24
August, 2026

A News 365Times Venture

24
Monday
August, 2026

A News 365Times Venture

முதல்வர் விஜய், அமைச்சர்கள் குறித்து ஒருமையில் பேச்சு – திமுக MLA துரை.சந்திரசேகரன் சர்ச்சை

Date:

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டையில் நடைபெற்ற திமுக நிர்வாகி இல்ல திருமண விழாவில் எதிர்கட்சி தலைவரும், திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி கலந்துக்கொண்டு திருமணத்தை நடத்தி வைத்தார். அவ்விழாவில் மேடையில் உதயநிதி இருக்கும் போது, மணமக்களை வாழ்த்தி, திருவையாறு தொகுதி திமுக எம்.எல்.ஏ சந்திரசேகரன் பேசியதாவது, “கடந்த 3ம் தேதி விவசாயிகளுக்காக தஞ்சாவூரில் மிகபெரிய ஆர்ப்பாட்டத்தை நடத்தினோம். அதில் கலந்து கொண்ட தம்பி உதயநிதி டெல்டா மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்று பேசினார்.

உதயநிதி

அப்போது, கூட்டத்தில் ஒருத்தன் த்ரிஷானு கத்தினான். உதயநிதி காவிரியில் தண்ணீர் இல்லை என பேசினார். அவன் அந்த நேரத்தில் த்ரிஷானு கத்தினான். இதை ரிலேட் செய்து, முதல்வர் மற்றும் ஆதவ் அர்ஜுனாவிடம் சொல்ல ஒரு வழக்கு போட்டு கைது செய்தனர்.

இது தொடர்பாக உயர் அதிகாரிகள், போலீஸார், ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் சட்டசபை கூட்டம் இருக்கு, அவரை கைது செய்தால், சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படும் கண்ட்ரோல் பண்ண முடியாது, நாளை முதன் முதலில் சட்டசபை தொடங்குறோம், பீஸ்புல்லா இருக்கணும், எதிர்கட்சித் தலைவர் எதுவும் பேசலைனு சொல்லியும் கேட்காமல் கைது செய்தனர்.

உடனே, தமிழ்நாடு முழுவதும் போராட்டம் நடக்கிறது. நாங்கள் தஞ்சாவூர் மாவட்ட அறிவாலயத்தில் கூடிவிட்டோம். அன்றைக்கு தான் திமுக பற்றி தெரிந்தது. நேரம் ஆக ஆக தம்பியை ரிசீவ் செய்வதற்காக பெரிய கூட்டம் கூடிவிட்டது. முதலில் கிழக்கு காவல் நிலையத்திற்கு அழைத்து வருவதாக சொன்னவர்கள் பின்னர் தெற்கு காவல் நிலையம் என்றனர்.

பத்து பேரை மட்டும் போலீஸார் வரச்சொன்னார்கள். ஐந்து எஸ்.பி பாதுகாப்புக்கு போட்டிருந்தனர். எல்லோரும் நிக்குறோம். டி.ஐ.ஜி அம்பாசிடர் காரில் வந்தார். அங்கு நின்ற நம்ம கட்சி காரனுங்க அந்த அம்பாசிடர் காரை தூக்கி விட்டனர். அன்னைக்கு அந்த காரை தூக்க முடியும் என எனக்கு தெரிந்தது.

திருவையாறு தொகுதி திமுக எம்.எல்.ஏ சந்திரசேகரன்

அப்ப, நான் மாட்டிட்டோம் வண்டியை பெரட்டி விட்டால் ஷூட்டிங் ஆர்டர் கொடுக்க போறான் கதை முடிஞ்சது நினைச்சோம். அப்புறம் டி.ஐ.ஜி வண்டி என்றதும் விட்டு விட்டனர். உடனே டி.ஐ.ஜி மேல அடிச்சான், அன்கண்ட்ரோலா இருக்கு தஞ்சாவூர் கொண்டு வராதீங்கனு சொல்லிட்டான். நம்ம தம்பிக்கு பெருமையை பாருங்கள் உடனே வண்டியை செங்கிப்பட்டிக்கு திருப்பினர். செங்கிப்பட்டிக்கு போனதும் தம்பி இறங்க முடியாதுனு சொல்லிட்டார். நேரு அண்ணனும் சொல்லியிருக்காரு மாவட்ட செயலாளர் வரட்டும் என்று விட்டார்.

நாங்கள் பறந்து சென்றோம். போனதும் தம்பிய உள்ள அனுப்பி விட்டு சும்மா 5 ஊருக்கு தான் போன் செஞ்சேன். சும்மா ஆம்பள, பொம்பள, சின்ன பிள்ளைகள் என எல்லோரும் வந்து விட்டனர். அரைமணி நேரத்தில் பெரிய கூட்டம் திரண்டு விட்டது மழை பெய்தும் கூட்டம் கலையவில்லை. கையெழுத்து போட்டு விட்டு குறிபிட்ட தூரம் வருவதற்கே முக்கால் மணி நேரம் ஆகிவிட்டது. ஒரு அம்மா, பூசணிக்காயில் சூடம் ஏற்றி தம்பி வண்டிக்கு முன் சுற்றி நாசமா போகட்டும் என உடைத்தார்.

அப்போது, விமான நிலையத்தில் மிகச்சிறப்பாக பேட்டி அளித்தார். எனக்கு அம்மா, மனைவி, மகள் இருக்கிறார்கள். நான் ஒரு பெண்ணை அப்படி பேசுவேனா என்று பேட்டியில் சொன்னார். தவறான செய்தி என்றார். மறுநாள் சட்டசபையில் முதல்வர் விஜய் வந்து கும்பிடாரு. ஆனால், அன்னைக்கு கும்பிடக்கூடாது அவனை (முதல்வர்) விடக் கூடாது என்பது என்னோட எண்ணம். வந்து இப்படின்னான், அப்படின்னான் கும்பிட்டான். ஆனால் தம்பி கலைஞரின் பேரன் கும்பிடவில்லை. நாங்களும் கும்பிடவில்லை. வந்து உட்கார்ந்தோம். ஆளு மூடவுட் ஆயிட்டான். ரெண்டு பேரு ஒண்ணுமே தெரியாத மாதிரி போனாங்க.

டெல்டா மாவட்ட விவசாயிகளுக்காக உதயநிதி இவ்வளவு கஷ்டத்தை ஏற்றுக்கொண்டார். அவரை போய் என்ன பண்ணப்போறான், கைது எல்லாம் பண்ணான். சட்டசபையில், நிர்மல்குமார் “கரூர் கம்பெனி” அப்படின்னான். “ஐயோ சாரி, சாரி, கரூர் முன்னாள் அமைச்சர்” அப்படின்னான். உடனே, நம்ம தலைவர் எந்திரிச்சி “சங்கி அமைச்சர்”, இல்லை சாரி சாரி, சட்ட அமைச்சர் அப்படினு உதயநிதி பேச ஆடிப்போயிட்டான். உடனே சபாநாயகர் தலையை ஆட்டினான். வெளுத்து எடுத்திட்டாரு.

திருமண விழாவில் உதயநிதி

நான் சும்மா பேசும்போது மாமான்னு தான் சொன்னேன். அவர்கள் நான் பொட்டு மாமான்னு சொல்லப்போறாங்கன்னு நினைச்சுடானுங்க. அந்த வார்த்தையை யூஸ் பண்ணக்கூடாது, ஜி.ஓ. இருக்கா என துணை சபாநாயகர் கேட்க, ஏன் அவர் என் மாமா டா என்றேன். இந்த மாதிரி சட்டசபை என்பது ஒரு அசிங்கமான களமா இருக்கு. உதயநிதி சட்டசபையில் மிகச்சிறப்பாக ஒவ்வொரு விஷயமும் செய்கிறார். ஆரம்பத்தில் சின்ன பையன், அனுபவம் இல்லாதவரு, இவர் எப்படி எதிர்கட்சித் தலைவரா இருப்பாருனு பல பேர் விமர்சனம் செய்தனர். ஆனால், மிக அற்புதமாக அவருடைய முதல் பேச்சு இருந்தது.

எனக்கு டி.ஆர்.பி.ராஜா, அன்பில் மகேஸ் இல்லாதது தான் எனக்கு ஒரு வருத்தம். கீர்த்தனானு ஒரு மந்திரி படுத்தும் பாடு பெரிய பாடா இருக்கு. சத்தியமா கடுப்புனா கடுப்பு, வேறு வழி இல்லையே, நாம் செஞ்சதை, நாங்க செஞ்சதா அவ சொல்லுறா, நம்முடையை சாதனை எல்லாம், அவருடையை சாதனையாக அவள் எடுத்துகிறா.

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜமோகன், ஐயய்யோ சாமி நம்மளால தாங்க முடியல, அவ்வளவு டயலாக் விடுறான் பாத்துக்கோ. நேற்று நடந்த செயற்குழுவில் எம்.எல்.ஏக்கள் ஸ்பீடா இருக்கணும் என்றார்கள். எனவே வர சட்டமன்றத்தில் சின்னவர் தலைமையில் சிறப்பாக செயல்படணும். எனக்கு, ரஜினி வாசகம் ஞாபகத்துக்கு வருது. “தப்பு பண்ணிட்யே சிங்காரம், தப்பு பண்ணிட்யேனு. தளபதியை என்னைக்கு கை வச்சானோ, அன்னையில் இருந்து தி.மு.க மிக எழுச்சியாக இருக்கு முதலமைச்சருக்கு நன்றி” என்றார்.

முதல்வர் விஜய் தொடங்கி அமைச்சரக்ள் வரை துரை சந்திரசேகர், எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் தலைமை தாங்கிய நிகழ்வில் ஒருமையில் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

VTU ಬೆಂಗಳೂರು ಕೇಂದ್ರಕ್ಕೆ ಜಪಾನ್ ನಿಯೋಗ ಭೇಟಿ, ಚರ್ಚೆ

ಬೆಂಗಳೂರು,ಆಗಸ್ಟ್,24,2026 (www.justkannada.in): ಕೈಗಾರಿಕೆ–ಶೈಕ್ಷಣಿಕ ಸಂಸ್ಥೆಗಳ ಸಹಭಾಗಿತ್ವದ ಅವಕಾಶಗಳನ್ನು ಅನ್ವೇಷಿಸ ಸಲುವಾಗಿ...

ഘടക കക്ഷികളെ ഉള്‍കൊള്ളാനാവണം; പ്രതിപക്ഷ ഉപനേതാവ് പദവിയില്‍ പിണറായി വിജയനെതിരെ ഡി. രാജ

തിരുവനന്തപുരം: പ്രതിപക്ഷ നേതാവ് പിണറായി വിജയനെതിരെ വിമര്‍ശനവുമായി സി.പി.ഐ ദേശീയ സെക്രട്ടറിയും...