20
August, 2026

A News 365Times Venture

20
Thursday
August, 2026

A News 365Times Venture

"அம்மா, உங்களையும் அப்பாவையும் ஒன்றாக பார்த்து 35 ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டது.!"- ராகுல் உருக்கம்

Date:

இந்திய தேசிய காங்கிரஸின் மூத்த தலைவர் சோனியா காந்தியின் வாழ்க்கைப் பயணத்தை விவரித்து உருவாகியுள்ள சுயசரிதைப் புத்தகம் ‘Belonging: A Journey of Love’.

இந்தப் புத்தகம் நவம்பர் மாதம் வெளியாக இருக்கிறது. இந்நிலையில் இந்தப் புத்தகம் தொடர்பாகவும், தனது தந்தையின் பிறந்தநாளை முன்னிட்டும் ராகுல் காந்தி உருக்கமாகப் பதிவிட்டிருக்கிறார்.

ராகுல் காந்தி குடும்பம்

அவர் வெளியிட்டிருக்கும் எக்ஸ் தளப்பதிவில், ” அம்மா, உங்களையும் அப்பாவையும் ஒன்றாக நான் கடைசியாகப் பார்த்து 35 ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டது.

அப்பா விட்டுச் சென்ற நாளிலிருந்து, அத்தனை சவால்களையும் நீங்கள் ஒருபோதும் தளராத துணிச்சலுடனும் கண்ணியத்துடனும் எதிர்கொண்டதை நான் பார்த்திருக்கிறேன்.

நீங்கள் என்னென்ன துயரங்களைச் சந்தித்தீர்கள் என்பதையும், அப்பாவுக்குப் பிறகு உங்கள் வாழ்க்கை எவ்வளவு கடினமாக இருந்தது என்பதையும் உண்மையாக அறிந்தவர்கள் பிரியங்காவும் நானும் மட்டுமே.

‘Belonging: A Journey of Love உங்கள் சுயசரிதை, உங்களை நேசிக்கும் கோடிக்கணக்கான மக்களால் படிக்கப்பட உள்ளது என்பதில் நான் மகிழ்ச்சியும் பெருமையும் அடைகிறேன்.

ராகுல் காந்தி
ராகுல் காந்தி

இன்று, அப்பாவின் பிறந்தநாள், அவர் புன்னகையுடன் தனது அழகான சோனியாவைப் பெருமிதத்துடன் பார்த்துக்கொண்டிருப்பதை என்னால் உணர முடிகிறது” என்று உருக்கமாகப் பதிவிட்டிருக்கிறார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ನಿಶಾನೆ ಆನೆಯಾಗಿ ಅಭಿಮನ್ಯು ಬಳಸಿಕೊಂಡು ಗೌರವಯುತ ಬೀಳ್ಕೊಡುಗೆ ನೀಡಿ- ಕೆ.ವಿ. ಮಲ್ಲೇಶ್ ಆಗ್ರಹ

ಮೈಸೂರು,ಆಗಸ್ಟ್,20,2026 (www.justkannada.in):  ವಯಸ್ಸಿನ ನೆಪವೊಡ್ಡಿ ಏಕಾಏಕಿ ಅಭಿಮನ್ಯು ಆನೆಯನ್ನು ದಸರಾ...

മോഹൻ ഭാഗവതിന്റെ യു.എസ് സന്ദർശനത്തിന് മുന്നോടിയായി ആർ.എസ്.എസ്സിനെതിരെ ഉപരോധ ആവശ്യം; USCIRF ഇടപെടൽ

ന്യൂദൽഹി: ആർ.എസ്.എസ് മേധാവി മോഹൻ ഭാഗവത് മൂന്ന് രാജ്യങ്ങളിലേക്കുള്ള സന്ദർശനം ആരംഭിക്കാനിരിക്കെ,...

ಕರ್ನಾಟಕ ಸೇರಿ ದಕ್ಷಿಣ ಭಾರತಕ್ಕೆ ನ್ಯಾಯಯುತ ಅನುದಾನ ನೀಡಿ: ಸಿಎಂ ಡಿ.ಕೆ ಶಿವಕುಮಾರ್ ಒತ್ತಾಯ

ಮಹಾಬಲಿಪುರಂ, ಆಗಸ್ಟ್, 20,2026 (www.justkannada.in): “ಕರ್ನಾಟಕ ಬಲಿಷ್ಠವಾದಾಗ, ದಕ್ಷಿಣ ಭಾರತ...