25
November, 2026

A News 365Times Venture

25
Wednesday
November, 2026

A News 365Times Venture

கேரளம்: ​பள்ளி வகுப்பறையில் துப்பாக்கிச் சூடு; 9-ம் வகுப்பு மாணவன் காயம்; நடந்தது என்ன?

Date:

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் பட்டாம்பி அருகே உள்ள பள்ளிப்புரம் பரதூர் மேல்நிலைப் பள்ளியில் 9-ம் வகுப்பு படிக்கும் மாணவனின் இறந்துபோன தாத்தா முன்பு பயன்படுத்தி வந்த உரிமம் இல்லாத பழைய ரிவால்வர் வகை துப்பாக்கியை, வீட்டாருக்குத் தெரியாமல் நேற்று பள்ளிக்கு எடுத்து வந்துள்ளான்.

வகுப்பறையில் ஆசிரியர்கள் இல்லாத நேரத்தில், தனது நண்பர்களிடம் அந்தத் துப்பாக்கியைக் காட்டிக்கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக அந்தத் துப்பாக்கியிலிருந்து மொத்தம் மூன்று முறை குண்டுகள் வெடித்துள்ளன. ​முதல் குண்டு வகுப்பறைத் தரையிலும்,​ இரண்டாவது குண்டு அருகிலிருந்த மாணவனின் உடலை உரசியபடியும் சென்றது. ​

மூன்றாவதாக வெடித்த குண்டு முஹம்மது ஷெபீக் என்ற மாணவனின் உடலில் பாய்ந்து காயத்தை ஏற்படுத்தியது. ​துப்பாக்கிச் சத்தம் கேட்டு விரைந்து வந்த ஆசிரியர்கள், மாணவனிடமிருந்த துப்பாக்கியைப் பறிமுதல் செய்தனர்.

தோள்பட்டைக்கும் கைக்கும் இடையே குண்டு பாய்ந்த மாணவன் கோட்டக்கல்லில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவத்தின் போது மாணவர்களுக்கு இடையே எந்தவித வாக்குவாதமோ, மோதலோ நடைபெறவில்லை என ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.

காயமடைந்த மாணவர்

துப்பாக்கியைக் கொண்டு வந்த மாணவனிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பள்ளிக்கு துப்பாக்கி கொண்டு வந்ததன் நோக்கம் என்ன, இந்த ஆயுதம் எங்கிருந்து கிடைத்தது, இதற்கு முன்பும் பள்ளிக்குக் கொண்டு வரப்பட்டதா என்ற கோணங்களில் விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது.

ஷொர்ணூர் டி.எஸ்.பி. வினு தலைமையிலான காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்தனர். துப்பாக்கியில் மொத்தம் எத்தனை தோட்டாக்கள் இருந்தன என்பது விரிவான ஆய்வுக்குப் பிறகே தெரியவரும் என டி.எஸ்.பி தெரிவித்துள்ளார். இதனிடையே, இச்சம்பவம் குறித்து கேரள கல்வி அமைச்சர் அவசர அறிக்கை வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.

பறிமுதல் செய்யப்பட்ட துப்பாக்கி

இதற்கிடையே துபாயிலிருந்து நேற்று கொச்சி நெடும்பாசேரி சர்வதேச விமான நிலையத்திற்கு வந்திறங்கிய இரண்டு பயணிகளின் உடைமைகளில் இருந்து 11 ஏர் ரைபிள் துப்பாக்கிகளைச் சுங்கத்துறையினர் பறிமுதல் செய்தனர். ​பாலக்காட்டைச் சேர்ந்த ரமேஷ் மச்சாட், சிஜோய் சசி ஆகியோரிடமிருந்து பல்வேறு மாடல்களைக் கொண்ட துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

அதிகாரிகளின் சோதனையிலிருந்து தப்பிக்க, துப்பாக்கிகளின் பாகங்கள் தனித்தனியாகக் கழற்றி வைக்கப்பட்ட நிலையில் கடத்தி வரப்பட்டுள்ளன.

​இவற்றை சட்டவிரோதமாகக் கடத்த முயன்றது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இத்தனை துப்பாக்கிகளை ஒரே நேரத்தில் கொண்டு வந்ததன் பின்னணியில் வேறு ஏதேனும் சதித் திட்டங்கள் உள்ளனவா என்பது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும், இந்தத் துப்பாக்கிகளுக்கான உரிய ஆவணங்களைச் சமர்ப்பிக்குமாறு அவர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ഇറാനെതിരായ യുദ്ധം ഉടൻ അവസാനിപ്പിക്കണമെന്ന് ഭൂരിപക്ഷം അമേരിക്കൻ വോട്ടർമാരും: സർവേ ഫലം പുറത്ത്

വാഷിങ്ടൺ: ഇറാനെതിരായ അമേരിക്ക-ഇസ്രഈൽ സൈനിക നടപടി, അനുകൂലമായ നിബന്ധനകൾ ലഭിച്ചില്ലെങ്കിലും ഉടൻ...

Vaibhav Sooryavanshi: రికార్డ్స్ గురించే ఆలోచించలేదు.. అలా ఉండడంతో స్వేచ్ఛగా ఆడేసా..!

Vaibhav Sooryavanshi: భారత యువ సంచలనం వైభవ్ సూర్యవంశీ తన బ్యాటింగ్‌...

യൂത്ത് കോണ്‍ഗ്രസ് അധ്യക്ഷനായി ഉമ്മന്‍ചാണ്ടി പറഞ്ഞത് തന്റെ പേര്: ഉണ്ണിത്താന്റെ ആരോപണം ശരിവെച്ച് കെ.എസ് അഖില്‍

തിരുവനന്തപുരം: ആരോഗ്യം മോശമായിരുന്ന അവസ്ഥയില്‍ ഉമ്മന്‍ ചാണ്ടി യൂത്ത് കോണ്‍ഗ്രസ് സംസ്ഥാന...

திருப்பரங்குன்றம்: நெல்லையிலிருந்து மதுரை புறப்பட்ட நயினார் நாகேந்திரன் சாலையில் அதிரடி கைது |Photos

திருப்பரங்குன்றம் தூண்: "மதுரை IAS அதிகாரி நீதிமன்ற அவமதிப்பு வழக்கை எதிர்கொள்வார்...