25
June, 2026

A News 365Times Venture

25
Thursday
June, 2026

A News 365Times Venture

"ஒரு பக்க மீசையை எடுத்துக் கொள்கிறேன்..!" – ஆதவ் அர்ஜூனாவுக்கு ரிப்ளை கொடுத்த ஆர்.எஸ்.பாரதி

Date:

சென்னை ஆர்.கே. நகரில் நடைபெற்ற தவெக-வின் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்ட அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, “மேயர் பிரியா, நமது சகோதரி பல்லவிக்கு ஒரு மெழுகுவர்த்தியைக் கூட கொடுக்காமல் அவமானப்படுத்தியிருக்கிறார்.

ஆதவ் அர்ஜுனா

இப்போது உதயநிதி ஸ்டாலினுக்கு ஒரு சவால் விடுகிறேன். இன்னும் 8 மாதங்களில் உள்ளாட்சித் தேர்தல் வரவிருக்கிறது. இதில் 25-ல் 1 மேயர் இடத்தையாவது வென்று காட்டுங்கள்” எனப் பேசியிருந்தார்.

இதற்கு திமுக-வைச் சேர்ந்த பலரும் ஆதவ் அர்ஜுனாவுக்குப் பதில் கொடுத்து வருகிறார்கள்.

இது தொடர்பாகச் செய்தியாளர்களிடம் பேசிய திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி, “ஸ்டாலினுக்கோ, உதயநிதி ஸ்டாலினுக்கோ சவால் விடும் தகுதி ஆதவ் அர்ஜுனாவுக்குக் கிடையாது.

ஒரு இடத்திலாவது ஜெயிக்க முடியுமா என ஆதவ் அர்ஜுனா கேட்கிறார். அவர் வரலாறு தெரியாமல் பேசிக்கொண்டிருக்கிறார்.

1984-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு, 1986-ஆம் ஆண்டில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது.

ஆர்.எஸ். பாரதி
ஆர்.எஸ். பாரதி

அதில் 102 நகராட்சிகளில், 90 நகராட்சிகளில் எங்களுடைய கூட்டணி வெற்றி பெற்றது. அதில் நானும் வெற்றி பெற்றிருந்தேன்.

மக்கள் இப்போதே, தெரியாமல் தவெக-வுக்கு வாக்குச் செலுத்திவிட்டோம் எனப் பேசத் தொடங்கிவிட்டனர்.

முடிந்தால் ஆறு மாதத்தில் உள்ளாட்சித் தேர்தலை நடத்துங்கள். ஒரு மேயர் பதவியையாவது தவெக வென்றால், நான் ஒரு பக்க மீசையை எடுத்துக் கொள்கிறேன்” எனக் கூறியிருக்கிறார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

പാശ്ചാത്യ ലോകം റഷ്യയുമായി യുദ്ധത്തിന് ശ്രമിക്കുന്നു; രാജ്യം തയ്യാറായിരിക്കണമെന്ന് പുട്ടിന്‍

മോസ്‌കോ: റഷ്യക്കെതിരെ പാശ്ചാത്യ രാജ്യങ്ങള്‍ സൈനിക ഏറ്റുമുട്ടലിനൊരുങ്ങുകയാണെന്ന് റഷ്യന്‍ പ്രസിഡന്റ് വ്‌ളാദിമിര്‍...

`அன்பில் மகேஸ் செய்திருப்பது அநாகரிகம்; விளைவுகளை சந்திக்க நேரிடும்'- அமைச்சர் விஸ்வநாதன் எச்சரிக்கை

மதுரை மேலூரில் மாணவர்கள் கலந்துகொண்ட மாரத்தான் நிகழ்வில் தமிழ்நாட்டின் உயர் கல்வித்துறை...

Vaibhav sooryavanshi: వైభవ్ జపం.! భారత్‌లోనే కాదు.. పాకిస్థాన్‌లోనూ బుడ్డోడి క్రేజ్ మాములుగా లేదుగా..

Vaibhav sooryavanshi: యంగ్ డైనమేట్ వైభవ్ సూర్యవంశీ గురించి ప్రత్యేకంగా చెప్పనక్కర్లేదు....

ಶಾಸಕ ಪ್ರದೀಪ್ ಈಶ್ವರ್ ಟ್ರಸ್ಟ್‌ಗೆ ನಿವೇಶನ ಹಂಚಿಕೆ: ಹೈಕೋರ್ಟ್ ಯಥಾಸ್ಥಿತಿ ಆದೇಶ

  ಬೆಂಗಳೂರು, ಜೂ.24: ಚಿಕ್ಕಬಳ್ಳಾಪುರ ಶಾಸಕ ಪ್ರದೀಪ್ ಈಶ್ವರ್ ಅವರಿಗೆ ಸೇರಿದ...