15
July, 2026

A News 365Times Venture

15
Wednesday
July, 2026

A News 365Times Venture

விஜய் அரசின் முதல் பட்ஜெட் விரைவில் தாக்கல் – ஒப்புதல் அளிக்க கூடுகிறது தமிழக அமைச்சரவை!

Date:

தமிழக அமைச்சரவைக் கூட்டம் வரும் ஜூலை 16-ஆம் தேதி காலை 10:30 மணிக்கு சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் விஜய் தலைமையில் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில் தமிழக அரசின் முதல் முழுமையான நிதிநிலை அறிக்கைக்கு (பட்ஜெட்) அமைச்சரவை ஒப்புதல் வழங்கும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழகத்தில் புதிய அரசு பொறுப்பேற்ற பிறகு தாக்கல் செய்யப்பட உள்ள முதல் பட்ஜெட் என்பதால், இந்த அமைச்சரவைக் கூட்டம் முக்கியத்துவம் பெற்றுள்ளது. மாநிலத்தின் நிதிநிலை, வருவாய் ஆதாரங்கள், புதிய நலத்திட்டங்கள், உள்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டங்கள், கல்வி, சுகாதாரம், வேளாண்மை உள்ளிட்ட துறைகளுக்கான ஒதுக்கீடுகள் குறித்து அமைச்சரவையில் விரிவான ஆலோசனை நடைபெற உள்ளதாகக் கூறப்படுகிறது.

தலைமைச் செயலகம்

மேலும், வரவிருக்கும் நிதிநிலை அறிக்கையில் இடம்பெற உள்ள முக்கிய அறிவிப்புகள் மற்றும் புதிய திட்டங்கள் குறித்தும் அமைச்சர்கள் கருத்துகளை தெரிவிக்க உள்ளனர். அதன் பின்னர் இறுதி செய்யப்பட்ட பட்ஜெட்டுக்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழக அரசின் முதல் பட்ஜெட்டை நிதித்துறை அதிகாரிகள் கடந்த சில வாரங்களாகத் தயாரித்து வருகின்றனர். பல்வேறு துறைகளிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கைகள் மற்றும் திட்ட முன்மொழிவுகளின் அடிப்படையில் பட்ஜெட் வடிவமைக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

முதலில் ஆகஸ்ட் முதல் வாரத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படலாம் எனக் கூறப்பட்ட நிலையில், தற்போது ஜூலை மாத இறுதி வாரத்திலேயே சட்டப்பேரவையில் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட வாய்ப்புள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

முதல்வர் விஜய்
முதல்வர் விஜய்

புதிய அரசின் முதல் பட்ஜெட் என்பதால், தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையிலான அறிவிப்புகள், வேலைவாய்ப்பு உருவாக்கம், தொழில் முதலீடுகளை ஈர்க்கும் திட்டங்கள், பெண்கள் மற்றும் இளைஞர்களுக்கான சிறப்பு திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இடம்பெறலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

இதனிடையே, ஜூலை 16-ஆம் தேதி நடைபெறவுள்ள அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகள் தமிழக அரசின் முதல் பட்ஜெட்டின் திசையை நிர்ணயிக்கும் முக்கிய ஆலோசனையாகப் பார்க்கப்படுகிறது.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

റബ്ബിമാരെയും ജൂതസംഘടനകളെയും അവഗണിച്ച് ഗസയിലെ വംശഹത്യയില്‍ ഫലസ്തീന്‍ ക്രൈസ്തവരെ കേള്‍ക്കാന്‍ വോട്ട് ചെയ്ത് ചര്‍ച്ച് ഓഫ് ഇംഗ്ലണ്ട്

ലണ്ടന്‍: ഗസയില്‍ ഇസ്രഈല്‍ നടത്തുന്നത് വംശഹത്യയാണെന്ന് ആരോപിക്കുന്ന ഫലസ്തീനിയന്‍ ക്രൈസ്തവരുടെ റിപ്പോര്‍ട്ട്...

"எனது சொந்தக்காரர் 100 கோடிக்கு நிலம் வாங்கினாரா?" – பத்திரப்பதிவு சர்ச்சைக்கு அமைச்சர் விளக்கம்!

பழனி அடிவாரத்தில் உள்ள தண்டபாணி சுவாமிகள் மடத்திற்குச் சொந்தமான 100...

ఏడు నెలల్లో మూడోసారి ధరల పెంపు.. Mahindra Thar కొత్త రేట్లు ఇవే..!

Mahindra Thar Prices: దేశీయ ఆటోమొబైల్ దిగ్గజం మహీంద్రా తన ప్రముఖ...

ದಸರಾದಲ್ಲಿ ಕಂಬಳ ಆಯೋಜನೆ ಬಗ್ಗೆ ಸಿಎಂ ತೀರ್ಮಾನ ಮಾಡ್ತಾರೆ- ಸಚಿವ ಯತೀಂದ್ರ ಸಿದ್ದರಾಮಯ್ಯ

ಕಲಬುರಗಿ,ಜುಲೈ,13,2026 (www.justkannada.in): ದಸರಾದಲ್ಲಿ ಕಂಬಳ ಆಯೋಜನೆ ಬಗ್ಗೆ ಸಿಎಂ ತೀರ್ಮಾನ...