24
August, 2026

A News 365Times Venture

24
Monday
August, 2026

A News 365Times Venture

Canada Vs US: “தாக்கப்படும் போதுதான் போர்; நாங்கள் தாக்கப்பட்டிருக்கிறோம்" – கனடப் பிரதமர் காட்டம்

Date:

அமெரிக்கப் பொருட்களுக்கு கூடுதல் வரிகளை விதிக்கவுள்ளதாக கனடா பிரதமர் மார்க் கார்னி தெரிவித்துள்ளார்.

கனடாவின் சுமார் 20 பில்லியன் டாலர் மதிப்பிலான ஏற்றுமதியை இலக்காகக் கொண்டு, அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் 50% புதிய வரியை அறிவித்திருந்தார்.

இது தொடர்பாக அமெரிக்கா-கனடா இடையிலான சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தின் எதிர்காலம் குறித்து தீவிர பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஆனால், இறுதியில் இந்தப் பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது. பேச்சுவார்த்தை தோல்விக்கு இரு நாடுகளும் ஒன்றையொன்று மாறி மாறி குற்றம்சாட்டிவருகின்றன.

ட்ரம்ப்

இந்த நிலையில், கனடா பிரதமர் மார்க் கார்னி செய்தியாளர்களிடம், “அமெரிக்கா, கனடாவிற்கு விதித்த வரிகளுக்கு இணையாக டாலருக்கு டாலர் என்ற அடிப்படையில் புதிய வரிகள் விதிக்கப்படும். எஃகு, எலக்ட்ரானிக்ஸ், பால் பொருட்கள், வீட்டு உபயோகப் பொருட்கள், விவசாயக் கருவிகள் மற்றும் காகிதப் பொருட்கள் உள்ளிட்டவை இந்த வரி விதிப்பில் அடங்கும்.

கனடிய தொழிலாளர்கள், விவசாயிகள், குடும்பங்கள் மற்றும் வணிகங்களைப் பாதுகாக்க அமெரிக்காவின் புதிய வரிகளுக்கு கனடாவும் இணையான வரிகளை விதிக்கும்.

அமெரிக்காவுடன் கனடா வர்த்தகப் போரில் ஈடுபடுகிறதா என்றால், தாக்கப்படும் போதுதான் போர் உருவாகிறது. நாங்கள் தாக்கப்பட்டிருக்கிறோம். கடைசி நேரத்தில் அமெரிக்கா முன்வைத்த நியாயமற்ற மற்றும் பொருளாதார ரீதியாக ஏற்றுக்கொள்ள முடியாத நிபந்தனைகளே பேச்சுவார்த்தை முறியக் காரணம்.

மேலும், பிற நாடுகளுடன் கனடா புதிய வர்த்தக ஒப்பந்தங்களைச் செய்வதைக் கட்டுப்படுத்தும் அமெரிக்காவின் கோரிக்கையை ஏற்றுக்கொள்ள முடியாது.

கனடாவின் இறையாண்மை மற்றும் வேலைவாய்ப்புகளைப் பாதிக்கும் எந்த நிபந்தனைக்கும் பணியப்போவதில்லை. அமெரிக்க வரிகளால் பாதிக்கப்படும் கனடிய தொழில்துறை மற்றும் தொழிலாளர்களைப் பாதுகாக்க அடுத்த வாரம் புதிய உதவித் திட்டங்கள் அறிவிக்கப்படும் என்றும், இந்த ஆதரவு பல ஆண்டுகளுக்கு நீடிக்கக்கூடும்” எனத் தெரிவித்தார்.

மார்க் கார்னி
மார்க் கார்னி

கனடாவின் ஏற்றுமதியில் 70% அமெரிக்காவையே சார்ந்துள்ள நிலையில், வர்த்தக அமைப்புகளும் எதிர்க்கட்சித் தலைவர் பியர் பொய்லீவ்ரே உள்ளிட்ட தலைவர்களும் நாட்டின் பொருளாதாரத்தைப் பாதுகாக்க அரசு எடுக்கும் இந்த நடவடிக்கைக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையில், அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதி ஜேமிசன் க்ரீர், “அமெரிக்காவுடன் இணைந்து செயல்படக் கிடைத்த ஒரு நல்ல வாய்ப்பை கனடா நழுவவிட்டுவிட்டது. கனடாவின் இந்தப் பதிலடி நடவடிக்கைக்கு ஏற்ப நாங்கள் அடுத்தகட்ட முடிவுகளை எடுப்போம்” எனத் தெரிவித்திருக்கிறார்

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

മദ്യപിക്കാനുള്ള ക്ഷണം നിരസിച്ചു; ട്രെയിനില്‍ മുസ്‌ലിം വിദ്യാര്‍ത്ഥിക്ക് ക്രൂര മര്‍ദനം

ലഖ്‌നൗ: മദ്യം കഴിക്കാന്‍ വിസമ്മതിച്ചതിനെ തുടര്‍ന്ന് മദ്യപ സംഘം മുസ്‌ലിം യുവാവിനെ...

பாஜக-விலிருந்து விலகிய நடிகர் தேவன் தவெக-வில் இணைகிறாரா? விஜய்யைச் சந்திக்க காரணம் என்ன?

கேரளாவைச் சேர்ந்த பிரபல வில்லன் நடிகர் தேவன், தமிழில் ஏராளமான சினிமாக்களில்...