20
July, 2026

A News 365Times Venture

20
Monday
July, 2026

A News 365Times Venture

டெல்லியில் இன்று அனைத்துக் கட்சி கூட்டம்; கோபத்தில் வெளியேறிய எதிர்க்கட்சிகள் – காரணம் 'திரிணாமுல்'

Date:

நாளை (ஜூலை 20, 2026) முதல் நாடாளுமன்றத்தில் மழைக்கால கூட்டத்தொடர் தொடங்க உள்ளது.

இதையொட்டி இன்று டெல்லியில் அனைத்துக் கட்சி தலைவர்களின் சந்திப்பு நடந்தது.

ஆனால், ஆரம்பித்த சில நிமிடங்களிலேயே எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் இருந்து வெளியேறி இருக்கின்றன.

இதற்கு மிக முக்கிய காரணம் – திரிணாமுல் காங்கிரஸ்.

நாடாளுமன்றம்

ஏன்… என்ன விஷயம்?

கடந்த சட்டமன்றத் தேர்தலில், திரிணாமுல் காங்கிரஸ் தோல்வியை தழுவியதையடுத்து அந்தக் கட்சிக்குள் காட்சிகள் மாறி இருக்கின்றன.

திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவர் மம்தா பானர்ஜி மீது அதிருப்தியில் இருந்த 20 எம்.பிக்கள் இந்திய தேசியவாத குடிமக்கள் கட்சியில் (NCPI) சேர்ந்தனர்.

இது மேற்கு வங்கத்தில் உள்ள அங்கீகரிக்கப்படாத கட்சி ஆகும். திரிணாமுல் காங்கிரஸ் எம்.பிக்கள் இந்தக் கட்சியில் இணைந்த பின், இந்தக் கட்சி கவனம் பெற்றது.

இதெல்லாம் சரி… இன்று ஏன் கூட்டத்தில் இருந்து எதிர்க்கட்சிகள் வெளியேறினார்கள் என்று பார்த்தால், இன்றைய கூட்டத்திற்கு NCPI கட்சிக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்ததே எதிர்க்கட்சிகளின் கோபத்திற்கு காரணம்.

காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் பேசுகையில், NCPI கட்சியில் 20 எம்.பிக்கள் இணைந்திருப்பது குறித்து மக்களவை சபாநாயகர் இன்னும் முடிவெடுக்காத போது, அந்தக் கட்சி எப்படி அழைக்கப்பட்டது என்று பொறுமுகிறார்கள்..!

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

സി.ജെ.പി മാര്‍ച്ച്: പ്രതിഷേധക്കാരെ അടിച്ചോടിച്ച് പൊലീസ്; ജന്തര്‍ മന്തറില്‍ സംഘര്‍ഷം

  ന്യൂദല്‍ഹി: നീറ്റ് പരീക്ഷാ ക്രമക്കേടില്‍ കേന്ദ്ര വിദ്യാഭ്യാസ മന്ത്രി ധര്‍മേന്ദ്ര...

திமுக எம்எல்ஏ கைது: “திமுக-வினரைத் துன்புறுத்த வேண்டும் என்ற நோக்கில்…" – ஆர்.எஸ். பாரதி கண்டனம்

தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது,...

Zohran Mamdani: నెతన్యాహూను అరెస్ట్ చేస్తాం.. న్యూయార్క్ మేయర్ హెచ్చరిక..

Zohran Mamdani: ఇజ్రాయిల్ ప్రధాని బెంజమిన్ నెతన్యాహూ ఐక్యరాజ్యసమితి సదస్సు కోసం...