29
June, 2026

A News 365Times Venture

29
Monday
June, 2026

A News 365Times Venture

உள்நோக்கத்துடன் நடவடிக்கை?– லஞ்ச ஒழிப்பு துறை ஆய்வாளருக்கு விதிக்கப்பட்ட சஸ்பென்ஷனுக்கு இடைக்கால தடை

Date:

லஞ்ச ஒழிப்பு துறையில் பணியாற்றி வந்த ஆய்வாளர் விமலா, ஒரு அரசு அதிகாரி மீதான ஆரம்பகட்ட கண்காணிப்பு விசாரணையை மேற்கொண்டபோது, அவரிடம் லஞ்சம் கேட்டதாக உள்துறை கண்காணிப்பில் தெரியவந்ததாக கூறப்படுகிறது. இந்த விவகாரம் குறித்து டிஐஜி என்.தேவராணி, லஞ்ச ஒழிப்பு துறை இயக்குநர் அருணின் கவனத்திற்கு கொண்டு சென்றதைத் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டது.

விசாரணை அறிக்கையின் அடிப்படையில் ஆய்வாளர் விமலா இடைநீக்கம் செய்யப்பட்டார். மேலும், இந்த விவகாரத்தில் தொடர்பு இருப்பதாக சந்தேகிக்கப்பட்ட டிஎஸ்பி ஜாய் நீலகிரி மாவட்டத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.

இதற்கிடையில், இன்ஸ்பெக்டர் ராஜலட்சுமி மீது வழக்குப் பதிவு செய்தது தொடர்பாகவும் தன்னை இடைநீக்கம் செய்தது குறித்தும் விமலா தாக்கல் செய்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் ஆவணங்களை பரிசீலித்தது.

நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்களின்படி, ராஜலட்சுமி மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யுமாறு கண்காணிப்புத் துறை அதிகாரிகளே விமலாவுக்கு உத்தரவிட்டதுடன், எஃப் ஐ ஆர் வரைவைத் தயாரிக்கவும் அறிவுறுத்தியிருந்தனர்.

சென்னை உயர் நீதிமன்றம்

பின்னர் அந்த வரைவு லஞ்ச ஒழிப்பு துறை இயக்குநரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டதுடன், 12.02.2026 அன்று காவல் கண்காணிப்பாளர் ஆய்வு செய்து சில திருத்தங்களை மேற்கொண்ட பிறகே முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, ஜூன் 17 அன்று பிறப்பிக்கப்பட்ட இடைநீக்க உத்தரவுக்கு ஜூலை 9 வரை இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், எதிர்மனுதாரர்கள் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கை ஜூலை 9-ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ചരിത്രകാരന്‍മാര്‍ ഇന്ത്യയെ 2014ന് മുമ്പും ശേഷവും എന്നിങ്ങനെ വിഭജിക്കും: അമിത് ഷാ

ഗാന്ധിനഗര്‍: ഭാവിയിലെ ചരിത്രകാരന്മാര്‍ ഇന്ത്യയുടെ വളര്‍ച്ചയെ 2014ന് മുമ്പും അതിനുശേഷവും എന്നിങ്ങനെ...

அமைச்சர் சரத் குமார் வீடியோ: “விளக்கமளிக்க வேண்டும்; இல்லையெனில் பதவி விலக வேண்டும்" – தமிழிசை

தவெக அமைச்சர் சரத் குமார் போதைப்பொருள் பயன்படுத்தியது போன்ற வீடியோ ஒன்று...

Hyderabad: షా గౌస్, మెహ్‌ఫిల్‌లలో దారుణంగా కిచెన్లు.. ఈగలు, మురికి కూపాలను చూసి షాకైన అధికారులు!

Hyderabad: భాగ్యనగరంలోని ఐటీ కారిడార్‌ చుట్టుపక్కల ఉండే ప్రముఖ రెస్టారెంట్ల అసలు...

ലെബനനില്‍ നിന്നുള്ള ഇസ്രഈല്‍ പിന്മാറ്റം: സമയക്രമം നിശ്ചയിക്കാന്‍ ഇറാന്റെ ആവശ്യം

  ടെഹ്റാന്‍: ലെബനനിലെ അധിനിവേശ പ്രദേശങ്ങളില്‍ നിന്ന് ഇസ്രഈല്‍ ഉപാധികളില്ലാതെ പിന്മാറുന്നതിനായി...