4
October, 2026

A News 365Times Venture

4
Sunday
October, 2026

A News 365Times Venture

TVK: "படுத்துக் கிடக்கின்ற இந்த அரசை யார் தட்டியெழுப்புவது?" – டாக்டர் கிருஷ்ணசாமி கேள்வி

Date:

“மதுராந்தகமும் தாராபுரமும் புகட்டும் பாடத்தால் புரிந்து கொள்வார்களா, அல்லது சுய விழிப்புணர்வு கொள்வார்களா?” என்று தவெக அரசுக்கு எதிராகக் கடுமையான விமர்சனத்தை வைத்துள்ளார் புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி.

விஜய்

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “107 சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையோடு, நம்பிக்கைக்குப் பாத்திரமற்ற சில அரசியல் கட்சிகளின் ஆதரவோடு ஆட்சிப் பொறுப்பில் உள்ள விஜய் அரசு, பொறுப்பேற்று ஐந்து மாதங்கள் நிறைவடைய உள்ளன.

பூரண மதுவிலக்கு, ஊழலற்ற ஆட்சி போன்ற எண்ணற்ற வாக்குறுதிகளை அள்ளித் தெளித்து ஆட்சிக்கு வந்துள்ள விஜய் அரசு, கொடுத்த எந்த வாக்குறுதியையும் நிறைவேற்ற முடியாமல் தள்ளாடுகிறது.

சட்டமன்ற உறுப்பினர்கள் முதல் முதலமைச்சர் வரை நிர்வாக அனுபவமின்மை, அரசின் பல செயல்பாடுகளிலும் வெளிப்படுகிறது.

தினமும் நடைபெறக்கூடிய கொலைச் சம்பவங்கள், சட்டம் ஒழுங்குப் பிரச்னைகள், மக்களின் போராட்டங்கள் என ஒருபுறம்; இன்னொருபுறம் தொடர் மின்வெட்டு. சிறுகுறு தொழில் முதல் பெரிய நிறுவனங்கள் வரையிலும் சுய மின் உற்பத்தி மூலம் மட்டுமே செயல்படும் அவல நிலை.

ஒட்டுமொத்தத்தில் எல்லா குறைபாடுகளும் ஒருங்கிணைந்து, பொருளாதார வளர்ச்சியை முடக்கிப் போட ஆரம்பித்துவிட்டது.

டாக்டர் கிருஷ்ணசாமி

கடந்த ஆண்டு ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களின் வரி வருவாயை ஒப்பிடுகையில், இந்த ஆண்டு ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் ஒரு சதவிகிதக் குறைவும், செப்டம்பரில் ஜிஎஸ்டி வரி வருமானம் ஐந்து சதவீதமும் குறைந்து போயிருக்கிறது. அதே நேரத்தில் பல மாநிலங்களின் வருவாய் பன்மடங்கு பெருகியுள்ளது. இனி அக்டோபர், நவம்பர் மாதங்களில் என்ன நடக்கும் என்று தெரியவில்லை.

இது இப்படியே போனால், மிகப்பெரிய அளவுக்குப் பணப்புழக்கம் குறைந்து, பெரும் பொருளாதார நெருக்கடி ஏற்படலாம். பலருக்கும் வேலைவாய்ப்புகள் பறிபோக வாய்ப்புண்டு.

படுத்துக் கிடக்கின்ற இந்த அரசை யார் தட்டியெழுப்புவது, எங்கிருந்து தட்டியெழுப்புவது? தலை எங்கே இருக்கிறது, கால் பகுதி எங்கே இருக்கிறது என்று யாருக்கும் தெரியவில்லை. ஓரு ஆரோக்கியசாமியும் ஒரு விஷ்ணு பிரசாத்தும் அரசை நடத்த முற்பட்டால், இதுபோன்ற விளைவுகள்தானே ஏற்படும்?

ஐந்து மாதங்களுக்கு முன்பு வீசிய ‘விஜய் அலை’, இப்போது எங்கும் இருப்பதாகத் தெரியவில்லை. ஓர் இடைத்தேர்தலுக்கு வீதி வீதியாக ஒரு முதலமைச்சர் செல்ல வேண்டிய நிலை உருவாவதிலிருந்தே, அன்று உருவானது ஒரு தற்காலிகமானது என்பதும், முந்தைய ஆட்சியாளர்கள் மீதான ‘வெறுப்பு’ மட்டும்தான் என்பதும் தெரிகிறது.

மதுராந்தகமும் தாராபுரமும் புகட்டும் பாடத்தால் புரிந்து கொள்வார்களா, அல்லது சுய விழிப்புணர்வு கொள்வார்களா?

தமிழ்நாட்டின் வரி வருவாய் குறைந்து வருகிறது என்றாலே, பிற வருவாய்களும் தானாகவே குறையும் என்பதுதான் கணக்கில் கொள்ள வேண்டும். மீண்டும் அரசுக்கு கடன் சுமை அதிகரிக்கும். முந்தைய ஆட்சியாளர்கள் ஐந்து ஆண்டுக் காலத்தில் வாங்கிய கடனைக் காட்டிலும், இவர்கள் ஒரு வருடத்திற்குள்ளாகவே வாங்க வேண்டிய சூழல் ஏற்படலாம்.

தமிழ்நாட்டில் விரைவில் ஏற்படப் போகும் அரசியல், பொருளாதார, சமூகப் பிரளயங்களை எதிர்கொள்ள எச்சரிக்கையுடன் இருப்போம்” என்று தெரிவித்துள்ளார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ഗ്യാനേഷിന്റെ രാജി: രണ്ടാം ദിനവും തലസ്ഥാനം പ്രതിഷേധച്ചൂടില്‍; 150 പേരെ ദല്‍ഹി പൊലീസ് കസ്റ്റഡിയിലെടുത്തു

ന്യൂദല്‍ഹി: മുഖ്യ തിരഞ്ഞെടുപ്പ് കമ്മീഷണര്‍ ഗ്യാനേഷ് കുമാറിന്റെ രാജി ആവശ്യപ്പെട്ട് ഗാന്ധി...

Flydubai Attack: ‘‘ఎవరు పంపినా.. భారీ మూల్యం చెల్లించుకోవాలి’’.. నెతన్యాహు హెచ్చరిక!

Flydubai Attack: ఫ్లైదుబాయ్ FZ1073 విమానం ఘటనపై ఇజ్రాయిల్ ప్రధాని బెంజమిన్...

"ஐயப்பப் பக்தர்களின் உணர்வுகளை மதித்து, விருப்பங்களை நிறைவேற்றுவோம்" – கேரள தேவஸ்வம் அமைச்சர் உறுதி

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை அடுத்த சுசீந்திரம் ஆஸ்ரமத்தில் அகில பாரத ஐயப்பா...