10
November, 2026

A News 365Times Venture

10
Tuesday
November, 2026

A News 365Times Venture

"தீபாவளியன்று பட்டாசு சத்தத்திற்கு இணையாக கொலை சத்தம் கேட்டிருக்கிறது"- தவெகவுக்கு எடப்பாடி கண்டனம்

Date:

நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை நேற்று கொண்டாடப்பட்ட நிலையில், தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் ஒரே நாளில் 11 பேர் அடுத்தடுத்து படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது.

இந்தக் கொலை சம்பவங்களுக்கு எதிராக அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் தனது கண்டனத்தைத் தெரிவித்திருக்கிறார். அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், “தீபாவளி நாளான்று பட்டாசு சத்தத்திற்கு இணையாக ​தேனி, கடலூர், திருச்சி, சென்னை, சிவகங்கை, திருவள்ளூர் என தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கொலைச் சத்தமும் கேட்டிருக்கிறது தமிழ்நாட்டில்!

க்ரைம்

​தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு அடியோடு சீரழிந்து, மாநிலம் முழுவதும் ரத்தக் களறியாக மாறியிருப்பது நெஞ்சை பதற வைக்கிறது.

​”ரோட்டில் நின்றால் கொலை… தட்டிக்கேட்டால் படுகொலை!” என்னும் அளவிற்கு ரவுடிகளும் குற்றவாளிகளும் தெருக்களில் அச்சமின்றி நகர்வலம் வரும் அளவிற்கு நாட்டின் சட்டம் ஒழுங்கைத் தள்ளியிருக்கிறது தவெக அரசு.

இதில் உச்சகட்ட கொடுமையாக, தேனியில் பொதுமக்களைக் காக்க வேண்டிய காவல்துறை சிறப்பு உதவி ஆய்வாளர் செந்தில்குமார் அவர்களையே ரவுடிகள் அடித்துக் கொலை செய்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது.

​”காக்கிச் சட்டைக்கே இங்கே பாதுகாப்பில்லை என்றால், சாமானிய மக்களுக்கு எங்கே இருக்கும் பாதுகாப்பு?”

​அஇஅதிமுக ஆட்சியில் கம்பீரமாக நிமிர்ந்து நின்ற தமிழ்நாடு காவல்துறை, இன்றைக்கு ஆளத் தெரியாத ஆச்சரியக்குறி தவெக அரசால் கலகலத்துப் போய் நிற்பது மிகுந்த வேதனைக்குரியது.

​அரசியல் என்பது சினிமா செட் அல்ல; முதலமைச்சர் நாற்காலி என்பது ‘பஞ்ச் டயலாக்’ பேசுவதற்கான மேடையும் அல்ல என்பதை இந்த ‘ரீல்’ முதல்வர்

விஜய் அவர்கள் இப்போது புரிந்து கொள்வார்?

படுகொலை செய்யப்பட்ட சிறப்பு உதவி ஆய்வாளர் செந்தில்குமார் அவர்களின் குடும்பத்திற்கு தற்போது அறிவிக்கப்பட்டுள்ள 40 லட்ச ரூபாய் நிதி உதவி என்பது போதுமானது அல்ல.

விஜய்
விஜய்

அஇஅதிமுக ஆளுங்கட்சியாக இருந்தபோதும் சரி, எதிர்கட்சியாக இருந்தபோதும் சரி, Line Of Duty-ன் போது உயிரிழக்கும் காவலர்களுக்கு 1 கோடி ரூபாய் வழங்கப்படுவதை உறுதி செய்துள்ளோம். இந்த அரசும், கடந்த 14.10.2026 அன்று வெளியிட்டுள்ள அரசாணையில், பணியின்போது துணிச்சலுடன் உயிர்நீத்த காவலர்களின் குடும்பத்திற்கு 1 கோடி ரூபாய் நிதி உதவி வழங்கப்படும் என கூறியுள்ளது.

தான் போட்ட அரசாணை கூட இந்த ஆச்சரியக்குறி அரசுக்கு நியாபகம் இல்லை என்பதுதான் இங்கு ஆச்சரியமாய் இருக்கிறது.

அந்த வகையில், திரு. செந்தில்குமார் குடும்பத்தினருக்கும் ரூ. 1 கோடி நிவாரணம் வழங்கி, குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க வேண்டும் என இந்த அரசைக் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்.

ஒரே நாளில் 11 கொடூரக் கொலைகளை செய்து தமிழகத்தை பதற வைத்த அனைத்துக் குற்றவாளிகள் மீதும் மிகக்கடுமையான சட்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும் இந்த பொய்க்கால் குதிரை அரசை வலியுறுத்துகிறேன்” என்று தெரிவித்திருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

പിടിച്ചെടുത്തത് 44,250 വെടിയുണ്ടകള്‍: ‘ആര്‍.എസ്.എസും ബി.ജെ.പിയും രാജ്യത്തിന് ചില ഉത്തരങ്ങള്‍ നല്‍കേണ്ടതുണ്ടെന്ന് പ്രിയങ്ക് ഖാര്‍ഗെ

ബെംഗളൂരു: ബിഹാറിലും ഹരിയാനയിലുമായി 44,250 വെടിയുണ്ടകള്‍ കണ്ടെത്തിയ സംഭവത്തിലെ പ്രതികള്‍ക്ക് ആര്‍.എസ്.എസുമായുള്ള...

கோவை: பெரியார் நூலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை; பின்னணி என்ன?

கோவை பெரியார் நூலகத்திற்கான புத்தகங்கள் கொள்முதல் செய்ததில் கோடிக்கணக்கான ரூபாய் ஊழல்...

Chairman’s Desk: భక్తి విప్లవానికి కొత్త బాటలు..! జాతీయ స్థాయిలో ఎందుకు చర్చనీయాంశం అయింది..?

Chairman’s Desk: ఇళ్లలో రెండు దీపాలు వెలిగించడం సహజం. ఆలయాల్లో మరికొన్ని...