13
May, 2026

A News 365Times Venture

13
Wednesday
May, 2026

A News 365Times Venture

500 யூனிட்டுக்கு மேல் மின்சாரம் பயன்படுத்துவோருக்கு 100 யூனிட் இலவசம் தொடருமா? – தமிழக அரசு விளக்கம்

Date:

சென்னை ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று (10.05.2026) நடைபெற்ற பிரமாண்ட விழாவில், தமிழக பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர், ஜோசப் விஜய்க்கு முதலமைச்சராகப் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார். பதவியேற்ற சில நிமிடங்களிலேயே, தனது தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில் மூன்று மிக முக்கிய அரசாணைகளில் அவர் கையொப்பமிட்டார். 500 யூனிட் வரை மின்சாரம் பயன்படுத்தும் வீடுகளுக்கு, இரண்டு மாதங்களுக்கு 200 யூனிட் மின்சாரம் கட்டணமில்லாமல் வழங்கப்படும். இதன் மூலம் லட்சக்கணக்கான நடுத்தரக் குடும்பங்கள் பயன்பெறும் எனக் கூறப்படுகிறது. பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், புகார்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கவும் அதிநவீன வசதிகளுடன் கூடிய “சிங்கப் பெண் சிறப்பு அதிரடிப் படை” மாநிலம் முழுவதும் உருவாக்கப்படும்.

தமிழகத்தைப் போதைப்பொருள் இல்லாத மாநிலமாக மாற்ற, 37 மாவட்டங்கள் மற்றும் 9 மாநகரங்களில் மொத்தம் 65 போதைப்பொருள் தடுப்புப் படை (Anti-Narcotic Task Force) காவல் நிலையங்கள் அமைக்கப்படும் என்ற வாக்குறுதிகளை நிறைவேற்றும் கோப்புகளில் கையெழுத்திட்டார். அதேநேரம், 500 யூனிட்களுக்கு கீழ் மின்சாரம் பயன்படுத்தும் வீடுகளுக்கு 200 யூனிட் இலவச மின்சாரம் எனும் திட்டத்தில் மக்களிடத்திலேயே குழப்பம் ஏற்பட்டது. அதாவது 500 யூனிட்களுக்கு கீழ் 200 யூனிட் இலவசம் என்றால், 500 யூனிட்களுக்கு மேல் மின்சாரம் பயன்படுத்தும் பயனர்களுக்கு பழைய நடைமுறையான முதல் 100 யூனிட் இலவசம் கிடைக்காதோ எனும் சந்தேகங்கள் எழுந்தன.

இந்நிலையில், இது தொடர்பாக அரசாணையை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. அதில், 500 யூனிட்களுக்கு கீழ் மின்சாரம் பயன்படுத்தும் வீடுகளுக்கு 200 யூனிட் இலவச மின்சாரம் எனவும், 500 யூனிட்களுக்கு மேல் பயன்படுத்தும் வீடுகளுக்கு பழைய நடைமுறையான 100 யூனிட் மின்சாரம் தொடரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக டிடிவி தினகரன் தன் எக்ஸ் பக்கத்தில், “தேர்தல் அறிக்கையில் மாதத்திற்கு 200 யூனிட் கட்டணமில்லா மின்சாரம் என அறிவித்துவிட்டு தற்போது இரு மாதத்திற்கு 200 யூனிட் இலவசம் என அறிவிப்பதா ? – தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றிருப்பதை முழுமையாக செயல்படுத்திட தவெக அரசு முன்வர வேண்டும்.

மின்சாரம் (Representational Image)

சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் தகுதியுள்ள வீடுகளுக்கு ஒவ்வொரு மாதமும் 200 யூனிட் மின்சாரம் கட்டணமின்றி வழங்கப்படும் என வாக்குறுதியளித்த தமிழக வெற்றிக் கழகம், ஆட்சிக்கு வந்த முதல் நாளே இரண்டு மாதங்களுக்கு 200 யூனிட் மின்சாரம் விலையில்லாமல் வழங்கப்படும் என அறிவித்திருப்பது முன்பின் முரணாக உள்ளது.

தேர்தல் நேரத்தில் வாய்க்கு வந்தபடி வாக்குறுதிகளை வாரி வீசுவதையும், ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் அதனை செயல்படுத்த மறுப்பதையுமே அடிப்படையாக கொண்டிருந்த திமுக அரசின் நீட்சியாகவே இந்த அரசையும் பார்க்கவேண்டியுள்ளது. எனவே, இரு மாதங்களுக்கு 500 யூனிட் மின்சாரம் வரை பயன்படுத்தும் குடும்பங்களுக்கு 200 யூனிட் மின்சாரம் கட்டணமில்லாமல் வழங்கப்படும் என்ற உத்தரவை திருத்தி, மாதத்திற்கு 200 யூனிட் கட்டணமில்லா மின்சாரம் என்ற தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றிட முன்வர வேண்டும் என தவெக அரசை வலியுறுத்துகிறேன்.” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ബ്രാഹ്‌മണ പൂജാരിമാരുടെ ആധിപത്യത്തിനു കീഴടങ്ങാത്ത ‘ക്ഷേത്ര’ങ്ങളിലാണ് അദ്ദേഹം പോയത്; ജയരാജന്റെ കൊടുങ്ങല്ലൂര്‍ സന്ദര്‍ശനത്തില്‍ വിനില്‍ പോള്‍

കോഴിക്കോട്: ഗ്രന്ഥരചനയുടെ ഭാഗമായി കൊടുങ്ങല്ലൂര്‍ ക്ഷേത്രത്തിലെത്തിയ പി. ജയരാജനെതിരെയുള്ള വിമര്‍ശനങ്ങളില്‍ പ്രതികരണവുമായി...

IAS அதிகாரிகள் அதிரடி மாற்றம்: நிதித்துறை, டாஸ்மாக் நிறுவனத்திற்கு புதிய மேலாண் இயக்குநர்கள் நியமனம்

தமிழ்நாடு அரசு நிர்வாகத்தில் முக்கியப் பொறுப்புகளில் உள்ள ஐஏஎஸ் அதிகாரிகளை அதிரடியாக...

ರಾಜ್ಯದ ವಿಧಾನಸಭೆಗಳ ಕಾರ್ಯವಿಧಾನ, ನಡವಳಿಕೆಯ ಏಕರೂಪತೆಗೆ ಚರ್ಚೆ: ಸತೀಶ್ ಮಹನಾ

ಮೈಸೂರು ,ಮೇ,12,2026 (www.justkannada.in): ಎಲ್ಲಾ ರಾಜ್ಯದ ವಿಧಾನಸಭೆಗಳ ಕಾರ್ಯವಿಧಾನ ಹಾಗೂ...