19
November, 2026

A News 365Times Venture

19
Thursday
November, 2026

A News 365Times Venture

'தி.மு.க-விலிருந்தும் தூக்குங்க…' உத்தரவிட்ட முதல்வர் தரப்பு… வலைவிரிக்கும் மாண்புமிகுகள்!

Date:

‘த.வெ.க ஆட்சி கவிழும்’ என தி.மு.க தலைவர் மு.க ஸ்டாலின் தொடர்ச்சியாக பேசிவரும் நிலையில் ‘தி.மு.க-விலிருந்து ஆள் தூக்குங்க’ என உத்தரவிட்டிருக்கிறதாம் தமிழ்நாடு முதல்வர் விஜய் தரப்பு.

தலைமையிடமிருந்து கிரீன் சிக்னல் கிடைத்ததும் ‘நம்ம கட்சிக்கு வந்துவிடுங்கள்’ என பேச்சுவார்த்தையை தொடங்கியிருக்கிறார்களாம் மாண்புமிகுக்கள்!

ஸ்டாலின்

நம்மிடம் பேசிய விவரமறிந்தவர்கள் “த.வெ.க ஆட்சி அமைந்து 6 மாதங்கள் ஆகிவிட்டதால் சட்டமன்றத்தில் மீண்டும் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரும் சூழல் தமிழக அரசியலில் உருவாகியிருக்கிறது. இந்நிலையில் முன்னாள் அமைச்சர் கே.என் நேரு இல்லத் திருமண விழாவில் பேசிய தி.மு.க தலைவர் ஸ்டாலின், த.வெ.க ஆட்சி கவிழ்ந்து தி.மு.க ஆட்சி விரைவில் அமையும் எனப் பொருள்பட பேசியிருக்கிறார். த.வெ.க ஆட்சி கவிழ்ந்துவிடும் என தி.மு.க-வினர் பேசியது முதல்வர் தரப்புக்கு கடும் டென்ஷனை கொடுத்திருக்கிறதாம்” என்றனர்

இவ்விவகாரம் குறித்து த.வெ.க நிர்வாகிகளிடம் விசாரித்தோம் “தி.மு.க-வினரை தீயசக்தி என நாம் சொல்லிவருவதால் தி.மு.க-விலிருந்து த.வெ.க-வில் யாரையும் இதுவரை சேர்க்கவில்லை. ஆனால், எங்கள் ஆட்சியை கவிழ்க்க திட்டமிடும் தி.மு.க முன்னாள் அமைச்சர்களுக்கு பாடம் புகட்டும் முனைப்பில் தி.மு.க முன்னணி நிர்வாகிகளை தூக்குங்க என முதல்வர் மாண்புமிகுக்கள் சிலருக்கு உத்தரவிட்டிருக்கிறார்” என்றனர்

விஜய்
விஜய்

நம்மிடம் பேசிய மூத்த பத்திரிகையாளர்கள் சிலர் “தி.மு.க-வினரை தூக்குங்கள் என முதல்வர் சொல்லிவிட்டதாலேயே தி.மு.க-வினர் பலர் த.வெ.க-வுக்கு வந்துவிடுவார்கள் எனச் சொல்லிவிட முடியாது. நாளுக்கு நாள் த.வெ.க ஆட்சிமீதான மக்களின் ஆதரவு குறைந்துவருவதாலும் த.வெ.க-வுக்கு சென்றால் எந்தவித முக்கியத்துவம் இல்லை என்பதால் ஏற்கனவே இணைந்த அ.தி.மு.க-வினரே வெளியேறும் மூடில் இருக்கிறார்கள். இருந்தாலும் சீனியர் மாண்புமிகுக்கள் சிலர் சில முயற்சிகள் மேற்கொள்வது இயல்பு. யார் இணைகிறார்கள் எனப் பொறுத்திருந்து பார்ப்போம்” என்றனர்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ടീം ഹോർട്ടൺസ് ഉപയോക്താക്കളുടെ സ്വകാര്യ വിവരങ്ങൾ ഇസ്രഈലി കമ്പനിയുമായി പങ്കുവെക്കുന്നു: കനേഡിയൻ അഭിഭാഷക ഗ്രൂപ്പ്

ഒട്ടാവ: ഇസ്രഈലി സൈബർടെക് കമ്പനിയായ ഫോർട്ടറുമായി കനേഡിയൻ കോഫിഹൗസ് ചെയിൻ ടീം...

രാത്രിയുടെ മറവില്‍ ബുള്‍ഡോസര്‍ രാജ്; 300 വര്‍ഷം പഴക്കമുള്ള ദര്‍ഗ പൊളിച്ചുനീക്കി

ഭോപ്പാല്‍: മധ്യപ്രദേശിലെ ഖാണ്ഡ്വയില്‍ 300 വര്‍ഷം പഴക്കമുള്ള ദര്‍ഗ ജില്ലാ ഭരണകൂടം...

”கேக் வழங்குவது ஒரு திட்டமா? கேவலம் அது” – விளாத்திகுளம் எம்எல்ஏ மார்கண்டேயனின் பேச்சு

தூத்துக்குடி மாவட்டம்,  விளாத்திகுளத்தில் அத்தொகுதியின் தி.மு.க  எம்.எல்.ஏ., மார்க்கண்டேயன் செய்தியாளர்களைச் சந்தித்தார்....