11
May, 2026

A News 365Times Venture

11
Monday
May, 2026

A News 365Times Venture

`மாநில அரசு, மத்திய அரசின் விளம்பர தூதர்கள்போல செயல்பட இயலாது' – மதுரையில் பினராயி விஜயன் பேச்சு

Date:

“கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரான மத்திய அரசின் நடவடிக்கை அதிகரித்து வருவது மிகப்பெரும் அச்சுறுத்தலாக உள்ளது..” என்று கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் பேசியுள்ளார்.

மு.க.ஸ்டாலின், பினராயி விஜயன்

மதுரையில் நடந்து வரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24-வது அகில இந்திய மாநாட்டின் இரண்டாம் நாள் நிகழ்வாக ‘கூட்டாட்சிக் கோட்பாடே இந்தியாவின் வலிமை’ என்ற சிறப்புக் கருத்தரங்கம் மதுரை ராஜா முத்தையா மன்றத்தில் நடந்தது. இதில் மார்க்சிஸ்ட் கம்யூனி்ஸ்ட் கட்சி ஒருங்கிணைப்பாளர் பிரகாஷ் காரத், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், கர்நாடக அமைச்சர் சுதாகர் ஆகியோர் பங்கேற்றனர்.

கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் பேசும்போது, “இந்த மாநாட்டில் பேசுவது மகிழ்ச்சி அளிக்கிறது. கூட்டாட்சி தத்துவம் பாதுகாக்கப்படுவது மிகவும் முக்கியமானது, அது குறித்து பேசுவதும் முக்கியமானது.

2000-ம் ஆண்டின் தொடக்கத்தில் அளிக்கப்பட்ட சர்க்காரியா குழுவின் அறிக்கையில் பல நல்ல முன்மொழிவுகள் இருந்தும் அவை எதுவும் நடைமுறைப்படுத்தப்படவில்லை.

கூட்டாட்சி தத்துவம், நிதி அமைப்பால் அங்கீகரிக்கப்பட்ட அடிப்படைக் கட்டமைப்பு ஆகும். மாநில அரசு, மத்திய அரசின் விளம்பரதாரர்கள்போல செயல்பட இயலாது, இது கூட்டாட்சி தத்துவத்திற்கும் ஜனநாயகத்திற்கும் எதிரானது. இந்த நடவடிக்கைக்கு எதிராக நம்முடைய குரலை உயர்த்த வேண்டும்.

ஜிஎஸ்டி வரியை பொறுத்தவரை மாநிலங்களுக்கு உரிய நியாயம் வழங்கப்படுவதில்லை. மத்திய அரசு பொது விதிகளை உருவாக்கினாலும் அதனை சுமப்பது மாநில அரசுகள்தான். மத்திய அரசு தொடர்ச்சியாக மிகவும் வசதியானவர்களுக்கான சலுகைகளை வழங்கி வருகிறது.

மு.க.ஸ்டாலின், பினராயி விஜயன்

கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரான மத்திய அரசின் நடவடிக்கை அதிகரித்து வருவதால் மிகப்பெரும் அச்சுறுத்தலாக உள்ளது. மாநில அரசுகள் நிறைவேற்றி அனுப்பும் சட்டங்களை காரணமே இல்லாமல் மத்திய அரசு கிடப்பில் போடுகிறது. இது ஜனநாயகத்திற்கு விரோதமான நடவடிக்கை. மாநில அரசின் பெரும்பாலான விஷயங்களுக்கு உச்ச நீதிமன்றத்தை நாட வேண்டியுள்ளது

உயர் கல்வி, மாநில அரசுகள் எதிர்கொள்ளும் முக்கியமான பிரச்னையாக உள்ளது. சங் பரிவார அமைப்புகள் உயர் கல்வி நிலையங்களில் தங்களது ஆதிக்கத்தை செலுத்தத் தொடங்குகின்றன.

உயர் கல்வி அமைப்புகளுக்கு முறையான நிதி வழங்கப்படுவதில்லை, மாநில பல்கலைக்கழகங்களில் மாநில அரசோடு விவாதிக்காமல் துணைவேந்தர்கள் நியமனம் செய்யப்படுகின்றனர். ஒரே நாடு, ஒரே தேர்தல் எனும் நடைமுறையை கொண்டுவர மத்திய அரசு சட்ட மசோதாக்களையும் நிறைவேற்றி வருகிறது.

தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கை மாநில அரசுகளின் ஆலோசனைகளை பெறாமல் செய்யப்படுகிறது. இதனால் நாடாளுமன்றத்தில் பெரிய அளவுக்கு தென் மாநிலங்களின் பிரதிநிதத்துவம் குறையும். தொகுதிகளை குறைக்கும் முயற்சியால் உரிமைகளை, தேவைகளை பெறுவதில் சிக்கல் எழும் நிலை உருவாகும்.

கூட்டாட்சி தத்துவம், ஜனநாயகத்தை பாதுகாக்கும் முயற்சிகளை முன்னெடுக்க வேண்டும். இது போன்ற மாநாடுகள் பொதுமக்களுக்கான புரிதலை அதிகப்படுத்தும் என நம்புகிறேன்” என்றார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ഇന്ധന ഉപയോഗം കുറയ്ക്കണം, വർക്ക് ഫ്രം ഹോമിന് മുൻഗണന നൽകണം; ആഗോള പ്രതിസന്ധിക്കിടയിൽ ജനങ്ങളോട് മോദി

ഹൈദരാബാദ്: പശ്ചിമേഷ്യൻ യുദ്ധത്തെത്തുടർന്നുണ്ടായ ആഗോള ഇന്ധന പ്രതിസന്ധിയുടെ പശ്ചാത്തലത്തിൽ, വിഭവങ്ങൾ മിതമായി...

`அப்பாவை அரசியலுக்கு வராதனு சொன்னார் எம்.ஜி.ஆர்; விஜய் சார் என்னை அரசியலுக்கு வரவச்சிட்டார்'- தினேஷ்

தமிழ்நாட்டின் புதிய முதலமைச்சராக தவெக தலைவர் விஜய் பதவி ஏற்றுள்ள நிலையில்,...

PM Modi: మే 15 లోపు పెట్రోల్, డీజిల్ ధరలు పెరుగొచ్చా.. మోడీ వ్యాఖ్యల ఆంతర్యం ఏమిటి.?

PM Modi: తెలంగాణ నుంచి దేశ ప్రజలకు ప్రధాని నరేంద్రమోడీ ఆదివారం...

നാഗ്പൂരിലെ നിര്‍ദേശം സ്വീകരിച്ച് പ്രവര്‍ത്തിക്കുന്ന പാര്‍ട്ടിയല്ല കോണ്‍ഗ്രസ്; പ്രധാനമന്ത്രിയുടെ പരിഹാസത്തിന് ചെന്നിത്തലയുടെ മറുപടി

തിരുവനന്തപുരം: കേരളത്തില്‍ മുഖ്യമന്ത്രിയെ നിശ്ചയിക്കുന്നതിലെ കാലതാമസത്തെ പരിഹസിച്ച പ്രധാനമന്ത്രി നരേന്ദ്ര മോദിക്ക്...