7
November, 2026

A News 365Times Venture

7
Saturday
November, 2026

A News 365Times Venture

'மக்கள் என் பக்கம்; 234 தொகுதிகளுக்கும் ஒரு திட்டம்' – தனுஷ் சூசகம்!

Date:

சென்னையில் தனியார் கல்லூரி ஒன்றில் நடிகர் தனுஷின் ‘ஓம்’ பட ஆடியோ வெளியீட்டு விழா நடந்திருந்தது. இதில் பேசிய தனுஷ் தன்னை யாரும் பின்னாலிருந்து இயக்கவில்லை எனப் பேசியிருக்கிறார்.

தனுஷ்

கடந்த சில மாதங்களாக நடிகர் தனுஷ் தன்னுடைய ரசிகர் மன்ற கட்டமைப்பை வலுப்படுத்தும் வேலையில் இறங்கியிருக்கிறார். திருவள்ளூரில் பிரமாண்டமாக நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவை நடத்தியிருந்தார்.

கோவையில் ரசிகர் மன்றத்தை நற்பணி இயக்கமாக மாற்றியிருந்தார். சில நாட்களுக்கு முன்பு சென்னையில் மகளிரணி நிர்வாகிகள் கூட்டத்தையும் நடத்தியிருந்தார். இதைத்தொடர்ந்து தனுஷ் அரசியலுக்கு வருகிறாரா எனும் பேச்சு எழுந்தது. தனுஷூடன் சில கட்சியினர் பேசி வருவதாகவும் தகவல் வெளியாகியிருந்தது. நேற்று நடந்திருந்த ஓம் படத்தின் ஆடியோ விழாவில் தனுஷ் இது குறித்து மறைமுகமாக பேசியிருந்தார்.

தனுஷ்

அவர் பேசியதாவது, ‘என்னைப் பார்த்து இவரை அவங்க இயக்குறாங்க, இவங்க இயக்குறாங்க. இவர் பின்னாடி அவங்க இருக்காங்க, இவங்க இருக்காங்கனு சொல்றாங்க. அப்படியெல்லாம் யாரும் இல்லை. என்னை இயக்குவது இறைவன். என் பின்னால் இருப்பது ரசிகர்கள். மக்கள் என் பக்கம். எண்ணம் போல் வாழ்க்கை. எண்ணம் போல்தான் வாழ்க்கை’ என்றார்.

பின்னர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய தொகுப்பாளர், ‘234 தொகுதிகளிலும் மாணவர்களுக்கு இலவச AC கோச்சிங் சென்டர் ஆரம்பிக்கிறீர்கள் என கேள்விப்பட்டோம்’ எனக் கேட்க, அதற்கு தனுஷ், ‘அப்படி மொத்தமாக எங்களால் தொடங்க முடியுமா என தெரியவில்லை. இப்போதைக்கும் இன்னும் 10-15 நாட்களில் சென்னையில் மூன்று இடங்களிலும் கன்னியாகுமரியில் ஒரு இடத்திலும் தொடங்குகிறோம். அடுத்தடுத்த ஆண்டுகளில் தமிழகம் முழுக்க கொண்டு செல்ல திட்டமிடுவோம்’ என்றார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ആ കാര്യത്തില്‍ ട്രംപിനൊപ്പം നില്‍ക്കും: ഇസ്രഈലിനുള്ള സൈനിക സഹായം വെട്ടികുറയ്ക്കുമെന്ന പ്രഖ്യാപനത്തെ പിന്തുണച്ച് അബ്ദുല്‍ അല്‍ സഈദ്

വാഷിങ്ടണ്‍: ഇസ്രഈലിനുള്ള സൈനിക സഹായം വെട്ടികുറയ്ക്കാനുള്ള കാര്യത്തില്‍ താന്‍ യു.എസ് പ്രസിഡന്റ്...

വീണ്ടും വീണ്ടും യൂ ടേണ്‍; എസ്.ഐ.ആറില്‍ വീണ്ടും അവസരം നല്‍കിയത് വോട്ടര്‍മാരെ തെറ്റായി ഒഴിവാക്കിയതിന്റെ തെളിവ്: കോണ്‍ഗ്രസ്

ന്യൂദല്‍ഹി: ദല്‍ഹിയിലും ആറ് സംസ്ഥാനങ്ങളിലും എസ്.ഐ.ആറില്‍ കരട് വോട്ടര്‍ പട്ടികയില്‍ ഉള്‍പ്പെടാതെ...