29
October, 2026

A News 365Times Venture

29
Thursday
October, 2026

A News 365Times Venture

வேலூர் திமுக மாவட்டச் செயலாளர், தொழிலதிபர் சேகர் ரெட்டி வீடுகளில் ரெய்டு; லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி!

Date:

தி.மு.க வேலூர் தெற்கு மாவட்டச் செயலாளரும் அணைக்கட்டு தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ-வுமான ஏ.பி.நந்தகுமாரின் காட்பாடி வீட்டில் இன்று காலை முதலே லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். டி.எஸ்.பி தலைமையிலான 7-க்கும் மேற்பட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் இந்த சோதனையை நடத்தி வருகின்றனர்.

அணைக்கட்டு தொகுதியில் தொடர்ந்து 2 முறை எம்.எல்.ஏ-வாக இருந்தவர் நந்தகுமார். கடந்த சட்டமன்றத் தேர்தலிலும் 3-வது முறையாக போட்டியிட்டவர் தோல்வியைத் தழுவினார். காட்பாடி காந்தி நகரில் குடும்பத்துடன் வசித்து வரும் நிலையில், அவரின் வீட்டில் அதிரடி காட்டியிருக்கிறது லஞ்ச ஒழிப்புத்துறை.

சேகர் ரெட்டி வீடு

அதேபோல, பிரபல தொழிலதிபர் சேகர் ரெட்டியின் காட்பாடி வீட்டிலும் லஞ்ச ஒழிப்புத்துறை இன்று காலை சோதனையில் ஈடுபட்டது. அ.தி.மு.க மற்றும் தி.மு.க ஆட்சிக்காலங்களில் செல்வாக்குமிக்கவராக வலம் வந்தவர் சேகர் ரெட்டி. சமீபத்திலும், அவரது காட்பாடி வீட்டில் பல கோடி ரூபாய் மதிப்பிலான தங்க நகைகளும், பணமும் திருடப்பட்டது. இது சம்பந்தமாக, பணிப்பெண்களே கைதுசெய்யப்பட்டார்கள்.

இந்த நிலையில், சேகர் ரெட்டி வீட்டில் நடத்தப்பட்ட சோதனையை விரைவாக முடித்துக்கொண்டு வெளியேறிவிட்டார்கள் லஞ்ச ஒழிப்புத்துறையினர். இந்த திடீர் சோதனைக்கான காரணம் என்ன? என்பது பற்றி லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில் இருந்து இன்னும் அதிகாரபூர்வ தகவல்கள் தெரிவிக்கப்படவில்லை.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

മോദി സര്‍ക്കാര്‍ അമേരിക്കയ്ക്ക് മുന്നില്‍ വിധേയരാണ്: ഹര്‍ദീപ് സിങ് പുരിയുടെ സ്ഥാനാര്‍ത്ഥിത്വത്തില്‍ കോണ്‍ഗ്രസ്

ന്യൂദല്‍ഹി: കേന്ദ്രമന്ത്രി ഹര്‍ദീപ് സിങ് പുരിയെ രാജ്യസഭാ ഉപതെരഞ്ഞെടുപ്പിലേക്ക് നാമനിര്‍ദേശം ചെയ്തതില്‍...

Off The Record: కడప జడ్పీ పీఠంపై టీడీపీ–బీజేపీ ఫైట్.. పుత్తా వర్సెస్ ఆదినారాయణ రెడ్డి..!

Off The Record: వైసీపీ కంచుకోటగా చెప్పుకునే కడప జిల్లాలో ఆ...

മരം വെട്ടിനെച്ചൊല്ലിയുള്ള തർക്കം കലാശിച്ചത് മൂന്ന് പേരുടെ കൊലപാതകത്തിൽ; മണിപ്പൂരിൽ വീണ്ടും സംഘർഷം

ഇംഫാൽ: കുറച്ചുകാലമായി നിലനിന്നിരുന്ന സമാധാന അന്തരീക്ഷം തകർത്ത് മണിപ്പൂരിലെ കുക്കി-മെയ്തെയ് വിഭാഗങ്ങൾ...

நகராட்சி நிர்வாகத் துறையில் மோசடி: KN நேரு வீட்டில் இரண்டாவது முறையாக லஞ்ச ஒழிப்புத் துறை ரெய்டு

திமுக முன்னாள் அமைச்சர் கே.என். நேருவுக்குச் சொந்தமான இடங்களில் இன்று (அக்டோபர்...