18
September, 2026

A News 365Times Venture

18
Friday
September, 2026

A News 365Times Venture

“மூளை திசு ஆய்வு படிப்பை இவர் மட்டுமே படிக்கிறார்; அரசு உறுதுணையாக இருக்கும்" – அமைச்சர் வன்னி அரசு

Date:

அயலக மாணவர் பாரதிதாசனுக்குத் தேவையான அனைத்து கல்வி உதவித்தொகைகளும் தமிழ்நாடு அரசால் உடனடியாக வழங்கப்படும் என்று சமூக நீதித் துறை அமைச்சர் வன்னியரசு உறுதியளித்துள்ளார்.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், “தம்பி பாரதிதாசனின் உயர்கல்விக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய அரசு உறுதுணையாக இருக்கும். அவருகான கல்விக்கட்டணம் ரூ.6 லட்சமும், வாழ்வாதாரச் செலவுக்கான (Living Expenses) ரூ.6 லட்சமும் ஏற்கனவே அனுப்பப்பட்டுவிட்டது. பிஹெச்டி (PhD) படிப்பிற்கான ஆய்வுக் கருவிகள் மற்றும் மெட்டீரியல்ஸ் வாங்குவதற்கானத் தொகை மட்டுமே நிலுவையில் உள்ளது. அதுவும் ஓரிரு நாட்களில் அவரது கணக்கில் சென்று சேரும்.

பாரதிதாசன்

அண்ணல் அம்பேத்கர் அயலக உதவித்தொகை திட்டத்தின் கீழ், கடந்த தி.மு.க ஆட்சியில் 609 பேர் விண்ணப்பித்து, 601 பேர் தகுதி பெற்றபோதிலும், 181 மாணவர்களுக்கு மட்டுமே ரூ.84.89 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. ஆனால், நடப்பு 2026-27-ம் கல்வியாண்டில் 437 பேர் விண்ணப்பித்த நிலையில், தகுதி பெற்ற 365 மாணவர்களுக்கு ரூ.131 கோடி அளவிற்குத் கூடுதல் நிதியை தற்போதைய அரசு ஒதுக்கியுள்ளது. கடந்த 15 ஆண்டுகளாக உயர்த்தப்படாமல் இருந்த எஸ்சி/எஸ்டி (SC/ST) மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை தற்போது பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டிலிருந்து மூளை திசுக்கள் தொடர்பான ஆராய்ச்சியை தம்பி பாரதிதாசன் மட்டுமே மேற்கொண்டு வருகிறார் என்பது குறிப்பிடத் தக்கது. அவர் அந்தப் படிப்பை நிறைவு செய்து வருவதை நாங்கள் முழுமையாக ஆதரிக்கிறோம். அவருக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்வதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம் என்பதால், இந்த விவகாரத்தில் எந்தவித அரசியலும் செய்ய வேண்டிய அவசியமில்லை.” எனத் தெரிவித்திருக்கிறார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ചിഹ്നവും പേരും മരവിപ്പിച്ചു: തെരഞ്ഞെടുപ്പ് കമ്മീഷനെതിരെ കടുത്ത പ്രതിഷേധവുമായി തൃണമൂൽ കോൺഗ്രസ്; പുതിയ പേരുകളും ചിഹ്നങ്ങളും സമർപ്പിച്ചു

കൊൽക്കത്ത: പശ്ചിമ ബംഗാളിൽ വരാനിരിക്കുന്ന നിയമസഭാ ഉപതെരഞ്ഞെടുപ്പുകൾക്ക് മുന്നോടിയായി ഔദ്യോഗിക പേരും...

Marital Rape: వైవాహిక అత్యాచారంపై సుప్రీంకోర్టు కీలక విచారణ.. తెగే పంచాయితీనేనా?

భారత్‌లో వైవాహిక అత్యాచారం (Marital Rape) అంశంపై దాదాపు దశాబ్దంగా కొనసాగుతున్న...

ನಮಗೆ ರಾಜಕೀಯಕ್ಕಿಂತ ಜನರ ಬದುಕು ಮುಖ್ಯ: ಸಿಎಂ ಡಿ.ಕೆ ಶಿವಕುಮಾರ್

ಮಂಗಳೂರು, ಸೆಪ್ಟಂಬರ್, 18,2026 (www.justkannada.in): ನಮಗೆ ರಾಜಕೀಯಕ್ಕಿಂತ ಜನರ ಬದುಕು...

എല്‍.ജി.ബി.ടി.ക്യു.ഐ+ വ്യക്തികളെ കണ്‍വെര്‍ഷന്‍ തെറാപ്പിക്ക് വിധേയമാക്കരുത്; അത് അശാസ്ത്രീയവും അധാര്‍മികവുമാണ്: ഐ.എം.എ

കൊച്ചി: എല്‍.ജി.ബി.ടി.ക്യു.ഐ പ്ലസ് വ്യക്തികളുടെ ലൈംഗിക ആഭിമുഖ്യവും ലിംഗ സ്വതവും അടിച്ചമര്‍ത്താന്‍...