31
May, 2026

A News 365Times Venture

31
Sunday
May, 2026

A News 365Times Venture

Vijay: "நான் யாருக்கும் அறிவுரை சொல்வதில்லை; ஆனால் விஜய் பொறுத்தவரையில்…" – பவண் கல்யாண்

Date:

ஆந்திராவின் துணை முதல்வரும், ஜனசேனா கட்சியின் தலைவருமான பவன் கல்யாண், தவெக தலைவர் விஜய் பற்றி பேசியிருக்கிறார்.

தவெக தலைவர் விஜய்

சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் விஜய், தமிழகத்தின் வெவ்வேறு பகுதிகளுக்குப் பயணித்து பிரசாரம் செய்து வருகிறார்.

சமீபத்தில் பவன் கல்யாண், Gen Z இளைஞர்களுடன் உரையாடியபோது, “விஜய் அரசியலில் சமாளிப்பாரா?” எனக் கேள்வி கேட்கப்பட்டது. இதற்கான பதிலை Gen Z இளைஞர்களிடம் பவன் கல்யாண் பகிர்ந்திருக்கிறார்.

அவர், “நான் பொதுவாக யாருக்கும் அறிவுரை சொல்வதில்லை. எல்லோரும் தங்கள் வேலையைச் செய்யும் திறன் கொண்டவர்கள்தான்.

ஆனால் விஜய் பொறுத்தவரையில், அவர் மிகப் பெரிய நட்சத்திரம். அவர் எந்தப் பொறுப்பில் இருந்தாலும், மக்களுக்கு சேவை செய்வது நல்ல விஷயம் என்றே நினைக்கிறேன்” எனத் தெரிவித்தார்.

விஜய் - பவன் கல்யாண்
விஜய் – பவன் கல்யாண்

கடந்த சில நாட்களுக்கு முன்பு, என்.டி.ஏ கூட்டணிக்குள் தவெக-வை கொண்டு வருவதற்கு பவன் கல்யாணுக்கும் விஜய்க்கும் இடையே பேச்சுவார்த்தை நடந்ததாக தகவல்கள் பேசப்பட்டன.

ஆனால், பவன் கல்யாண் அதை மறுத்து, “நான் விஜயுடன் கடந்த 10 ஆண்டுகளாகவே பேசவே இல்லை. என்.டி.ஏ கூட்டணி பற்றி பேச்சுவார்த்தை நடத்தவும் இல்லை” என்று கூறியிருந்தார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

RCB vs GT Final: గుజరాత్ బ్యాటింగ్.. బెంగళూరు బౌలింగ్.. గుజరాత్ టీంలో కీలక మార్పులు..

ఐపీఎల్ 2026 సీజన్ మహా సంగ్రామానికి సర్వం సిద్ధమైంది. అహ్మదాబాద్‌లోని ప్రపంచంలోనే...

ಡಿಸಿಎಂ ಹುದ್ದೆ: ಹೈಕಮಾಂಡ್ ನಿರ್ಧಾರಕ್ಕೆ ಬದ್ದ- ಶಾಸಕ ಕೆ.ಎಚ್ ಮುನಿಯಪ್ಪ

ಬೆಂಗಳೂರು,ಮೇ,30,2026 (www.justkannada.in):  ತಮಗೆ ಡಿಸಿಎಂ ಹುದ್ದೆ ನೀಡುವಂತೆ ತಮ್ಮ ಕಾರ್ಯಕರ್ತರು...

"நான் நினைத்திருந்தால் துணை முதல்வர் பதவியை விஜய் கொடுத்திருப்பார்; ஆனால்…" – பிரேமலதா

தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா தலைமையில் மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் இன்று...