19
March, 2025

A News 365Times Venture

19
Wednesday
March, 2025

A News 365Times Venture

`மனைவி கணவரை தவிர்த்து வேறொருவர் மீது காதலும், நெருக்கமும் கொண்டிருப்பது தகாத உறவாகாது'- MP ஹைகோர்ட்

Date:

மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் தன்னுடைய மனைவிக்கு வேறு ஒருவருடன் தொடர்பு இருப்பதாகக் கூறி, அவருக்கு ஜீவனாம்சம் கொடுக்க முடியாது என்று கூறி, கோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார். இவ்வழக்கை குடும்ப நீதிமன்றம் தள்ளுபடி செய்து இடைக்கால நிவாரணமாக மனைவிக்கு பராமரிப்பு தொகை வழங்க உத்தரவிட்டு இருந்தது. அதோடு வெறுமனே உணர்ச்சிப்பூர்வமான தொடர்பு, உறவு தகாத தொடர்பாகாது என்று கூறி அவரது மனுவை தள்ளுபடி செய்திருந்தது. அதனை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார்.

இம்மனு மீதான விசாரணையில் தீர்ப்பளித்த உயர் நீதிமன்ற நீதிபதி அலுவாலியா, ”தகாத உறவு என்பதன் அர்த்தம் திருமணம் தாண்டி வேறு ஒருவருடன் பாலியல் உறவு வைத்துக்கொள்வதாகும். அதேசமயம் ஒரு மனைவி கணவனை தவிர்த்து வேறு ஒருவருடன் தாம்பத்திய உறவு இல்லாமல், காதல் மற்றும் நெருக்கம் காட்டுவது தகாத தொடர்பாகாது. அப்படிப்பட்ட மனைவி தகாத உறவில் இருக்கிறார் என்று சொல்ல முடியாது. 144(5) மற்றும் 125(4) வது சட்டப்பிரிவுகள் ஒரு மனைவி திருமணம் மீறிய உறவில் இருக்கிறார் என்பதை நிரூபித்தால் மட்டுமே அவருக்கு ஜீவனாம்சம் கொடுப்பதைச் சட்டம் தடுக்கிறது. உடல் ரீதியிலான தொடர்பு இல்லாத நிலையில் அதனை தகர்த்த தொடர்பாகக் கூற முடியாது என்று குடும்ப நீதிமன்றம் குறிப்பிட்டு இருப்பதை ஏற்றுக்கொண்ட உயர் நீதிமன்றம், மனுதாரர் மனுவை தள்ளுபடி செய்கிறது.

மனுதாரர் தனது மனுவில், தான் மருத்துவமனையில் வார்டு பாயாக வேலை செய்வதாகவும், 8 ஆயிரம் மட்டும் சம்பளம் கிடைப்பதாகவும் குறிப்பிட்டு இருந்தார். அதோடு தனது மனைவி இந்து திருமண சட்டத்தின் கீழ் 4 ஆயிரம் ரூபாய் பெறுவதாகவும், பியூட்டி பார்லர் நடத்தி அதிலும் சம்பாதிப்பதாகவும், குடும்ப நீதிமன்றம் தெரிவித்தபடி தான் 4 ஆயிரம் கொடுத்தால் தனது சம்பளத்தை விட… மனைவியின் வருமானம் அதிகமாகிவிடும் என்று குறிப்பிட்டுருகிறார். ஆனால் அவரது வாதத்தை உயர் நீதிமன்றம் ஏற்றுக்கொள்ள மறுக்கிறது. அதோடு மனுதாரர் கொடுத்திருக்கும் சம்பள சிலிப் எப்போது எங்கிருந்து கொடுக்கப்பட்டது என்பது தொடர்பான தகவல் இல்லாமல் இருக்கிறது. எனவே இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது” என்று நீதிபதி குறிப்பிட்டார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

Atreyapuram Pootharekulu: ఆత్రేయపురం కల్తీ నెయ్యి ఘటన.. ల్యాబ్ పరిశీలనలో వెలుగులోకి కీలక వాస్తవాలు!

అంబేద్కర్ కోనసీమ జిల్లా ఆత్రేయపురంలోని కొన్ని పూతరేకుల దుకాణాల్లో వాడింది కల్తీ...

ತಲೆಯಲ್ಲಿ ಕೂದಲಿಲ್ಲ ಎಂದು ಪತ್ನಿಯಿಂದ ನಿಂದನೆ: ಪತಿ ಆತ್ಮಹತ್ಯೆಗೆ ಶರಣು

ಚಾಮರಾಜನಗರ,ಮಾರ್ಚ್,17,2025 (www.justkannada.in): ತಲೆಯಲ್ಲಿ ಕೂದಲಿಲ್ಲ ಎಂದು ಪತ್ನಿ  ನಿಂದಿಸಿದ್ದಕ್ಕೆ  ಪತಿ...

ഒമ്പത് മാസത്തെ കാത്തിരിപ്പിനൊടുവില്‍ ഭൂമി തൊട്ട് സുനിത വില്യംസും സംഘവും

ഫ്‌ളോറിഡ: ഒമ്പത് മാസത്തെ കാത്തിരിപ്പിനൊടുവില്‍ ഭൂമി തൊട്ട് സുനിത വില്യംസും സംഘവും....

தருமபுரி: `கலெக்டரா இருந்தாலும் கதை முடிஞ்சது’ – 24 நாள்களில் திமுக மா.செ-வின் பதவி பறிப்பு பின்னணி

தி.மு.க-வின் தருமபுரி கிழக்கு மாவட்டச் செயலாளராக பொறுப்பு வகித்துவந்த பி.தர்மசெல்வன் அதிரடியாக...