புதுக்கோட்டை மாவட்டத்தில் ரூ.4,730 கோடி மணல் கொள்ளை தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.
தமிழகத்தில் உள்ள ஆற்று மணல் குவாரிகளில் அனுமதித்த அளவை விட பல மடங்கு கூடுதலாக மணல் அள்ளப்பட்டு, சுமார் ரூ.4,730 கோடி அளவிற்கு முறைகேடு நடந்துள்ளதாக அமலாக்கத்துறை குற்றம் சாட்டியிருந்தது.
ட்ரோன்கள், ஐ.ஐ.டி. கான்பூர் நிபுணர்களின் ஜியோ ஸ்கேனிங் மற்றும் செயற்கைக்கோள் வரைபடங்கள் போன்ற டிஜிட்டல் ஆதாரங்களின் அடிப்படையில் அமலாக்கத்துறை எழுதிய கடிதத்தின் தொடர்ச்சியாக, தமிழ்நாடு டி.ஜி.பி. உத்தரவின் பேரில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து அதிரடி சோதனையில் இறங்கியுள்ளனர்.
தமிழகம் முழுவதும் 30-க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடக்கும் நிலையில், புதுக்கோட்டை மாவட்டத்தின் 4 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் ஒரே நேரத்தில் அதிரடி வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். சோதனை நடைபெறும் இடங்களில் அதிகாரிகள் முகாமிட்டு ஆவணங்களைச் சரிபார்த்து வருகின்றனர்.





