1
October, 2026

A News 365Times Venture

1
Thursday
October, 2026

A News 365Times Venture

'முதல்வர் விஜய்யின் வீட்டுக்கு எதிரே நடைபாதையில் தவெகவினரின் அபாய பேனர்!' – கவனிக்குமா தலைமை?

Date:

முதல்வர் விஜய்யின் பட்டினப்பாக்கம் வீட்டுக்கு எதிரே மக்கள் நடப்பதற்காக அமைக்கப்பட்டிருக்கும் நடைமேடையில் தவெகவினர் தொடர்ந்து அபாயமான முறையில் பேனர் வைத்து இடையூறு ஏற்படுத்துவதாக மக்கள் புகார் கூறுகின்றனர்.

முதல்வரின் வீடு இருக்கும் பன்னடுக்கு கட்டடம்

பட்டினப்பாக்கம் லூப் சாலையிலிருந்து வெளியேறி அடையாறை நோக்கி செல்லும் சந்திப்பில் ஒரு பக்கமிருக்கும் பன்னடுக்கு கட்டடத்தில் முதல்வர் விஜய்க்கு ஒரு வீடு இருக்கிறது. முதல்வர் சில சமயங்களில் இந்த வீட்டில் தங்குவது உண்டு. கட்சியினருடன் முக்கியமான சந்திப்புகளையும் இந்த வீட்டில் நடத்துவார்.

மேலும், முதல்வர் நீலாங்கரை வீட்டிலிருந்து தலைமைச் செயலகத்துக்கு இந்த சாலை வழியாகத்தான் செல்வார். இந்த பட்டினப்பாக்கம் சிக்னல் சந்திப்பில் நான்குபுறமிருந்தும் வாகனங்கள் எப்போதும் நெருக்கடியாக வந்துகொண்டே இருக்கும். அருகே நிறைய பள்ளி கல்லூரிகளும் இருப்பதால் மாலை நேரங்களில் அதிகமாக போக்குவரத்து நெரிசலும் ஏற்படும். இப்படிப்பட்ட இடத்தில் சரியாக முதல்வரின் வீடு அமைந்திருக்கும் பன்னடுக்கு கட்டடத்துக்கு எதிரே நடைபாதையில் முதல்வரை வாழ்த்தி அபாயமான முறையில் தவெகவினர் பேனர் வைத்திருக்கின்றனர்.

பட்டினப்பாக்கம் ஜங்ஷன்
பட்டினப்பாக்கம் ஜங்ஷன்

பேனரின் சாரங்களாக கட்டப்பட்டிருக்கும் கம்புகளை தரையில் குழி தோண்டி நிறுத்தினால்தான் வலுவாக நிற்கும். நடைபாதையில் குழி தோண்ட முடியாது என்பதால் அப்படியே சாரத்தை நிறுத்தி வைத்து பேனரை ஏற்றியிருக்கிறோம். இதுசம்பந்தமாக அந்தப் பகுதியை சேர்ந்த மக்களிடமும் வாகன ஓட்டிகளிடமும் பேசினோம்.

“இந்த ஜங்ஷன் எப்போதுமே நெருக்கடியாகத்தான் இருக்கும். இவர்கள் நட்டு வைத்திருக்கும் இந்த பேனர் காற்றிலோ மழையிலோ கீழே விழுந்தால் வாகன ஓட்டிகள் மீதும் மக்கள் மீதுமே விழும். இப்படி பேனர்கள் சரிந்து உயிர்பலியான எத்தனையோ சம்பவங்களை நாமே பார்த்திருக்கிறோம். இவர்கள் எதோ ஒன்றிரண்டு நாள் முதல்வரின் கவனத்தை ஈர்க்க பேனர்கள் வைக்கிறார்கள் என்றால்கூட சகித்துக் கொள்ளலாம். ஆனால், ஆட்சியமைத்த முதல் நாளிலிருந்து இப்போது வரைக்கும் பெரும்பாலான நாள்களில் இங்கே பேனர் இருந்து கொண்டே இருக்கிறது. இப்போது தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்துக்காக முதல்வரை பாராட்டி பேனர் வைத்திருக்கிறார்கள்.

அபாய பேனர்
அபாய பேனர்

நாளை முதல்வர் இன்னொரு திட்டம் தொடங்கும் போது அதற்காக பேனரை மாற்றுவார்கள். வாரத்துக்கு ஒரு பேனர் மாறிக்கொண்டே இருக்கும். ஆனால், பேனர் எப்போதும் இருக்கும். முதல்வர் விஜய் தினமும் இந்த வழியாகத்தான் செல்கிறார். அவரும் இந்த அபாயகரமான பேனரை ஏன் கண்டும் காணாமல் இருக்கிறார் என்று புரியவில்லை” என்கின்றனர்.

“சென்னை மாநகராட்சி நிர்வாகம் சமீபத்தில் அனுமதியின்றி பொது இடங்களில் வைக்கப்பட்டிருக்கும் பேனர்களையும் போஸ்டர்களையும் அபாரதம் விதித்து அகற்றியது. சென்னை மாநகராட்சிக்கு முதல்வரின் வீட்டுக்கு எதிரே இருக்கும் ஆளுங்கட்சியினரின் பேனர் கண்ணுக்கு தெரியவில்லையா? ஒருவேளை அனுமதி வாங்கித்தான் பேனர் வைக்கப்படுகிறது எனில், மக்களுக்கான நடைபாதையில் போக்குவரத்து நெரிசல்மிக்க சாலையில் அபாயமான முறையில் பேனர் வைக்க எப்படி அனுமதி கொடுக்கப்பட்டது?” என சமூக ஆர்வலர்கள் கேட்கின்றனர்.

அபாயம் நிகழும் முன் ஆளுங்கட்சியின் பேனர் அகற்றப்படுமா?

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

പൊലീസ് രാജിനെയും സ്പോൺസർഷിപ്പ് രാജിനെയും ചെറുക്കാൻ ജനകീയ പ്രതിരോധം ഉയരും: എം.വി. ഗോവിന്ദൻ

തിരുവനന്തപുരം: തലസ്ഥാനത്ത് യൂണിവേഴ്സിറ്റി കോളേജിന് മുന്നിൽ വിദ്യാർത്ഥികൾക്ക് നേരെ അരങ്ങേറിയത് പൊലീസിനെ...

Ind Vs WI: భారీ లక్ష్య ఛేదనలో చరిత్ర సృష్టించిన గిల్ సేన.. విండీస్‌పై టీమిండియా ఘన విజయం.. సిరీస్ కైవసం..

గౌహతిలోని బర్సపరా క్రికెట్ స్టేడియంలో వెస్టిండీస్‌‌తో జరిగిన రెండో వన్డే మ్యాచ్‌లో...

ಆಲಮಟ್ಟಿ ಅಣೆಕಟ್ಟೆ ಎತ್ತರ ಹೆಚ್ಚಳ: ಬಬಲೇಶ್ವರದ ನಾಲ್ಕು ಗ್ರಾಮಗಳಿಗೆ ತುರ್ತು ಪರಿಹಾರಕ್ಕೆ ಸಚಿವ ಎಂ.ಬಿ ಪಾಟೀಲ್ ಆಗ್ರಹ

ಬೆಂಗಳೂರು,ಅಕ್ಟೋಬರ್‌,1,2026 (www.justkannada.in) ಆಲಮಟ್ಟಿ ಅಣೆಕಟ್ಟು ಎತ್ತರ ಹೆಚ್ಚಳದಿಂದ ತಾವು ಪ್ರತಿನಿಧಿಸುತ್ತಿರುವ...

ബുര്‍ഖ ധരിച്ച് ലേബര്‍ റൂമിലെത്തിയ വിദ്യാര്‍ത്ഥിനികള്‍ക്ക് വിലക്ക്; ജമ്മു കാശ്മീരില്‍ മെഡിക്കല്‍ വിദ്യാര്‍ത്ഥികളുടെ പ്രതിഷേധം

ശ്രീനഗര്‍: ജമ്മു കാശ്മീരിലെ ദോഡ സര്‍ക്കാര്‍ മെഡിക്കല്‍ കോളേജില്‍ ബുര്‍ഖ ധരിച്ചെത്തിയ...