14
November, 2026

A News 365Times Venture

14
Saturday
November, 2026

A News 365Times Venture

"ஒரே நாளில் ஆந்திராவில் ரூ.5.35 லட்சம் கோடி மதிப்பிலான MoU; தவறவிட்ட தமிழ்நாடு?" – TRB ராஜா

Date:

ஒரே நாளில், ஆந்திரப் பிரதேசத்தின் ரூ.5.35 லட்சம் கோடி முதலீட்டிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்களைச் சுட்டிக்காட்டி தமிழ்நாடு தொழிற்துறையின் முன்னாள் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

“ஒரே நாளில் ₹5.35 லட்சம் கோடி முதலீட்டுப் புரிந்துணர்வு ஒப்பந்தங்களை ஆந்திரப் பிரதேசம் ஈர்த்துள்ளது!

இவற்றில் பெரும்பாலானவை தமிழ்நாடு போட்டியிட்டு வென்றிருக்க வேண்டிய வாய்ப்புகள்!

நேற்று, ஆந்திரப் பிரதேசம் அறிவித்த முதலீட்டு உறுதிமொழிகள்:

ரிலையன்ஸ் – ₹2.73 லட்சம் கோடி

கிரீன்கோ – ₹45,000 கோடி

கிளீன்மேக்ஸ் – ₹41,000 கோடி

TRB ராஜா பதிவு

மேகா – ₹36,000 கோடி

கியா – ₹18,878 கோடி

ராஷ்மி – ₹18,500 கோடி

ஜே.எஸ்.டபிள்யூ – ₹15,000 கோடி

கெயில் – ₹13,500 கோடி

மற்றும் பல நிறுவனங்கள்.

த.வெ.க அரசு பொறுப்பேற்று ஆறு மாதங்கள் ஆகிவிட்ட நிலையில், முந்தைய திமுக அரசால் அடிக்கல் நாட்டப்பட்ட திட்டங்களைத் தாண்டிப் புதிய முதலீடுகளுக்கான திட்டங்கள் எங்கே?

வருத்தத்திற்குரிய விஷயம் என்னவென்றால், எந்தக் கூச்சமும் இல்லாமல் அந்தப் பழைய திட்டங்களையும் தங்களது சாதனையாக இந்த அரசு சொந்தம் கொண்டாடுகிறது.

த.வெ.க அரசு தனது எம்.எல்.ஏ-க்களைத் தக்கவைத்துக்கொள்ள 5 நட்சத்திர ஹோட்டல்களில் தடுப்பு வேலிகள் அமைப்பதில் மும்முரமாக இருக்கும் வேளையில், ஆந்திரப் பிரதேசமோ முதலீட்டாளர்களை ஈர்க்கும் சூழலை உருவாக்குவதில் தீவிரமாக உள்ளது!

முந்தைய அரசின் வேகத்தை அப்படியே தொடர்வது என்பது ஒரு தொழில் கொள்கை ஆகாது! முதல்வர் அவர்களே, தமிழ்நாட்டின் கண்முன்னே நம் மாநிலத்திற்கு வரவேண்டிய எதிர்காலத் தொழிற்சாலைகளுக்கான பேச்சுவார்த்தைகளை இன்று அண்டை மாநிலங்கள் நடத்திக்கொண்டிருக்கின்றன.

முதலீடுகளை ஈர்ப்பதில் கவனம் செலுத்துங்கள்! தமிழ்நாட்டின் இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில் கவனம் செலுத்துங்கள்!

எம்.எல்.ஏ-க்களுடன் பேரம் பேசுவதை நிறுத்துங்கள்!

முதலீட்டாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதைத் தொடங்குங்கள்!”

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ഫ്രഞ്ച് ഇടതുപക്ഷ നേതാവിന് ഇസ്രഈലിന്റെ പ്രവേശന വിലക്ക്; അപലപിച്ച് ഫ്രഞ്ച് വിദേശകാര്യ മന്ത്രി

പാരീസ്: ഫ്രഞ്ച് ഇടതുപക്ഷ പാര്‍ട്ടിയായ ഫ്രാന്‍സ് അണ്‍ബൗണ്ടിന്റെ നേതാവ് ജീന്‍-ലൂക്ക് മെലന്‍ഷോണിന്...

Civils Candidates: సివిల్స్ ఇంటర్వ్యూ అభ్యర్థులకు రూ.లక్ష ప్రోత్సాహకం.. డిప్యూటీ సీఎం కీలక ప్రకటన..

తెలంగాణ యువత సివిల్ సర్వీసెస్‌లో అత్యధిక సంఖ్యలో విజయం సాధించాలనే లక్ష్యంతో...

വായുമലിനീകരണം നമ്മളെ സൂര്യ രശ്മികളില്‍ നിന്ന് രക്ഷിക്കുന്നു: ന്യായീകരണവുമായി ഗോദി മീഡിയ

ന്യൂദല്‍ഹി: ദല്‍ഹിയിലും സമീപ സംസ്ഥാനങ്ങളിലും വായു മലിനീകരണം വര്‍ധിക്കുന്നതിനെ ന്യായീകരിക്കുന്ന ഗോദി...