கார்த்திகை தீபத் திருநாளில் திருப்பரங்குன்றம் மலை தூணில் கார்த்திகை தீபம் ஏற்றவேண்டும் என உச்ச நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்தது. அறங்காவல் குழுவினரின் ஒத்துழைப்பு இல்லை என்றக் காரணத்தால், வழக்கமாக தீபமேற்றும் இடத்தில் தீபம் ஏற்றப்பட்டது. அதைத் தொடர்ந்து, தொடரப்பட்ட அவமதிப்பு வழக்கில் ஓய்வுபெற்ற நீதிபதிகள் வைத்தியநாதன், வி. பார்த்திபன் ஆகியோரது நேரடி மேற்பார்வையில் இன்று தீபமேற்ற வேண்டும் என உத்தரவிடப்பட்டது.
அதனடிப்படையில், இன்று மாலை 5.00 மணியளவில் திருப்பரங்குன்றம் மலை உச்சியில் அமைந்துள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றப்பட பரபரப்பாக பணிகள் மேற்கொள்ளப்பட்டது. தற்காலிக மேடை அமைத்து, களிமண் பயன்படுத்தி அதன் மீது தீபமேற்றும் சிறியளவிளான கொப்பரை அமைக்கப்பட்டது. மலை மீது 50 பக்தர்களை மட்டுமே சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் அனுமதித்த நிலையில், பா.ஜ.க-வினர் திரளாக கூடியிருக்கும் நிலையில், மலை உச்சியில் தீபம் ஏற்றப்பட்டது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb





