22
September, 2026

A News 365Times Venture

22
Tuesday
September, 2026

A News 365Times Venture

TN 07 CM 2031: சர்ச்சைக்குள்ளான திருமாவளவன் பயணித்த கார் எண்; என்ன சொல்கிறது விசிக?

Date:

சென்னை பூவிருந்தவல்லி அருகே உள்ள செம்பரம்பாக்கம் ஈவிபி (EVP) பிலிம் சிட்டியில், தனியார் ஊடகக் குழு ஒன்று ஒருங்கிணைத்த `திருமா 35 ஆண்டுகள்’ சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த விழாவில் பங்கேற்பதற்காக விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் காரில் வருகை தந்தார். நடிகரும், இப்போதைய முதல்வருமான விஜய் நடித்த GOAT திரைப்படத்தில் இடம்பெற்ற ”TN 07 CM 2026” காரைப் போல, திருமாவளவன் வந்த காரில் `TN 07 CM 2031′ என்றப் பதிவெண் பலகை பொருத்தப்பட்டிருந்தது.

இது அரசியல் வட்டாரத்தில் கவனத்தை ஈர்த்தது. இருப்பினும், இந்தப் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் பரவியதைத் தொடர்ந்து சர்ச்சையும் எழுந்தது.

விசிக தலைவர் திருமாவளவன்

அந்தப் பதிவெண்ணை ஆய்வு செய்த நெட்டிசன்கள், அது 2018-ம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட ஒரு இருசக்கர வாகனத்திற்குரிய எண் என்பதைக் கண்டறிந்தனர். இதன் மூலம், போலி பதிவெண் பலகை கொண்ட காரில் திருமாவளவன் பயணித்ததாகக் கூறி இணையத்தில் விமர்சனங்களும் விவாதங்களும் தீவிரமடைந்தன.

இந்த நிலையில், விசிக மாநிலப் பொருளாளர் எஸ்.எஸ். பாலஜி இந்த விவகாரம் குறித்து பேசும்போது, “`திருமா 35 ஆண்டுகள்’ என்ற நிகழ்ச்சியை EVP ஃபிலிம் சிட்டியில் தனியார் ஊடகக் குழு ஒன்று ஒருங்கிணைத்தது. நிகழ்ச்சியின் அனைத்து ஏற்பாடுகளும், விருது வழங்குவது போன்ற அனைத்துப் பொறுப்புகளும் அவர்கள்தாம் ஏற்றுக் கொண்டனர். மேலும், நிகழ்ச்சி ஒருங்கிணைத்த குழுவினர் PHOTO SHOOT-காக இந்தக் காரைப் பயன்படுத்தியது. அந்த PHOTO SHOOT, EVP அரங்கில் எடுக்கப்பட்டது” எனத் தெரிவித்திருக்கிறார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

അയോധ്യ രാമക്ഷേത്രക്കൊള്ള: സി.സി.ടി.വിയില്‍ 105 തവണ മോഷണം പതിഞ്ഞു; സുപ്രീം കോടതിയെ അറിയിച്ച് യു.പി സര്‍ക്കാര്‍

ലഖ്‌നൗ: അയോധ്യ രാമക്ഷേത്രത്തിലെ സംഭാവന മോഷണവുമായി ബന്ധപ്പെട്ട് സി.സി.ടി.വിയില്‍ 105 തവണ...

Italy: ఇటలీ స్కూళ్లలో బుర్ఖా, నిఖాబ్‌ నిషేధం.. మెలోనీ సర్కార్ సంచలన ప్రతిపాదన..

Italy: ఇటలీ ప్రధాని జార్జియా మెలోనీ సంచలన నిర్ణయానికి సిద్ధమవుతోంది. ఇటలీ...

ಬಿಜೆಪಿಯವರು ಕಾಗದ, ಮೊಬೈಲ್‌ ನೋಡದೇ ವಂದೇ ಮಾತರಂ ಹಾಡಲಿ- ಗೃಹ ಸಚಿವ ಪ್ರಿಯಾಂಕ್‌ ಖರ್ಗೆ

ಬೆಂಗಳೂರು,ಸೆಪ್ಟಂಬರ್‌,21,2026 (www.justkannada.in): ಬಿಜೆಪಿಯವರು ಕಾಗದ, ಮೊಬೈಲ್‌ ನೋಡದೇ ವಂದೇ ಮಾತರಂ...

മണിപ്പൂരില്‍ വീണ്ടും വെടിവെപ്പ്: 15 വയസുള്ള കുട്ടി കൊല്ലപ്പെട്ടു

ഇംഫാല്‍: മണിപ്പൂരിലെ തമെങ്‌ലോങ് ജില്ലയിലെ തമേയ് മേഖലയില്‍ അജ്ഞാതരായ ആയുധധാരികള്‍ നടത്തിയ...