25
June, 2026

A News 365Times Venture

25
Thursday
June, 2026

A News 365Times Venture

“சபரிமலை தங்கம் மோசடியை மறைக்கவே, நடிகர்கள் வீட்டில் ED ரெய்டு'' – சர்ச்சையை கிளப்பிய சுரேஷ்கோபி

Date:

பூட்டான் நாட்டில் இருந்து கடத்திக்கொண்டுவரப்பட்ட கார்களை வாங்கிய விவகாரத்தில் மலையாள நடிகர்கள் பிரித்விராஜ், துல்கர் சல்மான் ஆகியோரது வீடுகளில் இ.டி ரெய்டு நடத்தியது. இந்த நிலையில் கேரளம் முழுவதும் கலந்துகொண்டு விவாதம் என்ற பெயரில் பொதுமக்களுடன் உரையாடும் நிகழ்வை நடத்திவரும் மத்திய அமைச்சர் சுரேஷ்கோபி பாலக்காடு மாவட்டம் மலம்புழாவில் அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.

அப்போது சபரிமலை கோயில் துவார பாலகர்கள் சிலைகளின் தங்க கவசங்களில் நடந்துள்ள மோசடி குறித்தும், நடிகர்கள் வீட்டில் இ.டி ரெய்டு நடத்தப்பட்ட விவகாரங்கள் குறித்து பொதுமக்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதிலளித்து பேசிய சுரேஷ்கோபி, “சபரிமலை தங்கம் மோசடி விவகாரத்தை மறைப்பதற்காக இரண்டு நடிகர்களை தராசில் வைத்து அளவிடுவதற்கு கேரள மக்களிடம் விட்டுள்ளார்கள். என்.ஐ.ஏ, இ.டி ஆகியவை ரெய்டு நடத்துவதுடன், விசாரணை நடத்துகிறது. மத்திய அமைச்சரவையில் இருந்துகொண்டு நான் அதிகமாக எதுவும் கூறவிரும்பவில்லை.”

சபரிமலை துவார பாலகர்கள்

ஆனாலும், கேரள அரசை பாதிக்கும் விஷயங்கள் வரும்போது மக்களிடம் பிரபலமானவர்களை களங்கப்படுத்த போலீசை பயன்படுத்துவது வழக்கமாக உள்ளது. இன்னும் இதுபோன்று நடக்கும். சபரிமலை தங்க கவசங்கள் திருடப்பட்ட விவகாரத்தை மறைப்பதற்காக இதுபோன்று செய்கிறார்கள். ஒரு அரசியலுக்கும் உட்படாதவர் ஐயப்பன்.

சபரிமலையில் நடந்த விஷயத்துக்கு பெரிய தண்டனை பெறவேண்டியது வரும். சபரிமலை தங்கம் விஷயத்தில் பெரிய மாற்றங்கள் கேரளாவில் நடக்கப்போகின்றன.

மத்திய அமைச்சர் சுரேஷ்கோபி

ஐயப்பன் மனிதராகவும் உள்ளார். எனது மூத்த சகோதரராக ஐயப்பனைப் பார்க்கிறேன். இறைவனின் கணக்குப் புத்தகத்தில் மட்டுமே தவறுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன” என்றார்.

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள இ.டி நடிகர்கள் வீட்டில் ரெய்டு நடத்தியிருக்கும் நிலையில், கேரள சி.பி.எம் அரசுக்கு எதிராகக் கிளம்பியிருக்கும் சபரிமலை தங்கக் கவசம் திருட்டு சம்பந்தமான விவகாரத்தை மறைப்பதற்காக நடிகர்கள் வீட்டில் ரெய்டு நடப்பதாக சுரேஷ்கோபி கூறியிருப்பது விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

എഫ്.സി.ആര്‍.എ ഭേദഗതിയെ വിമര്‍ശിച്ച്‌ ക്രൈസ്തവ സഭകള്‍; ജൂണ്‍ 28ന് രാജ്യവ്യാപക പ്രതിഷേധം

ന്യൂദല്‍ഹി: കേന്ദ്രസര്‍ക്കാര്‍ വിദേശസംഭാവനാ നിയന്ത്രണ ചട്ടത്തില്‍ (എഫ്.സി.ആര്‍.എ) വരുത്തിയ ഭേദഗതിക്കെതിരെ വിമര്‍ശനവുമായി...

ராமதாஸ் – அன்புமணி: `நீங்க எல்லோரும் ஒன்னா நல்லா இருங்க' – பாச சந்திப்பை புறக்கணித்த ஸ்ரீகாந்தி?

பா.ம.க-வில் மருத்துவர் ராமதாஸுக்கும், அவரது மகன் அன்புமணிக்கும் இடையேயான மோதல் ஒன்றரை...

52dB ANC, 54 గంటల బ్యాటరీ బ్యాకప్‌తో భారత్‌లో లాంచ్ అయిన OnePlus Nord Buds 4.. ధర ఎంతంటే.?

OnePlus Nord Buds 4 Launched: ప్రముఖ స్మార్ట్‌ఫోన్ తయారీ సంస్థ...

ರೈತರ ಹಿತರಕ್ಷಣೆಗೆ ಮೂರೂ ರಾಜ್ಯಗಳ ಒಮ್ಮತದ ಐತಿಹಾಸಿಕ ತೀರ್ಮಾನ: ಸಿಎಂ ಡಿ.ಕೆ. ಶಿವಕುಮಾರ್

ಕೊಪ್ಪಳ, ಜೂನ್,25,2026 (www.justkannada.in):  “ತುಂಗಭದ್ರಾ ನದಿ ಪಾತ್ರದ ರೈತರ ಹಿತರಕ್ಷಣೆಗೆ...