24
September, 2026

A News 365Times Venture

24
Thursday
September, 2026

A News 365Times Venture

`அதிமுக-வை அழிவை நோக்கி நகர்த்திக் கொண்டிருக்கிறார்‌ எடப்பாடி பழனிசாமி!' – ஆ.ராசா சொல்வதென்ன?

Date:

தி.மு.க மாணவர் அணியின் மாநில அளவிலான மாவட்ட அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் நீலகிரி மாவட்டம், ஊட்டியில் உள்ள தனியார் ஹோட்டல் அரங்கில் இன்று நடைபெற்றது. மாணவர் அணியின் மாநிலச் செயலாளர்

திமுக மாணவர் அணி கூட்டம்

ராஜீவ் காந்தி தலைமையில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், தி.மு.க மாணவர் அணி பொறுப்பாளரும் துணை செயலாளருமான எம்.பி ஆ.ராசா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு சிறப்புரை நிகழ்த்தியுள்ளனர்.

கூட்டத்தில் பேசிய எம்.பி ஆ.ராசா, “நவீன தொழில்நுட்பங்கள் வளராத காலகட்டத்தில் உலகில் உள்ள வரலாறுகளை எல்லாம் கொண்டு வந்து தம்பிகளுக்கு கடிதங்களாக தந்தவர் பேரறிஞர் அண்ணா. மனித சமுதாயம் பகுத்தறிவை நோக்கித்தான் நகர வேண்டும் என போராடியவர் பொியார். சாதி ஒழிய வேண்டும், பெண் அடிமைத்தனம் ஒழிய வேண்டும், சமதர்ம சமுதாயம் அமைய வேண்டும் என்ற பெரியாரின் கொள்கைகள் வெற்றி பெற வேண்டும் என்றால், அரசியல் அதிகாரம் தேவை என அண்ணா உணர்ந்தார். அதற்காகத்தான் தி.மு.க – வை தொடங்கினார். ஓர் அரசியல் கட்சி அதிகாரத்திற்கு வர வேண்டும். அதிகாரத்திற்கு வரவில்லை என்றால், அதன் கொள்கைகளை ஒருபோதும் நிறைவேற்ற முடியாது என முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறன் அடிக்கடி கூறுவார்.

திமுக மாணவர் அணி கூட்டம்

கொள்கை இல்லாத அரசியல் கட்சி அழிந்து விடும். அ.தி.மு.க தலைமை என்கிற பெயரில் கொள்கையற்ற செயல்பாடுகளால் அந்தக் கட்சியை அழிவை நோக்கி நகர்த்திக் கொண்டிருக்கிறார்‌ எடப்பாடி பழனிசாமி. கொள்கைதான் ஒரு கட்சிக்கான அடிப்படை. நாட்டில் பலரும் மோடியை அரசியல் ரீதியாக எதிர்கிறார்கள். ஆனால் சித்தாந்த ரீதியில் பா.ஜ.க – வையும், பிரதமர் மோடியையும் எதிர்ப்பதற்கு வேறு எந்த கட்சிக்கும் கொள்கை கிடையாது. இந்துத்துவா, மோடி, அமித் ஷா, ஆர்.எஸ்.எஸ்க்கு எதிரான தத்துவத்தை கொண்டிருக்கிற ஒரே இயக்கம் திராவிடர் கழகமும், தி.மு.க -வும் தான்” என்றார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

AP Liquor Shops: లిక్కర్ షాపులపై కీలక నిర్ణయం.. ఇక రెన్యువల్ గడువు పొడిగింపు లేదు..!

AP Liquor Shops: ఆంధ్రప్రదేశ్‌లో 2026–27 ఎక్సైజ్ సంవత్సరానికి ఏ4 మద్యం...

കുടുംബ കലഹങ്ങള്‍ വേണ്ട; എ.ഐ ക്യാമറ നിയമ ലംഘന നോട്ടീസുകളില്‍ ചിത്രങ്ങള്‍ ഒഴിവാക്കാന്‍ എം.വി.ഡി

തിരുവനന്തപുരം: മോട്ടോര്‍ വാഹന വകുപ്പിന്റെ എ.ഐ ക്യാമറകള്‍ വഴിയുള്ള നിയമലംഘനങ്ങള്‍ പരിശോധിക്കുന്നതിനുള്ള...

“நாங்கள் யார் மீதும் போர் தொடுத்ததில்லை; எங்கள் மீது போர் திணிக்கப்பட்டது!” – ஐ.நா-வில் ஈரான் அதிபர்

ஈரான் போர் தொடர்ந்துகொண்டிருக்கும் இதே வேளையில், அமெரிக்காவிற்குச் சென்றிருக்கிறார் ஈரான் அதிபர்...

Japan Captain: వైభవ్ సూర్యవంశీ ఆడతాడని అనుకున్నా.. జపాన్ కెప్టెన్ అసంతృప్తి..

జపాన్‌తో జరిగిన చారిత్రాత్మక తొలి పురుషుల టీ20 మ్యాచ్‌లో భారత్ తరఫున...