22
April, 2026

A News 365Times Venture

22
Wednesday
April, 2026

A News 365Times Venture

“பெரிய தொகை தான்; ஆனாலும், விவசாய நலன் காக்க கட்டத் தயார்'' – ட்ரம்ப் வரி குறித்து பிரதமர் மோடி

Date:

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இந்தியா மீது 50 சதவிகித வரியை விதித்துள்ளார்.

இது இந்திய ஏற்றுமதிகளைப் பெரியளவில் பாதிக்கும். இப்படி பாதிக்கப்படும் துறைகளில் ஜவுளித்துறை, விவசாயத்துறை, எலக்ட்ரானிக்ஸ் துறைகளும் அடங்கும்.

மோடி என்ன சொல்கிறார்?

இந்த வரி குறித்து முதல்முறையாக மறைமுகமாக பிரதமர் மோடி நிகழ்ச்சி ஒன்றில் கருத்து தெரிவித்துள்ளார். அவர், “நமக்கு விவசாயிகளின் நலனே மிக முக்கியமானது.

விவசாயிகள், மீனவர்கள் மற்றும் பால் பொருள் உற்பத்தியாளர்களின் நலனை இந்தியா சமரசம் செய்யாது.

அதற்காக நாம் பெரிய தொகை செலுத்த வேண்டும் என்பது எனக்குத் தெரியும். ஆனாலும், அதற்கு நான் தயாராக இருக்கிறேன்… இந்தியா தயாராக இருக்கிறது” என்று பேசியுள்ளார்.

மோடி – ட்ரம்ப்

ட்ரம்ப் வரிக்கு காரணம் என்ன?

ரஷ்யாவில் இருந்து இந்தியா எண்ணெய் இறக்குமதி செய்வதாக அமெரிக்கா தனது வரியை இரட்டிப்பாக்கி உள்ளது.

மேலும், அபராத தொகையும் இத்துடன் விதிக்க உள்ளது. ஆனால், அந்தத் தொகை எவ்வளவு என்று இன்னும் சொல்லவில்லை.

இந்த நிலையில், மோடி விவசாய நலன் காக்க எவ்வளவு தொகை வேண்டுமானாலும் கட்டத் தயார் என்று கூறியிருக்கிறார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ഇസ്രഈൽ മനുഷ്യാവകാശങ്ങൾ ലംഘിച്ചു, യൂറോപ്യൻ യൂണിയനുമായുള്ള കരാർ മരവിപ്പിക്കണം: അയർലന്റ്

ഡബ്ലിൻ: മനുഷ്യാവകാശങ്ങൾ നഗ്നമായി ലംഘിക്കുന്ന ഇസ്രഈലിനെതിരെ യൂറോപ്യൻ യൂണിയൻ നടപടിയെടുക്കണമെന്ന് അയർലൻഡ്...

`கோவை தெற்கு தொகுதி தேர்தல் ரத்தா?' – மாவட்ட ஆட்சியர் விளக்கம்!

கோவை தெற்கு தொகுதியில் தி.மு.க. சார்பில் செந்தில் பாலாஜியும், அ.தி.மு.க. சார்பில்...

OTR: సీఎం ప్రెస్ మీట్ లో NDSA ఛైర్మన్ ఉండటంపై బీజేపీ అభ్యంతరం

OTR: NDSA ఛైర్మన్‌ విషయంలో ఏదో తేడా కొడుతోందా? ఆయన...

ಮೈಸೂರು: ರೈತಮುಖಂಡರಿಂದ ಪ್ರತಿಭಟನೆ: ಡಿಸಿ ಕಚೇರಿಗೆ ಮುತ್ತಿಗೆಗೆ ಯತ್ನ

ಮೈಸೂರು,ಏಪ್ರಿಲ್,21,2026 (www.justkannada.in): ರಾಜ್ಯ ಸರ್ಕಾರ ನಿಗದಿ ಮಾಡಿರುವ ಹೆಚ್ಚುವರಿ ಹಣ...