8
August, 2026

A News 365Times Venture

8
Saturday
August, 2026

A News 365Times Venture

'வனத்துறையினர் ஏதாவது செய்தால் என்னுடைய எம்.பி பதவியை ராஜினாமா செய்வேன்' – தங்கதமிழ்செல்வன்

Date:

தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி அருகே வருசநாடு, மேகமலை உள்ளிட்ட 90- க்கும் மேற்பட்ட மலைக் கிராமங்களில் மூன்று தலைமுறைகளுக்கும் மேலாக வசித்து வருவதோடு  விவசாய தொழிலை செய்து வருகின்றனர். வருசநாடு உள்ளிட்ட 9 கிராம ஊராட்சிகளும் ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலைப் புலிகள் காப்பகமாக அறிவிக்கப்பட்டது. இதை தொடர்ந்து கடந்த மாதம் ஸ்ரீ வில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பகத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டுமென உச்சநீதிமன்ற உத்தரவிட்டது.

தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி அருகே வருசநாடு, மேகமலை உள்ளிட்ட 90- க்கும் மேற்பட்ட மலைக் கிராமங்களில் மூன்று தலைமுறைகளுக்கும் மேலாக வசித்து வருவதோடு  விவசாய தொழிலை செய்து வருகின்றனர். வருசநாடு உள்ளிட்ட 9 கிராம ஊராட்சிகளும் ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலைப் புலிகள் காப்பகமாக அறிவிக்கப்பட்டது. இதை தொடர்ந்து கடந்த மாதம் ஸ்ரீ வில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பகத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டுமென உச்சநீதிமன்ற உத்தரவிட்டது.

போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள்

இதனால்  மக்களை ஆக்கிரமிப்பாளர்கள் எனக் கூறி, அவர்களை வெளியேற்றும் நடவடிக்கையில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள மலைவாழ் மக்கள், வனத்துறையினரின் நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதன் ஒருபகுதியாக, தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையில் சார்பில் நேற்று பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மேகமலை, வருசநாடு உள்ளிட்ட 9 ஊராட்சிகளுக்கு உட்பட்ட 98 கிராமங்களைச் சேர்ந்த 5,000-க்கும் மேற்பட்டோர் கவந்து கொண்டனர்.

வனத்தில் வசிக்கும் மக்களுக்கு 2006 வன உரிமைச் சட்டத்தின்படி வீட்டு மனைப்பட்டா, நிலப்பட்டா வழங்கக் கோரியும், நீதிமன்ற உத்தரவுகளை முழுமையாக ரத்துச் செய்ய தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்கக் கோரியும் அவர்கள் கோஷங்கள் எழுப்பினர்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் சண்முகம், தேனி மக்களவை உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன், ஆண்டிப்பட்டி எம்எல்ஏ மகாராஜன், அதிமுக, தவெக, அமமுக, நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகளின் சார்பில் நிர்வாகிகள் கலந்து கொண்டு மலைவாழ் மக்களின் போராட்டத்திற்கு ஆதரவுத் தெரிவித்தனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள்

போராட்டத்தில் பேசிய தேனி எம்.பி. தங்க தமிழ்ச்செல்வன், “தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு 30 ஆண்டுகளில் இந்த அளவுக்கு ஒரு பெரிய போராட்டத்தை இதுவரை பார்த்ததில்லை. எங்கள் சொத்தை, எங்களுக்கு கொடுத்துவிட்டு மீதி சொத்தை வனத்துறை எடுத்துக்கொள்ளட்டும். நீதிமன்றம் தீர்ப்பளித்தும் முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்துவதற்கு நடவடிக்கை எடுக்கவில்லை; ஆனால் மக்களை வெளியேற்றுவதில் மட்டும் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

டெல்லியில் தற்போது நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. விடுமுறை எடுத்து உங்கள் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளேன். நீங்கள் ஓட்டுப் போட்டு வெற்றி பெற்ற நான் உங்களை வெளியேற்றும் நடவடிக்கையில் வனத்துறையினர் ஏதாவது விபரீதம் செய்தால் என்னுடைய எம்பி பதவியை ராஜினாமா செய்ய தயாராக உள்ளேன்” என பேசினார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

தவெக வைத்த பொறியில் சிக்கியதா திமுக? தொகுதி மறுவரையறை விவகாரத்தில் பாஜகவை நெருங்கும் திமுக!

தொகுதி மறுவரையறை தொடர்பாக தமிழக அரசியல் களம் மீண்டும் சூடுபிடித்துள்ள நிலையில்,...

Will Jacks: సూపర్‌మ్యాన్ ఫీల్డింగ్.. అయ్యా బాబోయ్..! ఏంటి జాక్ క్యాచ్ ను అలా పట్టేశావ్.!

Will Jacks: ఇంగ్లండ్‌లో జరుగుతున్న ‘ది హండ్రెడ్ 2026’ టోర్నీలో గురువారం...

ಸಿಎಂ ಡಿಕೆಶಿ ಭೇಟಿ: ಅಸಮಾಧಾನದಿಂದಲೇ ಹೊರ ನಡೆದ ಬಸವರಾಜ ಹೊರಟ್ಟಿ?

ಬೆಂಗಳೂರು,ಆಗಸ್ಟ್,7,2026 (www.justkannada.in): ವಿಧಾನಪರಿಷತ್ ಸಭಾಪತಿ ಸ್ಥಾನಕ್ಕೆ ರಾಜೀನಾಮೆ ಸೂಚನೆ ಸಂಬಂಧ...