22
April, 2026

A News 365Times Venture

22
Wednesday
April, 2026

A News 365Times Venture

தமிழகத்தில் பறக்கும் படை வேட்டையில் சிக்கியது இத்தனை கோடிகளா? – அர்ச்சனா பட்நாயக் வெளியிட்ட தகவல்

Date:

தமிழ்நாட்டில் இதுவரை பறிமுதல் செய்யப்பட்ட பரிசுப்பொருட்கள் மற்றும் பணம் குறித்த விவரங்களை தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்திருக்கிறார்.

தமிழக சட்டமன்ற தேர்தல் நாளை (ஏப்ரல்.23) நடைபெற இருக்கிறது. தமிழ்நாட்டின் தேர்தலில் இம்முறை தி.மு.க, அ.தி.மு.க, த.வெ.க, நா.த.க என பலமான நான்கு முனைப் போட்டி நிலவுகிறது.

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்

முதல்வர் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி, விஜய், சீமான் உள்ளிட்ட தலைவர்களும், பிரதமர் மோடி, ராகுல் காந்தி போன்ற தேசியத் தலைவர்களும் தமிழ்நாடு முழுவதும் தீவிரமாக வாக்குச் சேகரித்தனர்.

கடந்த 30 நாட்களுக்கு மேலாக தேர்தல் பிரசாரங்கள் அனல் பறந்த நிலையில் மாலை 6 மணியுடன் தேர்தல் பிரசாரம் நிறைவடைந்தது.

இந்நிலையில் தமிழ்நாட்டில் இதுவரை பறிமுதல் செய்யப்பட்ட பரிசுப்பொருட்கள் மற்றும் பணம் குறித்த விவரங்களை தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்திருக்கிறார்.

செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், “தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் 4.81 லட்சம் தபால் வாக்குகள் பதிவாகியுள்ளது.

முதல்முறை வாக்காளர்கள் 14.59 லட்சம் பேர் உள்ளனர். தேர்தலுக்காக 1,06,418 வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன.

தமிழ்நாடு முழுவதும் 75,064 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

அர்ச்சனா பட்நாயக் - தமிழக தலைமை தேர்தல் அதிகாரி
அர்ச்சனா பட்நாயக் – தமிழக தலைமை தேர்தல் அதிகாரி

325 வாக்குச்சாவடிகளை பெண்களே நிர்வகிக்கவுள்ளனர்; 75 வாக்குச்சாவடிகளை இளைஞர்கள் நிர்வகிக்கவுள்ளனர்.

தமிழ்நாடு முழுவதும் 62 இடங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெறும். தமிழ்நாட்டில் 300 கம்பெனி துணை ராணுவப் படையினர் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

தமிழ்நாட்டில் இதுவரை ரூ.1,262 கோடி மதிப்பிலான பரிசுப்பொருட்கள் மற்றும் 543 கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது” என்று தெரிவித்திருக்கிறார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

എന്തിനാണ് തീകൊണ്ട് കളിക്കുന്ന ഇത്തരം പൂരങ്ങള്‍; വെടിക്കെട്ട് ദുരന്തത്തില്‍ ആര്‍. ശ്രീലേഖ

തിരുവനന്തപുരം: തൃശ്ശൂര്‍മുണ്ടത്തിക്കോട് വെടിക്കെട്ട് അപകടത്തിന്റെ പശ്ചാത്തലത്തില്‍ പൂരങ്ങളിലെ അപകടകരമായ ആഘോഷങ്ങള്‍ക്കെതിരെ വിമര്‍ശനവുമായി...

Kharge vs BJP: మోడీ టెర్రరిస్ట్.. ఖర్గే వ్యాఖ్యలపై ఈసీకి బీజేపీ ఫిర్యాదు

ప్రధాని మోడీని ఉద్దేశించి కాంగ్రెస్ అధ్యక్షుడు మల్లిఖార్జున ఖర్గే చేసిన వ్యాఖ్యలు...

ಪ್ರಧಾನಿ ಮೋದಿ ವಿರುದ್ದ ಆಕ್ಷೇಪಾರ್ಹ ಹೇಳಿಕೆ: ಖರ್ಗೆ ಅವರನ್ನ ವಜಾ ಮಾಡಿ-ಆರ್.ಅಶೋಕ್

ಬೆಂಗಳೂರು,ಏಪ್ರಿಲ್,22,2026 (www.justkannada.in): ಪ್ರಧಾನಿ ಮೋದಿ ಅವರ ಬಗ್ಗೆ ಅಕ್ಷೇಪಾರ್ಹ ಹೇಳಿಕೆ...