9
October, 2026

A News 365Times Venture

9
Friday
October, 2026

A News 365Times Venture

`தலைவர்களைக் கட்டிப்பிடிப்பதுதான் வெளிநாட்டுக் கொள்கையா?'- ராகுல் பேச்சு; பாஜக கண்டனம்!

Date:

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசின் வெளியுறவுத்துறை கொள்கையைக் விமர்சிக்கும் வகையில், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பேசிய பேச்சு, அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியிருக்கிறது.

ரச்னாத்மக் காங்கிரஸ் தேசிய மாநாட்டில் ராகுல் காந்தி கலந்துகொண்டிருக்கிறார். அந்த மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி, “மத்திய அரசுக்கு வெளிநாட்டுக் கொள்கை என்றால் என்னவென்றே தெரியவில்லை.

மோடி – மெலோனி

தலைவர்களைக் கட்டிப்பிடிப்பதுதான் வெளிநாட்டுக் கொள்கை என்று மோடி நினைத்துக் கொண்டிருக்கிறார்” என்று விமர்சித்திருக்கிறார். இதை நேரடியாகச் செய்து காட்டுவதற்காக, மேடையிலிருந்த காங்கிரஸ் தலைவர் சந்தீப் தீட்சித்தைக் கட்டிப்பிடித்திருக்கிறார்.

அப்போது சந்தீப் தீட்சித், “இத்தாலி பிரதமர் மெலோனி என்று நினைத்து என்னைக் கட்டிப்பிடிக்கவில்லையே?” என ஜோக்காகக் கேட்க, அதற்கு ராகுல் காந்தி, “நான் இன்னும் அந்த அளவுக்குப் போகவில்லை” என்று பதிலளித்திருக்கிறார்.

இந்த உரையாடல் பாஜக தலைவர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. ராகுல் காந்தி மற்றும் சந்தீப் தீட்சித் பேச்சுக்கு பாஜக-வினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

ராகுல் காந்தி
ராகுல் காந்தி

அந்த வகையில் பாஜக நாடாளுமன்ற உறுப்பினரும் செய்தித் தொடர்பாளருமான சம்பித் பத்ரா, “ராகுல் காந்தியின் பேச்சும் நடத்தைகளும் நாளுக்கு நாள் தரம் தாழ்ந்து வருகின்றன. நாட்டின் பிரதமர் மற்றும் இத்தாலி நாட்டின் தலைவர் குறித்துப் பயன்படுத்திய தரமற்ற சொற்கள் நாகரிக அரசியலுக்கு ஏற்புடையதல்ல” எனக் கண்டித்திருக்கிறார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ഗ്യാനേഷിന്റെ രാജി: രാഷ്ട്രപതി ഭവന് മുന്നില്‍ പ്രതിഷേധവുമായി പ്രതിപക്ഷ നേതാക്കള്‍

ന്യൂദല്‍ഹി: മുഖ്യ തിരഞ്ഞെടുപ്പ് കമ്മീഷണര്‍ ഗ്യാനേഷ് കുമാര്‍ രാജിവയ്ക്കണമെന്ന ആവശ്യം ഉന്നയിച്ച്...

கூட்டணி பலமின்றி களமிறங்கிய திமுக; வாக்கு சதவிகிதம் ஓர் ஒப்பீடு; 3 ப்ளஸ்கள் என்னென்ன?

மதுராந்தகத்தில் மரகதம் குமரவேல், தாராபுரத்தில் சத்யபாமா என இடைத்தேர்தல் நடந்த இரண்டு...

Saudi-India: ‘అప్రమత్తంగా ఉండండి.. ఇంట్లోనే ఉండండి’.. సౌదీలోని భారతీయులకు కేంద్రం సూచన

సౌదీపై హౌతీల దాడులు తీవ్రమవుతున్న తరుణంలో కేంద్ర ప్రభుత్వం అప్రమత్తం అయింది....

പ്രതിഷേധം തടയാന്‍ മെട്രോയും ട്രെയിനുകളും നിയന്ത്രിക്കാം; എന്നാല്‍ പൊതുജനങ്ങളെ ബുദ്ധിമുട്ടിക്കരുതെന്ന് സുപ്രീം കോടതി

ന്യൂദല്‍ഹി: മുഖ്യ തെരഞ്ഞെടുപ്പ് കമ്മീഷണര്‍ ഗ്യാനേഷ് കുമാറിന്റെ രാജി അടക്കമുള്ള ആവശ്യങ്ങളുന്നയിച്ച്...