14
February, 2025

A News 365Times Venture

14
Friday
February, 2025

A News 365Times Venture

Union Budget 2025 : EV கார், பைக், லெதர், மொபைல்… விலை குறையும், உயரும் பொருள்கள் என்னென்ன?!

Date:

2025-26 நிதியாண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். வரிச்சலுகை விரிவுபடுத்தப்பட்டதன் மூலம், இந்த பட்ஜெட் இந்தியாவின் வளர்ந்து வரும் நடுத்தர வர்க்கத்தினருக்கான செலவின சக்தியை அதிகரிக்கும் பட்ஜெட்டாக அமைந்துள்ளது.

இன்ஷூரன்ஸ் துறையில் 100% அந்நிய நேரடி முதலீடு அனுமதி, சிறு நிறுவனங்களின் வளர்ச்சிக்கு கூடுதல் சலுகைகள், அணு உலை மூலம் மின்சார உற்பத்தியை அதிகரிக்க திட்டம், கடன் போன்ற பல முக்கிய திட்டங்கள், சுங்க வரிசலுகைகளும், கடன் சலுகைகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.

Budget 2025 மூலம் எந்தெந்த பொருள்களின் விலை குறையும், எவற்றுக்கெல்லாம் விலை அதிகரிக்கும் என்பதற்கான பட்டியல் இதோ!

விலை குறையும் பொருள்களின் பட்டியல்:

  • புற்றுநோய் மற்றும் நாள்பட்ட நோய்களுக்குப் பயன்படுத்தப்படும் 36 உயிர்காக்கும் மருந்துகளுக்கான சுங்க வரி முழுவதுமாக நீக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த மருந்துகளின் விலை குறையும்.

  • மேலும், 37 மருந்துகளுக்கு அடிப்படை சுங்க வரி தளர்த்தப்பட்டுள்ளதால், அவற்றின் விலையும் குறையும்.

  • எலெக்ட்ரானிக் பொருள்களுக்கான அடிப்படை சுங்க வரி 5 விழுக்காடாக குறைக்கப்பட்டுள்ளதால், அவற்றின் விலையும் குறையக்கூடும்.

  • வயர் உள்ள ஹெட்போன்கள், மைக்குகள் மற்றும் USB கேபிள்களுக்கான அடிப்படை சுங்க வரி விலக்கப்பட்டுள்ளதால், அவற்றின் விலையும் குறையக்கூடும்.

EV Car
  • எலெக்ட்ரானிக் வாகனங்களுக்கான பேட்டரிகள் தயாரிக்கப் பயன்படும் 35 சரக்குகள் ‘விலக்கு அளிக்கப்பட்ட மூலதன பொருள்களின் பட்டியலில்’ சேர்க்கப்பட்டுள்ளதால், EV கார்களின் விலையும் குறையும்.

  • இதேபோல மொபைல் போன் பேட்டரிகள் தயாரிக்கப் பயன்படும் 28 கூடுதல் சரக்குகளும் விலக்கு அளிக்கப்பட்ட மூலதன பொருள்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன.

  • கோபால்ட் பவுடர் மற்றும் கழிவுகள், ஸ்கிராப் மற்றும் லித்தியம்-அயன் பேட்டரிகளுடன் 12 முக்கிய கனிமங்கள் அடிப்படை சுங்க வரியில் இருந்து விலக்கு அளிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • ஈரமான நீல லெதருக்கு அடிப்படை சுங்க வரியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஜாக்கெட்டுகள், காலணிகள், பெல்ட்கள் மற்றும் பணப்பைகளின் விலைக் குறையும்.

  • கப்பல்கள் தயாரிப்பில் பயன்படுத்தப்படும் மூலப்பொருள் உதிரிபாகங்கள் மீதான அடிப்படை சுங்க வரி விலக்கை மேலும் 10 ஆண்டுகளுக்கு அரசு தொடர உள்ளது.

  • மீன் பேஸ்டுக்கான (Frozen Fish Paste) அடிப்படை சுங்க வரி 30 விழுக்காட்டிலிருந்து 5 விழுக்காடாக குறைக்கப்பட்டுள்ளது. இது உணவு மற்றும் வேளாண்மையில் உதவும்.

  • ஈதர்நெட் ஸ்விட்ச்களுக்கான சுங்க வரி 20 விழுக்காட்டிலிருந்து 10 விழுக்காடாக குறைக்கப்பட்டுள்ளது.

  • மீன் தீவனத்துக்காக வாங்கப்படும் மீன் ஹைட்ரோலைசேட்டுக்கான சுங்கவரி 15 விழுக்காட்டிலிருந்து 5 விழுக்காடாக குறைக்கப்பட்டுள்ளது.

  • 1600 சிசிக்கு குறைவான திறன்கொண்ட இருசக்கர வாகனங்களுக்கான அடிப்படை சுங்க வரி 50 விழுக்காட்டிலிருந்து 40 விழுக்காடாக குறைக்கப்பட்டுள்ளது.

விலை உயரும் பொருள்கள் என்னென்ன?

படகு
  • பின்னப்பட்ட துணிகளுக்கான சுங்க வரி 10-20 விழுக்காடாக இருந்ததிலிருந்து 20 விழுக்காடாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

  • தட்டையான தொலைக்காட்சி டிஸ்பிளேக்களுக்கான அடிப்படை சுங்க வரி, 10 விழுக்காட்டிலிருந்து 20 விழுக்காடாக உயர்ந்துள்ளது.

  • சோலார் செல்கள்

  • இறக்குமதி செய்யப்படும் காலணிகள், மெழுகுவர்த்திகள்.

  • இறக்குமதி செய்யப்படும் படகுகள் மற்றும் பிற மிதவைகள்.

  • பிவிசி பொருள்கள் (PVC Flex Films, PVC Flex Sheets, PVC Flex Banner)

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

Kishan Reddy: మాజీ సీఎం కేసీఆర్, సీఎం రేవంత్ రెడ్డిలకు కేంద్రమంత్రి సవాల్!

మాజీ సీఎం కేసీఆర్, సీఎం రేవంత్ రెడ్డిలకు కేంద్రమంత్రి కిషన్ రెడ్డి...

ಹೂಡಿಕೆದಾರರ ಸಮಾವೇಶ: ಉತ್ಸಾಹದಿಂದ ಓಡಾಡಿದ ಎಂ ಬಿ ಪಾಟೀಲ

ಬೆಂಗಳೂರು, Feb.12,2025: ಜಾಗತಿಕ ಹೂಡಿಕೆದಾರರ ಸಮಾವೇಶದಲ್ಲಿ ಬುಧವಾರ ದಿನವಿಡೀ ಬೃಹತ್...

മലയോര ഹൈവേ; 250 കി.മീ പണി പൂര്‍ത്തിയായി, ഒരു വര്‍ഷത്തിനകം 200 കി.മീ കൂടി; ആദ്യ റീച്ചിന്റെ ഉദ്ഘാടനം നാളെ

തിരുവനന്തപുരം: കാസര്‍ഗോഡ് ജില്ലയിലെ നന്ദാരപ്പടവ് മുതല്‍ തിരുവനന്തപുരം ജില്ലയിലെ പാറശ്ശാലവരെ നീളുന്ന...

`மனைவி கணவரை தவிர்த்து வேறொருவர் மீது காதலும், நெருக்கமும் கொண்டிருப்பது தகாத உறவாகாது'- MP ஹைகோர்ட்

மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் தன்னுடைய மனைவிக்கு வேறு ஒருவருடன் தொடர்பு...