16
July, 2026

A News 365Times Venture

16
Thursday
July, 2026

A News 365Times Venture

பழனி முருகன் கோயில் நில மோசடி; பத்திரப்பதிவை ரத்து செய்து உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு!

Date:

பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி கோயில் செயல் அலுவலர் மதுரை அமர்வில் மனுவினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், `பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமிகள் மடத்திற்குச் சொந்தமானதாகக் கூறப்படும் இடத்தின் ஆவணப்பதிவிற்கு அனுமதி வழங்கி, கடந்த ஏப்ரல் மாதம் தனி நீதிபதி உத்தரவு பிறப்பித்திருந்தார். சம்பந்தப்பட்ட இடம் தொடர்பாக ஏற்கெனவே உரிமையியல் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. இந்த வழக்கில் கோயிலின் தக்காரை சேர்க்காமல் தனி நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார். 

மடத்தின் சொத்துகள் தொடர்பான நிர்வாக அதிகாரம் தக்காரிடமே உள்ளது. இந்நிலையில் தனி நீதிபதி உத்தரவிட்டது சட்டவிரோதமானது. எனவே பழனி தண்டாயுதபாணி சுவாமிகள் மட நிலத்தை பத்திரப்பதிவு செய்ய அனுமதி வழங்கி தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்’ எனக் கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் சி.வி.கார்த்திகேயன், சக்திவேல் அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது.

விசாரணைக்குப் பிறகு நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், “பழனி முருகன் கோயில் நிலம் தொடர்பாக தனிநபர் பதிவுசெய்த பட்டா ரத்து செய்யப்படுகிறது. இதில் சார் பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டணை சஸ்பெண்ட் செய்தது மட்டும் போதாது” எனத் தெரிவித்துள்ளனர். 

பழனி திருக்கோயில்

மேலும் இந்து சமய அறநிலையத்துறை நிலங்கள் பிரிவு கண்காணிப்பாளர் முருகானந்தம் அளித்த புகாரின் பேரில், சார் பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன், முருகதாஸ், வெள்ளதுரை மற்றும் சேதுபதி ஆகியோர் மீது போலி ஆவணங்களை உருவாக்குதல் (பிரிவு 336(3)), போலியாக உருவாக்கப்பட்ட ஆவணங்களை உண்மை என நம்பவைத்து பயன்படுத்துதல் (பிரிவு 340(2)), ஏமாற்றுதல் மற்றும் சொத்துகளை முறைகேடாக அபகரித்தல் (பிரிவு 318(4)), குற்றத்திற்கு உடந்தையாக இருத்தல் (பிரிவு 49) மற்றும் கூட்டுச் சதி (பிரிவு 61(2)) ஆகிய 5 கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

‘നീ മുസ്‌ലിം അല്ലേ’ എന്ന് ചോദിച്ച് കുത്തിയത് 15 തവണ; ഇന്ത്യന്‍ യുവാവിന് നേര്‍ക്ക് യു.എസില്‍ വംശീയ ആക്രമണം

വാഷിങ്ടണ്‍: യുഎസിലെ യൂട്ട സംസ്ഥാനത്ത് ഇന്ത്യക്കാരനായ യുവാവിന് നേര്‍ക്ക് വംശീയ ആക്രമണം....

தரையில் அமரும் பயணிகள்; மூக்கை பிடிக்கும் அளவுக்கு சுகாதார சீர்கேடு- பெரம்பலூர் பேருந்து நிலைய அவலம்

பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் மாணவர்கள், பணிக்குச் செல்வோர், ஊர்களுக்குச் செல்வோர்...

HMDA చీఫ్ ఇంజనీర్ పై ACB ఉక్కుపాదం.. 20 గంటల సోదాలు.. రూ.100 కోట్ల ఆస్తుల గుర్తింపు.!

HMDA Chief Engineer Asset: హైదరాబాద్ మెట్రోపాలిటన్ డెవలప్‌మెంట్ అథారిటీ (HMDA)...

ಚಿನ್ನಸ್ವಾಮಿ ಕ್ರೀಡಾಂಗಣ ದುರಂತ: ಐಪಿಎಸ್ ಅಧಿಕಾರಿ ಬಿ. ದಯಾನಂದ ವಿರುದ್ಧದ ಇಲಾಖಾ ತನಿಖೆ ಕೈಬಿಟ್ಟ ಸರ್ಕಾರ

ಬೆಂಗಳೂರು, ಜುಲೈ,14,2026 (www.justkannada.in): 2025ರ ಜೂನ್ 4ರಂದು ಬೆಂಗಳೂರಿನ ಚಿನ್ನಸ್ವಾಮಿ...