24
September, 2026

A News 365Times Venture

24
Thursday
September, 2026

A News 365Times Venture

'தமிழக அரசிடமிருந்து ஊதியம் வேண்டாம்'- மாநில உரிமைகளைப் பாதுகாக்கும் குழு தலைவர் குரியன் ஜோசப்

Date:

மாநில உரிமைகளை மீட்டெடுக்க அமைக்கப்பட்ட குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி குரியன் ஜோசப் தமிழக அரசிடமிருந்து ஊதியம் பெற மாட்டேன் என்று தெரிவித்திருகிறார்.

ஸ்டாலின்

சட்டப்பேரவையில் மு.க.ஸ்டாலின், ‘மத்திய, மாநில அரசுகளுக்கு இடையிலான உறவுகளை மேம்படுத்தவும், மாநில உரிமைகளை மீட்டெடுக்கவும் தேவையான ஆலோசனைகள், பரிந்துரைகளை வழங்க நீதிபதி குரியன் ஜோசப் தலைமையில் ஒரு உயர்நிலை குழு அமைக்கப்படுகிறது.

இந்த குழுவில் அசோக் வர்தன் ஷெட்டி, பேராசிரியர் நாகநாதன் ஆகியோர் இடம் பெறுவார்கள். இந்த குழு ஜனவரி மாதத்திற்குள் அறிக்கை தாக்கல் செய்யும்’ என அறிவித்தார்.

இந்நிலையில் குழு தலைவராக நியமிக்கப்பட்டது குறித்துப் பேசிய குரியன் ஜோசப், “ஒன்றிய – மாநில அரசுகளின் நிதி சார்ந்த கொள்கைகள், நிர்வகிக்கும் அதிகாரங்கள் குறித்து ஆய்வு செய்வது காலத்தின் கட்டாயம். இதற்கு என்னைத் தேர்வு செய்ததைப் பெருமையாகக் கருதுகிறேன்.

குரியன் ஜோசப்
குரியன் ஜோசப்

இந்தப் பணிக்காக எந்த ஊதியமும் பெற மாட்டேன் என முதலமைச்சர் ஸ்டாலினிடம் வேண்டுகோளாக முன்வைத்தேன். அவரும் அதை ஏற்றுக்கொண்டார்” என்று தெரிவித்திருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3OITqxs

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

“தவெக வெற்றி பெறுவதால் எந்த ஆட்சி மாற்றமும் வரப்போவதில்லை" – சிபிஎம் சண்முகம்

மதுராந்தகம், தாராபுரம் சட்டமன்றத் தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெறவிருக்கிறது. தவெக- ஆட்சி அமைக்க...

AP Local Body Elections: స్థానిక ఎన్నికలకు మరో ముందడుగు..

AP Local Body Elections: ఆంధ్రప్రదేశ్‌లో ఇప్పటికే స్థానిక సంస్థల వాతావరణం...

ട്രംപ്-ഷി ധാരണയ്ക്ക് പിന്നാലെ ഏഷ്യയില്‍ സ്വാധീനം ശക്തമാക്കാന്‍ ചൈന

ബീജിങ്: അമേരിക്കന്‍ പ്രസിഡന്റ് ഡൊണാള്‍ഡ് ട്രംപും ചൈനീസ് പ്രസിഡന്റ് ഷി ജിന്‍പിങ്ങും...

“ஈரானைத் தவிர்க்க ‘IMEC’ பொருளாதாரப் பாதை" – முழு ஆதரவு தெரிவித்த ட்ரம்ப்

மத்திய கிழக்கு நாடுகளின் மீது ஈரான் நடத்தி வரும் கடல்வழித் தாக்குதல்களை...