4
July, 2026

A News 365Times Venture

4
Saturday
July, 2026

A News 365Times Venture

Iran : அலி கமேனி இறுதிச்சடங்கு: 4 மாதங்களாக உடல் எங்கே இருந்தது? இஸ்லாமிய விதியை மீறி தாமதமானதா?

Date:

உலக அரசியலில் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்திய ஈரானின் முன்னாள் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டு 4 மாதங்கள் ஆகிவிட்ட நிலையில், அவரது இறுதிச்சடங்கு ஊர்வலங்கள் தற்போதுதான் தொடங்கியிருக்கின்றன. அமெரிக்கா – இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் கமேனி உயிரிழந்ததைத் தொடர்ந்து, ஈரானில் போர் உச்சகட்டத்தை எட்டியதால் அவரது இறுதிச்சடங்கு தள்ளிவைக்கப்பட்டிருந்தது.

தற்போது அமெரிக்காவுடன் ஏற்பட்டுள்ள தற்காலிகப் போர்நிறுத்த ஒப்பந்தத்தை அடுத்து, கமேனியின் உடலுக்கு பிரமாண்ட அஞ்சலி செலுத்த ஈரான் மக்கள் தயாராகி வருகின்றனர். தலைநகர் டெஹ்ரான் மட்டுமன்றி, ஈரான் மற்றும் ஈராக்கின் முக்கிய 5 நகரங்களுக்கு அவரது உடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படவிருக்கிறதாம். ஜூலை 9-ல் அவரது சொந்த ஊரான மஷாத் (Mashhad) நகரில் உடல் அடக்கம் செய்யப்பட உள்ளது.

ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி

4 மாதங்களாக உடல் எங்கே… எப்படிப் பாதுகாக்கப்பட்டது?

இஸ்லாமிய முறைப்படி ஒருவர் இறந்த சில நாள்களிலேயே உடல் அடக்கம் செய்யப்பட வேண்டும் என்பதுதான் மரபு. ஆனால், கமேனி பிப்ரவரி மாதமே கொல்லப்பட்டும், 4 மாதங்களாக இறுதிச்சடங்கு நடக்காதது ஏன் என்ற மில்லியன் டாலர் கேள்வி உலக அரங்கில் எழுந்தது.

பொதுவாக இஸ்லாமிய ஷரியத் சட்டங்களின்படி உடலை ரசாயனங்கள் தடவி பதப்படுத்துவது (Chemical Embalming) தடை செய்யப்பட்டுள்ளது. அப்படியிருக்க கமேனியின் உடல் எப்படிப் பாதுகாக்கப்பட்டது என்பது பெரும் பேசுபொருளாக இருக்கிறது.

இது குறித்து சர்வதேச பயங்கரவாத எதிர்ப்பு நிபுணர் டாக்டர் முகமது உமர் விளக்குகையில், “போர்க்காலச் சூழல் போன்ற விதிவிலக்கான அசாதாரண சூழ்நிலைகளில், உடலை அடக்கம் செய்யத் தாமதப்படுத்துவதற்கும், குளிரூட்டப்பட்ட முறையில் உடலைப் பாதுகாப்பதற்கும் ஷியா (Shia) பிரிவு சட்டங்களில் சில விலக்குகள் உள்ளன. இதன்படி, கமேனியின் உடலுக்கு எந்த ரசாயனமும் பயன்படுத்தாமல், அதிநவீன மிகக் குளிர்ந்த குளிர்பதனக் கிடங்கில் (Refrigerated Cold Storage) வைத்து உறைநிலையில் 4 மாதங்களாகப் பாதுகாத்துள்ளனர்” என்று குறிப்பிடுகிறார்.

ஈரான்

அரசியல் பின்னணி!

ஈரானில் மிக நீண்ட காலம் அதிகாரத்தில் இருந்த ஒரு உச்ச தலைவரின் இறுதிச்சடங்கை, சாதாரணப் போர்க்களச் சூழலில் அவசர அவசரமாக நடத்த ஈரான் அரசு விரும்பவில்லை. அமெரிக்காவுடன் ஒரு சுமுகமான தற்காலிகப் போர்நிறுத்தம் ஏற்படும் வரை காத்திருந்து, தற்போது உலக நாடுகளின் முக்கியப் பிரமுகர்கள் மற்றும் லட்சக்கணக்கான மக்கள் முன்னிலையில் கமேனிக்கு நெஞ்சார்ந்த மிகப்பெரிய பிரியாவிடை கொடுக்க ஈரான் திட்டமிட்டிருக்கிறது.

இஸ்லாமிய சட்ட விதிகளுக்குள் இத்தகைய விலக்குகளைப் பெற்று, 4 மாதங்களுக்குப் பிறகு கமேனியின் இறுதி ஊர்வலத்தை ஈரான் அரசு நடத்துவது சர்வதேச அளவில் டாக்-ஆக இருக்கிறது.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ഹോര്‍മുസില്‍ വേണ്ടത് ‘ഉചിതമായ പരിഹാരം’; യു.എസ്-ഇറാന്‍ ചര്‍ച്ചകള്‍ക്കിടെ നിലപാട് വ്യക്തമാക്കി ചൈന

  ബെയ്ജിങ്: ഹോര്‍മുസ് കടലിടുക്കിലെ കപ്പല്‍ ഗതാഗത തടസങ്ങള്‍ അവസാനിപ്പിക്കാന്‍ ഒരു...

Ravi Shastri: “చాలా పెద్ద తప్పు చేస్తున్నారు”.. టీమిండియా మేనేజ్‌మెంట్‌పై రవిశాస్త్రి ఫైర్!

Ravi Shastri: టీమిండియా యువ సంచలనం వైభవ్ సూర్యవంశీపై మాజీ కోచ్,...

ഇന്‍സ്റ്റഗ്രാമിലെ കുട്ടികളുടെ അശ്ലീല പരസ്യങ്ങള്‍; ഞെട്ടിക്കുന്ന റിപ്പോര്‍ട്ടുമായി ബി.ബി.സി, മെറ്റയ്ക്ക് കേന്ദ്രത്തിന്റെ നോട്ടീസ്

ന്യൂദല്‍ഹി: ഇന്‍സ്റ്റഗ്രാം പ്ലാറ്റ്ഫോം വഴി കുട്ടികള്‍ക്കെതിരെയുള്ള ലൈംഗികാതിക്രമ ദൃശ്യങ്ങള്‍ പ്രോത്സാഹിപ്പിക്കുന്ന പരസ്യങ്ങള്‍...

`தவெக-வில் இணையச் சொல்லி என்னை வற்புறுத்தினார்கள்!'- கைதான அனிதா ராதாகிருஷ்ணன் `பகீர்' குற்றச்சாட்டு

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூரில் கடந்த 20-ம் தேதி மறைந்த முன்னாள் முதல்வர்...