19
August, 2026

A News 365Times Venture

19
Wednesday
August, 2026

A News 365Times Venture

"டிரக்கிற்குள் ஒளியும் நிலைமை வராதபடி மொத உங்க பாதுகாப்பை உறுதியாக்குங்க" – ட்ரம்பைச் சீண்டும் ஈரான்

Date:

‘ஹார்முஸ் நீர்ச்சந்தியை அமெரிக்காவின் பிராந்தியமாக மாற்றப் போகிறோம்’ என்கிற பேச்சை முன்னெடுத்திருக்கிறது அமெரிக்கா. இதை அமெரிக்க அதிபர் ட்ரம்பும் தனது ட்ரூத் சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.

இதற்குப் பதிலடி தருவதுப்போல, ஈரானிய நாடாளுமன்றத்தின் தேசியப் பாதுகாப்பு ஆணையத்தின் தலைவர் எப்ராஹிம் அஜிசி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றைப் பதிவிட்டுள்ளார்…

ஈரான் பதிவு

“அமெரிக்க அதிபர், ஹார்முஸ் நீர்ச்சந்தி குறித்து ஓயாமல் வாய் சவடால்கள் விடுப்பதை விட்டுவிட்டு, உணவு டிரக்கிற்குள் ஓடி ஒளிந்துகொள்ளும் நிலைமை வராதபடி தனக்கான பாதுகாப்பை உறுதியாக்குவதில் கவனம் செலுத்த வேண்டும்”

துருக்கியில் நடந்த நேட்டோ மாநாட்டில் கலந்துகொண்ட ட்ரம்பிற்கு, ஈரானால் அச்சுறுத்தல் இருக்கிறது என்பது தெரிந்ததால், அவர் திட்டமிட்ட விமானம் இல்லாமல் வேறு விமானத்தில் அமெரிக்காவிற்குப் பயணமானார்.

இடையில், அந்த விமானம் மாறுவதற்காக ட்ரம்ப் உணவு டிரக்கில் பயணித்தார் என்று கூறப்பட்டது. அதைக் குறிப்பிட்டுத்தான் ட்ரம்பைச் சாடியுள்ளது ஈரான்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ಮಕ್ಕಳಿಗೆ ನೆರವಾಗುವ ಹೊಸ ಹೆಜ್ಜೆ: ಉಪಹಾರ ಸೇವೆ ಆರಂಭ

ಮೈಸೂರು, ಆಗಸ್ಟ್,18,2026 (www.justkannada.in): ಅಖಿಲ ಭಾರತ ವಾಕ್ ಮತ್ತು ಶ್ರವಣ...

ഹോർമുസ് പുതിയ യു.എസ് ടെറിട്ടറിയെന്ന് ട്രംപ്; അദ്ദേഹത്തിന്റെ തെറ്റിധാരണ ഉടൻ മാറുമെന്ന് ഇറാൻ മന്ത്രി

വാഷിങ്ടൺ: ഹോർമുസ് കടലിടുക്കിനെ യു.എസിന്റെ പുതിയ ടെറിട്ടറിയായി അവകാശപ്പെട്ട് പ്രസിഡന്റ് ഡൊണാൾഡ്...

"ஈரானுடன் எந்தப் பேச்சுவார்த்தையும் இல்லை" – முதன்முறையாக ட்ரம்ப் பேச்சு

‘ஈரானில் தற்காலிக போர் நிறுத்தம்’ என்று அமெரிக்கா அறிவித்ததிலிருந்து, 35+ முறைகளுக்கு...