7
October, 2026

A News 365Times Venture

7
Wednesday
October, 2026

A News 365Times Venture

"முதல்வர் விஜய்க்கு நீங்க கொடுக்கப்போற அடி மரண அடியாக இருக்கணும்!" – தாராபுரத்தில் மு.க.ஸ்டாலின்

Date:

மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெறவிருக்கிறது. அதனையொட்டி, இன்று தாராபுரம் திமுக வேட்பாளர் சுகன்யாவுக்காகப் பிரசாரம் மேற்கொண்டார் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின்.

பிறகு பரப்புரைக் கூட்டத்தில், தவெக தலைவர் விஜய்யைக் கடுமையாக விமர்சித்தும் பேசியிருக்கிறார்.

ஸ்டாலின் – திமுக

அவர் பேசுகையில், “பொதுத்தேர்தல் முடிந்து 5 மாசம்கூட ஆகல, அதுக்குள்ள இந்த இடைத்தேர்தல் எதுக்கு வந்துச்சு? இதற்கு காரணமானவங்க யாருன்னு தயவுசெஞ்சு சிந்திச்சுப் பாருங்க.

தன்னுடைய சுயநலத்துக்காக மக்களோட தீர்ப்பை விலைக்கு வாங்கி, இந்த இடைத்தேர்தலை வரவச்சிருக்காங்க. புதுசா ஆட்சிக்கு வந்தவர் ஆட்சி செய்யறதைக் கத்துக்குவார்னு பார்த்தா, அடுத்த கட்சி எம்.எல்.ஏ-க்களை விலைக்கு வாங்கிட்டு இருக்காரு.

இதுதான் மாற்றமா? ‘ஜனநாயகன்’னு ஒரு படத்துல நடிச்ச முதலமைச்சர், இப்போ ஜனநாயகத்துக்கு வில்லனா மாறியிருக்காரு. குதிரை பேரம் பேசி இந்த இடைத்தேர்தலை வரவச்சிருக்காரு.

பெரும்பான்மை ஆதரவு இல்லாததால, இந்த ‘ரீல்’ சி.எம் முதல்ல திமுக கூட்டணியில் இருந்த காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள், முஸ்லிம் லீக் கட்சிகளுக்கு அமைச்சர் பதவி கொடுத்து ஆதரவு பெற்றார்.

ஆளுநர் ஆட்சி வரக்கூடாதுன்னு கம்யூனிஸ்டுகளும் ஆதரவு தந்தாங்க. ஆனா, யாரையுமே நம்பாம சோஃபா செட் அனுப்பி அதிமுக எம்.எல்.ஏ-க்களின் ஆதரவைப் பெற்றார். அது போதாதுன்னு அதிமுகவை உடைச்சு, பல எம்.எல்.ஏ-க்களை விலைக்கு வாங்கி ராஜினாமா செய்ய வச்சு, தன் கட்சியில இணைச்சுக்கிட்டு இந்த இடைத்தேர்தலை வரவச்சிருக்காரு.

தாராபுரத்தில் மு.க. ஸ்டாலின்
தாராபுரத்தில் மு.க. ஸ்டாலின்

தமிழ்நாட்டுல இதுவரைக்கும் இப்படி ஒரு இடைத்தேர்தல் வந்திருக்கா? இல்லை. ஆணவத்தின் உச்சத்தில் இருந்து தமிழ்நாட்டு மக்களின் வாக்குரிமையைக் கொச்சைப்படுத்துகிற முதலமைச்சர் விஜய்க்கு, தாராபுரம் மக்களாகிய நீங்க கொடுக்கப்போற அடி ஒரு மறக்க முடியாத மரண அடியாக இருக்கணும்.

இல்லைனா, தமிழ்நாடு முழுக்க இதையேதான் வேலையாச் செய்ய ஆரம்பிச்சுடுவாங்க, அதை நல்லா ஞாபகம் வச்சுக்கோங்க.” எனப் பேசியிருக்கிறார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ರಾಜ್ಯದ ಮಠಗಳು, ಸ್ವಾಮೀಜಿಗಳ ಬಗ್ಗೆ ನನಗೆ ಅಪಾರವಾದ ಗೌರವವಿದೆ: ಸಿಎಂ ಡಿ.ಕೆ ಶಿವಕುಮಾರ್

ಬೆಂಗಳೂರು, ಅಕ್ಟೋಬರ್,6,2026 (www.justkannada.in): “ರಾಜ್ಯದ ಮಠಗಳು, ಸ್ವಾಮೀಜಿಗಳ ಬಗ್ಗೆ ನನಗೆ...

വോട്ടര്‍പട്ടികയില്‍ നിന്ന് പേരുകള്‍ നീക്കാന്‍ വ്യാജമായി ഫോം-7 സമര്‍പ്പിച്ചു; തെലങ്കാനയില്‍ ബി.ജെ.പി ഏജന്റിനെതിരെ എഫ്.ഐ.ആര്‍

ഹൈദരാബാദ്: വോട്ടര്‍പട്ടികയില്‍ നിന്ന് പേരുകള്‍ നീക്കം ചെയ്യുന്നതിനായി വ്യാജമായി ഫോം ഏഴ്...

தேர்தல் ஆணையர் பதவி விலகக் கோரி தொடர் போராட்டம்; டெல்லியில் ராகுல் காந்தி கைது!

டெல்லியில் இன்று (அக்.6) எஸ்.ஐ.ஆர். முறைகேடு விவகாரத்தில் இந்தியத் தலைமைத் தேர்தல்...

Off The Record: ఇప్పుడు ఎమ్మెల్సీ.. తర్వాత అసెంబ్లీ? బీఆర్ఎస్-లెఫ్ట్ కెమిస్ట్రీ కుదిరేనా..?

Off The Record: తెలంగాణలో రెండు గ్రాడ్యుయేట్ ఎమ్మెల్సీ స్థానాలకు ఎన్నికల...