29
April, 2026

A News 365Times Venture

29
Wednesday
April, 2026

A News 365Times Venture

UAE வெளியேறியது இருக்கட்டும்; OPEC என்றால் என்ன? அதன் பணி என்ன? – தெரிந்துகொள்வோம் வாங்க!

Date:

பெட்ரோலியம் ஏற்றுமதி செய்யும் நாடுகளின் அமைப்பில் (OPEC) இருந்து ஐக்கிய அரபு அமீரகம் வெளியேறியதே உலக அளவில் தற்போதைய ஹாட் டாப்பிக்.

இந்த அமைப்பில் இருந்தால் ஒரு நாளைக்கு 3.6 மில்லியன் பீப்பா எண்ணெய் தான் உற்பத்தி செய்ய முடியும்… 2027-ம் ஆண்டில் ஒரு நாளைக்கு 5 மில்லியன் பீப்பா எண்ணெய் உற்பத்தி செய்வது ஐக்கிய அரபு அமீரகத்தின் இலக்கு. இதனால் தான், அந்த நாடு OPEC அமைப்பில் இருந்து வெளியேறுகிறது என்று கூறப்படுகிறது.

ஐக்கிய அரபு அமீரகமோ, ‘இது கொள்கை ரீதியிலான முடிவு’ என்று கடந்துவிட்டது.

OPEC

இதெல்லாம் இருக்கட்டும்… OPEC என்றால் என்ன என்பதை தெரிந்துகொள்வோம்… வாங்க!

பெட்ரோலியம் ஏற்றுமதி செய்யும் நாடுகளின் அமைப்பு என்பதன் சுருக்கமே OPEC. 1960-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் இந்த அமைப்பு நிறுவப்பட்டது.

இந்த அமைப்பை நிறுவிய ஐந்து நாடுகள் – ஈரான், ஈராக், குவைத், சவுதி அரேபியா மற்றும் வெனிசுலா.

பெயரில் இருப்பதுபோலவே, பெட்ரோலியம் ஏற்றுமதி செய்யும் சில நாடுகளின் அமைப்பே இந்த அமைப்பு.

ஏன் இந்த அமைப்பு?

இந்த அமைப்பு தொடங்கப்படுவதற்கு முன்பு, எண்ணெய் சந்தையை மேற்கத்திய நாடுகளைச் சேர்ந்த ஒரு சில எண்ணெய் நிறுவனங்கள் தான் கட்டுக்குள் வைத்திருந்தன.

அவை தான் எண்ணெய் உற்பத்தியையும், எண்ணெயின் விலையையும் முடிவு செய்து வந்தன.

எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகள் தான் எண்ணெய் சந்தையை நிர்ணயிக்க வேண்டும் என்கிற கொள்கை அடிப்படையில் இந்த அமைப்பு தொடங்கப்பட்டது.

எண்ணெய் உற்பத்தியாளர்களிடம் எண்ணெய் சந்தை இருக்கும் போது, அவர்கள் உற்பத்திக்கு ஏற்ற விலையை நிர்ணயிக்க முடியும்… எண்ணெய் சப்ளையை தொடர்ச்சியாக வைத்திருக்க முடியும் என முடிவு செய்யப்பட்டது.

கச்சா எண்ணெய் - OPEC
கச்சா எண்ணெய் – OPEC

OPEC-ன் பணி என்ன?

எண்ணெய் சந்தையையும், எண்ணெய் உற்பத்தி நாடுகளையும் வரைமுறைப்படுத்துவதே இந்த அமைப்பின் முக்கிய பணி.

மேலும், ஒவ்வொரு எண்ணெய் உற்பத்தி நாடும் எவ்வளவு எண்ணெய் உற்பத்தி செய்ய வேண்டும் என்பதையும் இந்த அமைப்பே முடிவு செய்யும்.

இதன் மூலம் அந்தந்த நாட்டிற்கு ஏற்ற உற்பத்தியும் நடக்கும். உலகத்திற்கு சரியான அளவிலான எண்ணெய் சப்ளையும் இருக்கும்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

‘ഇങ്ങനെയാണ് അവര്‍ തെരഞ്ഞെടുപ്പ് ജയിക്കുന്നത്’; തൃണമൂല്‍ കോണ്‍ഗ്രസ് വോട്ടിങ് മെഷീനില്‍ കൃത്രിമം കാണിച്ചെന്ന് ബി.ജെ.പി

കൊല്‍ക്കത്ത: പശ്ചിമ ബംഗാള്‍ നിയമസഭാ തെരഞ്ഞെടുപ്പില്‍ തൃണമൂല്‍ കോണ്‍ഗ്രസ് വോട്ടിങ് മെഷീനില്‍...

Supplementary exams: పది ఫెయిల్ అయిన విద్యార్థులకు అలర్ట్.. జూన్ 5 నుంచి పరీక్షలు..

పదో తరగతి ఫలితాల వెల్లడి తర్వాత, ఉత్తీర్ణత సాధించని విద్యార్థుల కోసం...

ಸಿದ್ದರಾಮಯ್ಯ ಅವರ ಶಕ್ತಿ ಪ್ರದರ್ಶನ ಅಲ್ಲ, ಸಿದ್ದರಾಮಯ್ಯ ಅವರೇ ಒಂದು ಶಕ್ತಿ – ಸಚಿವ HC ಮಹದೇವಪ್ಪ

ನವದೆಹಲಿ,ಏಪ್ರಿಲ್,29,2026 (www.justkannada.in): ಸಿದ್ದರಾಮಯ್ಯ ಅವರ ಶಕ್ತಿ ಪ್ರದರ್ಶನ ಅಲ್ಲ, ಸಿದ್ದರಾಮಯ್ಯ...

സംസ്ഥാനത്ത് ലോഡ് ഷെഡിങ്ങില്ല, ലോഡ് കൂടുമ്പോ ട്രിപ്പാകുന്നു: കെ കൃഷ്ണൻകുട്ടി

തിരുവനന്തപുരം: സംസ്ഥാനത്ത് നിലവിൽ ലോഡ് ഷെഡിങ്ങിലെന്നും ഉപഭോഗം അധികമായതിനാൽ ലോഡ് കൂടി...