17
November, 2026

A News 365Times Venture

17
Tuesday
November, 2026

A News 365Times Venture

“காவல் நிலையத்தில் ரீல்ஸ் எடுக்க எந்த சட்டம் அனுமதி அளிக்கிறது?" – அதிமுக எம்பி இன்பதுரை கேள்வி

Date:

கூட்டுறவுத்துறை அமைச்சர் காந்திராஜ் தனது அரக்கோணம் தொகுதிக்கு உட்பட்ட தக்கோலம் காவல் நிலையத்தில், நள்ளிரவில் ஆய்வுக்கு சென்று பெண் காவலரிடம் மிரட்டும் தொனியில் பேசும் வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், காவல் நிலையத்தில் அமர்ந்து காவலர்களை நிற்கவைத்து அதிகாரம் செலுத்துவது எத்தகைய நிர்வாக நெறிமுறை என அதிமுக எம்.பி இன்பதுரை கேள்வி எழுப்பியுள்ளார்.

அதிமுக எம்.பி இன்பதுரை

இது தொடர்பாக அவர் வெளியிட்டு இருக்கும் எக்ஸ் பதிவில்,

“இந்த போலீஸ் ஆய்வு வீடியோ போலியா? உண்மையா? உள்துறை முதலமைச்சர் வசம் இருக்கும்போது, கூட்டுறவுத்துறைக்கு பொறுப்பான அமைச்சர் காந்திராஜ் காவல் நிலையத்திற்குள் நுழைந்து, அதுவும் நள்ளிரவில் பெண் காவலர்களை அழைத்து நாடக ஆய்வு நடத்த வேண்டிய அவசியம் என்ன?

குறிப்பாக, அரக்கோணம் நகர காவல் நிலையத்தில் அமைச்சர் மீது Cr.No.479/2024, Cr.No.140/2026 என இரண்டு குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பதாகக் கூறப்படும் நிலையில், காவல் நிலையத்தில் அமர்ந்து காவலர்களை நிற்கவைத்து அதிகாரம் செலுத்துவது எத்தகைய நிர்வாக நெறிமுறை?

தமிழ்நாடு காவல்துறை
தமிழ்நாடு காவல்துறை

ஆய்வு என்ற பெயரில் காவல் நிலையத்தில் ரீல்ஸ் எடுக்க எந்தச் சட்டம் அனுமதி அளிக்கிறது? Prakash Singh v. Union of India (2006) 8 SCC 1 வழக்கில் உச்சநீதிமன்றம் வலியுறுத்திய காவல்துறையின் சுதந்திரமும், அரசியல் தலையீடற்ற செயல்பாடும், முதல்வர் விஜய் அரசின் ஆட்சியில் தமிழ்நாட்டில் கேள்விக்குறியாக்கப்படுகிறதா? ” என பதிவிட்டுள்ளார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

പൗരന്മാരുടെ സ്വകാര്യത വിറ്റു; വ്യാജ ഇ-ചലാന്‍ തട്ടിപ്പുകള്‍ക്ക് വഴിതുറന്നത് കേന്ദ്രത്തിന്റെ ഡാറ്റാ ഷെയറിങ് നയം

  ന്യൂദല്‍ഹി: ഈയടുത്തായി വാര്‍ത്തകളില്‍ നിറഞ്ഞ ഇ-ചലാന്‍ തട്ടിപ്പില്‍ കേന്ദ്രസര്‍ക്കാരിന്റെ പങ്ക്...

എ.ഐ സപ്ലൈ ചെയിന്‍ കരാറില്‍ ഇന്ത്യ ഒപ്പുവെച്ചു; യു.എസ്, യു.എ.ഇ, ഇസ്രഈല്‍ അടക്കമുള്ളവര്‍ പങ്കാളികള്‍

ന്യൂദല്‍ഹി: ആര്‍ട്ടിഫിഷ്യല്‍ ഇന്റലിജന്‍സിനായുള്ള അടിസ്ഥാന സൗകര്യ വിതരണ ശൃംഖലകളുടെ കാര്യത്തില്‍ സഹകരണം...

பெண்களைப் பாதுகாக்க வேண்டியவர்களே பாலியல் தொல்லை தந்தால்?

கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதாரப் பங்களிப்பு என பெண்கள் இன்று பல்வேறு துறைகளிலும்...