24
September, 2026

A News 365Times Venture

24
Thursday
September, 2026

A News 365Times Venture

`யார் இந்த தியாகி… திமுக-வின் புதிய பவர் சென்டர் ரத்தீஷா?"- கேள்விகள் எழுப்பும் அதிமுக

Date:

டாஸ்மாக்கில் ரூ. 1,000 கோடி அளவில் ஊழல் நடந்திருப்பதாக அமலாக்கத்துறை தாக்கல் செய்திருக்கும் வழக்கின் விசாரணை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் நிலையில், டாஸ்மாக் நிறுவனத்தின் மேலாண் இயக்குநர் (MD) விசாகன் ஐ.ஏ.எஸ் வீட்டுக்குள் இன்று காலையில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை நடத்தியது.

விசாகன் ஐ.ஏ.எஸ்- ஐ அழைத்துச் செல்லும் அமலாக்கத்துறை

அதோடு, விசாகனிடம் மேற்கொண்டு விசாரணை நடத்துவதற்காகத் தங்களுடைய அலுவலகத்திற்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் அவரை அழைத்துச் சென்றிருக்கின்றனர்.

இந்த நிலையில், அதிமுக தனது எக்ஸ் தளப் பக்கத்தில், “டாஸ்மாக் MD வீட்டின் அருகே கிழிந்த நிலையில் டாஸ்மாக் நிறுவனம் தொடர்பாக முக்கிய விவரங்கள் குறித்த வாட்சப் Chat Screenshots கிடைத்ததாகவும், இவை துணை முதல்வர் உதயநிதியின் நண்பர் ரத்தீஷிடம் பேசியது எனவும் செய்திகள் வருகின்றன.

டாஸ்மாக் நிறுவனத்தின் MD-க்கு Directives கொடுக்க இந்த ரத்தீஷ் யார் டாஸ்மாக் ஏலம் வெளிப்படையாக நடந்தால் திமுக நிர்வாகிகளுக்குப் பாதிப்பு என்று அதன் MD-யிடம் ரத்தீஷ் கூறுவது, யாருக்கான குரலாக அவர் பேசுகிறார்?

உதயநிதியுடன் டாஸ்மாக் MD எடுத்த புகைப்படத்தை அவருக்கே அனுப்பும் அளவிற்கு அதிகாரம் படைத்தவரா இவர்? டாஸ்மாக்கில் வாங்க வேண்டிய மதுபானங்கள் பட்டியலை அதன் MD-க்கு அனுப்பும் அளவிற்கு அதிகாரம் படைத்த இந்த ரத்தீஷ் தான் திமுகவின் புதிய Power Center-ஆ?

Logical-ஆகப் பார்த்தால், ரத்தீஷ் எனும் தனிநபரின் மெசேஜுக்கு Reply பண்ண வேண்டிய அவசியம் டாஸ்மாக் MD-க்கு துளியும் இல்லை.

இவர் துணை முதல்வருக்கு இணை முதல்வராக இருப்பதனாலோ என்னவோ, அனைத்து அதிகாரிகளும் பணிந்தார்களா? ரத்தீஷை நெருங்கும் ED-யின் விசாரணை வளையம்…

So, Sketch உதயநிதிக்கா? #யார்_இந்த_தியாகி? எனவும், இந்த தியாகியின் பின்புலத்தில் உள்ள அந்த “சார்” யார்? எனவும் கேள்விகள் எழுகின்றன.

கேள்விகளுக்கான பதிலும், அதற்கான தண்டனைகளும் விரைவில் கிடைக்குமென நம்புவோம்.” என்று பதிவிட்டிருக்கிறது.



Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ഓസ്‌ട്രേലിയന്‍ സര്‍ക്കാര്‍ ഹെല്‍ത്ത് കെയര്‍ ഡാറ്റാബേസ് ഹാക്ക് ചെയ്ത് ഓപ്പണ്‍ എ.ഐ ഏജന്റ്: അറിഞ്ഞത് മാസങ്ങള്‍ക്കുശേഷം

ന്യൂയോര്‍ക്ക്: ഓസ്‌ട്രേലിയയുടെ ആരോഗ്യവകുപ്പിന്റെ വെബ്‌സൈറ്റ് ഹാക്ക് ചെയ്ത് സ്വകാര്യഡാറ്റയിലേക്ക് നുഴഞ്ഞുകയറി ഓപ്പണ്‍...

தேர்தல் ஆணையம்: “இதனால்தான் இந்த விவகாரம் சர்ச்சையாகியுள்ளது..!" – முன்னாள் ஆணையர் சொல்வதென்ன?

தேர்தல் ஆணையத்தில் பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவோ அல்லது ஒருமித்த கருத்தோ இன்றி...

AP Liquor Shops: లిక్కర్ షాపులపై కీలక నిర్ణయం.. ఇక రెన్యువల్ గడువు పొడిగింపు లేదు..!

AP Liquor Shops: ఆంధ్రప్రదేశ్‌లో 2026–27 ఎక్సైజ్ సంవత్సరానికి ఏ4 మద్యం...

കുടുംബ കലഹങ്ങള്‍ വേണ്ട; എ.ഐ ക്യാമറ നിയമ ലംഘന നോട്ടീസുകളില്‍ ചിത്രങ്ങള്‍ ഒഴിവാക്കാന്‍ എം.വി.ഡി

തിരുവനന്തപുരം: മോട്ടോര്‍ വാഹന വകുപ്പിന്റെ എ.ഐ ക്യാമറകള്‍ വഴിയുള്ള നിയമലംഘനങ്ങള്‍ പരിശോധിക്കുന്നതിനുള്ള...