19
November, 2026

A News 365Times Venture

19
Thursday
November, 2026

A News 365Times Venture

திருப்பரங்குன்றம்: "தர்ஹாவை வழிபடுவது எல்லா இஸ்லாமியர்களுக்கும் மரபு அல்ல" – டாக்டர் கிருஷ்ணசாமி

Date:

“ஒரு தர்ஹாவைக் காரணம் காட்டி லட்சக்கணக்கான இந்துக்களின் வழிபாட்டு உரிமையைப் பறிப்பதும், அவர்களின் உணர்வுகளை காயப்படுத்துவதும் நியாயமாகுமா?” என்று புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

திருப்பரங்குன்றம்

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத் தூணில் ’தீபம்’ ஏற்றுவதற்கு மதுரை உயர்நீதிமன்ற கிளை அளித்த தீர்ப்பை எதிர்த்து, கடந்த அரசு 144 தடை உத்தரவு பிறப்பித்தது.

திமுக அரசைப் போலவே, தவெக அரசும் மலையின் உச்சியில் உள்ள தீபத் தூணில் தீபம் ஏற்றுவதற்கு உச்சநீதிமன்றம் வரை சென்று முட்டுக்கட்டைப் போடுவது முறையானதல்ல. ஒரு தர்ஹாவைக் காரணம் காட்டி லட்சக்கணக்கான இந்துக்களின் வழிபாட்டு உரிமையைப் பறிப்பதும், அவர்களின் உணர்வுகளை காயப்படுத்துவதும் நியாயமாகுமா?

தர்ஹாவை வழிபடுவது எல்லா இஸ்லாமியர்களுக்கும் மரபு அல்ல. மரணம் அடைந்தவர்களையோ, உருவ வழிபாட்டு முறைகளையோ இஸ்லாம் ஏற்றுக் கொள்வதில்லை. மேலும், நாகூர் தர்ஹா உட்பட எந்தப் பகுதியிலும் உள்ள தர்ஹாக்களையும், அனைத்து இஸ்லாமியர்களும் அதைப் பொதுவானதாகக் கருதி வழிபடுவதில்லை. எனவே, திருப்பரங்குன்றத்தில் உள்ள தர்ஹாவை காரணம் காட்டி ஒட்டுமொத்த இந்துக்களின் வழிபாட்டு உரிமையை பறிக்க வேண்டிய அவசியமில்லை.

டாக்டர் கிருஷ்ணசாமி
டாக்டர் கிருஷ்ணசாமி

திருப்பரங்குன்றம் உச்சியில் இருக்கும் தீபத் தூணில் தீபம் ஏற்றுவது தொன்றுதொட்டு இருந்து வந்த வழக்கமாகும். ஆங்கிலேயர் காலத்தில் பிரித்தாளும் சூழ்ச்சியின் அடிப்படையில், இதற்குத் தடை விதிக்கப்பட்டிருக்கிறது. பெரும்பான்மை இந்து மக்களின் வழிபாட்டு உரிமையை மதித்து, உச்சித் தூணில் தீபம் ஏற்றுவதற்கு அனுமதிப்பதற்குப் பதிலாக, இஸ்லாமியர்களை வலுக்கட்டாயமாக உள்ளே இழுத்து, தீபம் ஏற்றுவது இந்து மக்கள் சார்ந்த விஷயமல்ல என தமிழக அரசு நீதிமன்றத்தில் வாதிடுவது மதப் பிணக்குகளை அரசே ஊக்கப்படுத்துவதற்குச் சமமாக அமையும்.

அரசின் நடவடிக்கைகள் சமூகங்களுக்கிடையே நல்லிணக்கத்தை உருவாக்க வேண்டும் தவிர, எந்த விதத்திலும் பிணக்குகளை உருவாக்கும் வகையில் அமைந்திடக்கூடாது.

திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத் தூணில் ’தீபம்’ ஏற்றுவது இந்து மதம் சார்ந்த விஷயம் மட்டுமல்ல; இஸ்லாமியர்களின் வழிப்பாட்டு உரிமையும் சம்பந்தப்பட்டது என உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வாதிட்டது தவறானதாகும். இது முழுக்கமுழுக்க இந்துக்களின் உணர்வும், உரிமையும் சம்பந்தப்பட்ட விஷயம்.

எனவே, தமிழ்நாடு அரசு தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டு திருப்பரங்குன்ற மலை உச்சி தீபத் தூணில் ’கார்த்திகை தீபம்’ ஏற்றுவதற்கு அரசு உறுதுணையாக இருக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

IPL 2027: పూర్తయిన రిటెన్షన్ ప్రక్రియ.. ఎవరి పర్సులో ఎంత..? టాప్‌లో LSG..

ఐపీఎల్ 2027 మినీ వేలానికి ముందు అన్ని ఫ్రాంచైజీలు తమ ఆటగాళ్ల...

സൗദി അറേബ്യയിലേക്കുള്ള വിമാന സര്‍വീസുകള്‍ റദ്ദാക്കി ഇന്‍ഡിഗോ; യാത്രക്കാരുടെയും ജീവനക്കാരുടെയും സുരക്ഷയ്ക്ക് മുന്‍ഗണന

ന്യൂദല്‍ഹി: സുരക്ഷാ സാഹചര്യം കണക്കിലെടുത്ത് സൗദി അറേബ്യയിലെ നാല് പ്രധാന നഗരങ്ങളിലേക്കുള്ള...

திருப்பரங்குன்றம்: அதிரடி வாதங்களும் ஆட்சியர் தரப்பின் தடுமாற்றமும்! – நீதிமன்றத்தில் என்ன நடந்தது?

மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பான வழக்கு...

OTR: కౌశిక్‌పై ఫిర్యాదు.. మూడు నెలల్లో నివేదిక ఇవ్వాలన్న స్పీకర్!

OTR: తెలంగాణ అసెంబ్లీలో ఎథిక్స్ కమిటీ ఏమైంది..? మొదట్లో వరుస సమావేశాలు...