கிறார். கலெக்டர் தன்னை தண்ணி இல்லாத காட்டிற்கு மாற்றி விடுவார்கள் என நினைக்கிறார்.

மாபெரும் தவறு…

மாவட்ட கலெக்டராக அவ்வளவு எளிதாக வர முடியாது. பள்ளி, கல்லூரி மாணவர்கள் விழுந்து விழுந்த படித்துதான் அந்த இடத்திற்கு வருகிறார்கள். ஒரு ஏழை எளிய மாணவர் படித்து வரவேண்டிய இடம் அது. நியாயமாக பார்த்தால் அமைச்சருக்கும் துணை முதல்வருக்கும் நடுவில் கலெக்டர் அமர்ந்திருக்க வேண்டும். அந்த இருக்கையை விட்டுக் கொடுத்தது மாபெரும் தவறு.  கலெக்டரை ஒரு ஓரத்தில் தள்ளிவிட்டார்கள். இப்படி இருந்தால் சாமானிய மக்களுக்கு இந்த கலெக்டரின் மீது எப்படி நம்பிக்கை வரும்? அமைச்சர் மூர்த்தி எழுந்திருக்க சொன்னால், கலெக்டர் செய்திருக்க கூடாது. வேண்டுமானால் மூர்த்தி அவர் இருக்கையை விட்டு கொடுக்கட்டும். ஏனென்றால், அவர் அரசியல்வாதி. ஆனால், கலெக்டர் நடந்த கொண்ட விதம் ஏற்புடையது அல்ல. வேறு இருக்கையில் உதயநிதியின் மகனை அமரச் சொல்லி இருக்க வேண்டும்.

அலங்காநல்லூர் | அண்ணாமலை

முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ விஜய்யை அழைத்தது போல் அதே வேலையை செல்வபெருந்தகை செய்கிறார். பாஜகவிற்கு யாரையும் அழைக்க வேண்டிய அவசியமில்லை, இளைஞர்கள் எங்கள் பக்கம் இருக்கிறார்கள் நாங்கள் யாரையும் அழைக்க வேண்டி அவசியம் இல்லை.

திமுக பிறப்பதற்கு முனபே வள்ளுவர் திருக்குறளில் ஆன்மீக கருத்துக்களை சொல்லி உள்ளார். வள்ளுவன் ஆரிய கைக்கூலி என்று தந்தை பெரியார் சொல்லிவிட்டார். அப்புறம் வள்ளுவருக்கு காவிக்கொடி பூசினால் உங்களுக்கு என்ன பிரச்சனை? தமிழகத்திற்கு வலுவான தலைவர்கள் வரவேண்டும்.

திமுக தமிழகத்தில் இருப்பது சாபக்கேடாக பார்க்கிறேன். அப்பாவின் அடையாளத்தை வைத்து மூன்றாவது முறையாக வர வேண்டும் என்று நினைத்தால் அது சாபக்கேடு. ஏற்கெனவே ஈரோடு இடைத்தேர்தலை நாங்கள் பார்த்துள்ளோம். தற்போது நடைபெற உள்ளது இடைத்தேர்தலுக்கான இடைத்தேர்தல். திருப்பரங்குன்றத்திற்கு சிக்கந்தர் மலை என பெயர் வைத்து ஆட்டை தூக்கிக் கொண்டு செல்கிறார்கள். திமுகவை பொருத்தவரை பிள்ளையை கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டுவார்கள். ஆறுபடை வீடுகளில் முக்கிய வீடாக திருப்பரங்குன்றம் உள்ளது என்பது சரித்திரத்தை பார்த்தால் தெரியும்” என்றார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ഭക്ഷണം കഴിക്കുകയായിരുന്നു,പെട്ടെന്നൊരാൾ എൻ്റെ ഭർത്താവിന് നേരെ വെടിയുതിർത്തു: പഹൽ​ഗാം ഭീകരാക്രമണത്തിൽ ഞെട്ടൽ മാറാതെ ദൃക്സാക്ഷികൾ

ശ്രീനഗർ: ജമ്മുകശ്മീരിലെ പഹൽ​ഗാം ഭീകരാക്രമണത്തിൽ ഞെട്ടൽ വിട്ടുമാറാതെ ദൃക്സാക്ഷികൾ. ഭീകരർ പുരുഷന്മാരെയായിരുന്നു...

`அம்பேத்கர் சிலை நிறுவ அனுமதியுங்கள்; சாதி கொடுமைகளை கட்டுப்படுத்துக' – அரசுக்கு விசிக கோரிக்கை

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மறுசீராய்வு கலந்தாய்வுக் கூட்டத்தில் பெருகிவரும் சாதிய கொடுமைகளை...

Rahul Gandhi: పహల్గామ్‌ ఉగ్రదాడిని ఖండించిన రాహుల్‌గాంధీ

పహల్గామ్‌ ఉగ్రదాడిని లోక్‌సభ ప్రతిపక్ష నేత, కాంగ్రెస్ అగ్ర నాయకుడు రాహుల్‌గాంధీ...