14
August, 2026

A News 365Times Venture

14
Friday
August, 2026

A News 365Times Venture

"சென்னை, புனே, குஜராத் மூலம் சீனா எங்களை ஏமாற்றுகிறது" – அமெரிக்காவின் குற்றச்சாட்டு என்ன?

Date:

அமெரிக்காவின் வெள்ளை மாளிகை நேற்று (ஆகஸ்ட் 14) அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது. அதில் இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகள் அமெரிக்காவின் வரியில் இருந்து தப்பிக்க ஒரு மோசடி வழியை பின்பற்றுவதாக கூறியிருந்தது.

அந்த மோசடியின் பெயர், ‘சரக்கு மாற்று மோசடி (Transshipment Scam)’. அதாவது, அமெரிக்கா எந்த நாட்டிற்கு குறைவான வரி விதித்திருக்கிறதோ, அந்த நாட்டிற்கு மோசடி செய்யும் நாடுகள் தங்கள் பொருளை ஏற்றுமதி செய்கின்றன.

அங்கே இருந்து அந்தப் பொருள்கள் அமெரிக்கா சென்று இறங்குவதால், வரி குறைகிறது. இதனால், அமெரிக்காவிற்கு ஓராண்டிற்கு சராசரியாக 75 பில்லியன் டாலர் வருமான இழப்பு ஏற்படுகிறது என்று வெள்ளை மாளிகை கூறியுள்ளது.

ஏற்றுமதி – இறக்குமதி

இந்த அறிக்கையில் சீனாவைக் கடுமையாக சாடியிருக்கும் அமெரிக்கா, சென்னை, புனே போன்ற இந்திய மாநிலங்களின் பெயரையும் குறிப்பிட்டிருக்கிறது.

அது என்ன?

அமெரிக்காவின் வரி விதிப்பிலிருந்து தப்பிப்பதற்காகச் சீனப் பொருட்கள் வேறு சில நாடுகளின் வழியே அமெரிக்கச் சந்தைக்குள் நுழைகிறது.

இதன் காரணமாக அமெரிக்கத் தொழிற்சாலைகளின் உற்பத்தி முடங்கி பிற வெளிநாடுகள் பயனடைகிறது.

சீனா, பம்ப் மற்றும் கம்ப்ரஸ்ர்களை முதலில் இந்திய மாநிலங்களான சென்னை, குஜராத், புனா ஆகியவற்றிற்கு அனுப்பி, அங்கிருந்து அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்கிறது. இதன் மூலம் சீனா வரி ஏய்ப்பு செய்கிறது என்கிற குற்றச்சாட்டை முன்வைக்கிறது அமெரிக்கா.

அந்த அறிக்கையில் அமெரிக்கா இந்திய மாநிலங்களை மட்டும் குற்றம் சாட்டவில்லை. மெக்சிகோ, வட கொரியா, தைவான் உள்ளிட்ட நாடுகளில் உள்ள சில மாநிலங்களையும் குறிப்பிடுகிறது.

இப்படி வரி ஏய்ப்பு செய்ய பயன்படும் மாநிலங்களை அமெரிக்கா, ‘கெட்ட சகோதரி நகரங்கள்’ என்று குறிப்பிடுகிறது.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

Amaravati Land Pooling Case: చంద్రబాబుకు సుప్రీంకోర్టులో బిగ్ రిలీఫ్.. రాజకీయ పోరాటాలు కోర్టులో వద్దు..!

Amaravati Land Pooling Case: అమరావతి ల్యాండ్ పూలింగ్ వ్యవహారంలో ఆంధ్రప్రదేశ్...

ഞാനും വിദ്യാര്‍ത്ഥികളും തമ്മിലുള്ള വിഷയം, നിങ്ങള്‍ ഇടപെടേണ്ടതില്ല: നല്‍സര്‍ വിഷയത്തില്‍ ബി.സി.ഐക്കെതിരെ സുപ്രീം കോടതി

ന്യൂദല്‍ഹി: നല്‍സര്‍ നിയമസര്‍വകലാശാലയിലെ വിദ്യാര്‍ത്ഥികളുടെ അഭിഭാഷക എന്റോള്‍മെന്റ് തടഞ്ഞ ബാര്‍ കൗണ്‍സില്‍...

`திருமணம் ஆகாதவர்கள் குடித்தால் ரூ.5,000 அபராதம்!' – மீனவ கிராமத்தின் `மது ஒழிப்பு' முன்னெடுப்பு

மது பழக்கத்தால் சீரழியும் இளைஞர்களின் எதிர்காலத்தைக் காக்கவும், பொது அமைதியைப் காக்கும்...