22
April, 2026

A News 365Times Venture

22
Wednesday
April, 2026

A News 365Times Venture

`கோவை தெற்கு தொகுதி தேர்தல் ரத்தா?' – மாவட்ட ஆட்சியர் விளக்கம்!

Date:

கோவை தெற்கு தொகுதியில் தி.மு.க. சார்பில் செந்தில் பாலாஜியும், அ.தி.மு.க. சார்பில் அம்மன் அர்ச்சுணனும் போட்டியிடுகின்றனர். தி.மு.க-வினர் வாக்காளர்களுக்கு ரூ.5 ஆயிரமும், அ.தி.மு.க-வினர் ஆயிரம் ரூபாயும் பணப்பட்டுவாடா செய்து வருவதாக கூறப்படுகிறது. மேலும் பல்வேறு இடங்களில் பணப்பட்டுவாடா செய்ததாக தி.மு.க-வினருக்கு எதிராக, அ.தி.மு.க, நாம் தமிழர் கட்சியினர் போராட்டங்களிலும் ஈடுபட்டனர். குறிப்பாக ராமநாதபுரம் 80 அடி சாலையில் தி.மு.க, அ.தி.மு.க-வினர் இடையே அடிதடி நடந்த நிலையில், போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர்.

இதனிடையே பணப்பட்டுவாடா புகார் காரணமாக கோவை தெற்கு தொகுதியில் தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் மற்றும் கோவை தெற்கு தொகுதி சுயேச்சை வேட்பாளர் வேல்முருகன் ஆகியோர் தேர்தல் அதிகாரிகளிடம் புகார் அளித்தனர். இந்த நிலையில் கோவை தெற்கு தொகுதியில் தேர்தலை ரத்து செய்ய அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருவதாக ஒரு தகவல் பரவி வருகிறது. இதற்கு கோவை மாவட்ட ஆட்சியரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான பவன் குமார் மறுப்பு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறியதாவது, “சட்டமன்ற பொது தேர்தல் தொடர்பாக அதிகாரப்பூர்வமில்லாத செய்திகளை வதந்திகளாக பரப்பி வாக்காளர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தும் முயற்சியில் யாரும் ஈடுபட வேண்டாம்” என தெரிவித்துள்ளார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ഇസ്രഈൽ മനുഷ്യാവകാശങ്ങൾ ലംഘിച്ചു, യൂറോപ്യൻ യൂണിയനുമായുള്ള കരാർ മരവിപ്പിക്കണം: അയർലന്റ്

ഡബ്ലിൻ: മനുഷ്യാവകാശങ്ങൾ നഗ്നമായി ലംഘിക്കുന്ന ഇസ്രഈലിനെതിരെ യൂറോപ്യൻ യൂണിയൻ നടപടിയെടുക്കണമെന്ന് അയർലൻഡ്...

OTR: సీఎం ప్రెస్ మీట్ లో NDSA ఛైర్మన్ ఉండటంపై బీజేపీ అభ్యంతరం

OTR: NDSA ఛైర్మన్‌ విషయంలో ఏదో తేడా కొడుతోందా? ఆయన...

ಮೈಸೂರು: ರೈತಮುಖಂಡರಿಂದ ಪ್ರತಿಭಟನೆ: ಡಿಸಿ ಕಚೇರಿಗೆ ಮುತ್ತಿಗೆಗೆ ಯತ್ನ

ಮೈಸೂರು,ಏಪ್ರಿಲ್,21,2026 (www.justkannada.in): ರಾಜ್ಯ ಸರ್ಕಾರ ನಿಗದಿ ಮಾಡಿರುವ ಹೆಚ್ಚುವರಿ ಹಣ...

സ്ത്രീ സംവരണം ബി.ജെ.പി വൈകിപ്പിക്കുന്നു, സോണിയയുടെയും രാഹുലിന്റെയും പഴയ കത്ത് പുറത്തുവിട്ട് കോൺഗ്രസ്

ന്യൂ ദൽഹി: സ്ത്രീ സംവരണം നടപ്പിലാക്കുന്നത് മനപൂർവ്വം വൈകിപ്പിക്കാൻ പ്രധാനമന്ത്രി നരേന്ദ്ര...