13
March, 2026

A News 365Times Venture

13
Friday
March, 2026

A News 365Times Venture

கடலூர்: `அய்யோ என் புள்ளைங்க போகுதே!’ – ஆக்கிரமிப்பை அப்புறப்படுத்திய அரசு… கதறித் துடித்த பெண்கள்

Date:

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி தொகுதிக்குட்பட்ட வானமாதேவி, கொடுக்கன்பாளையம், தெத்தங்குப்பம், கட்டாரா சாவடி உள்ளிட்ட கிராமங்களில் அரசுக்கு சொந்தமாக 65.75 ஹெக்டேர் நிலம் இருக்கிறது. அந்த நிலத்தில் அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் வீடு கட்டியும், முந்திரி விவசாயமும் செய்து வருகின்றனர். இந்த நிலையில் அந்த இடத்தில் அமையவிருக்கும் தோல் தொழிற்சாலைக்காக, நிலத்தை கையகப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருக்கிறது மாவட்ட நிர்வாகம். அதற்காக `ஆக்கிரமிக்கப்பட்டிருக்கும் அரசு நிலங்களை 15 நாட்களுக்குள் காலி செய்ய வேண்டும்’ என்று அந்த விவசாயிகளுக்கு கடந்த மாதம் நோட்டீஸ் வழங்கியது வருவாய்துறை.

கடலூர் ஆக்கிரமிப்பு

ஆனால் அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்த அப்பகுதி மக்கள், ஜனவரி 4-ம் தேதி சாலை மறியலில் ஈடுபட்டதுடன் மாவட்ட ஆட்சியரிடமும் மனு அளித்தனர். இந்த நிலையில் கடலூர் ஆர்.டி.ஓ அபிநயா நேற்று ஜே.சி.பி இயந்திரங்கள் மற்றும் வருவாய்துறை ஊழியர்களுடன் ஆக்கிரமிப்பு பகுதிகளுக்குச் சென்றார். அதேபோல பாதுகாப்புக்காக பண்ருட்டி டி.எஸ்.பி தலைமையில் சுமார் 300-க்கும் மேற்பட்ட போலீஸார் அங்கு குவிக்கப்பட்டிருந்தனர்.

அப்போது ஆக்கிரமிப்பை அகற்றச் சென்ற போலீஸாரையும், அதிகாரிகளையும் தடுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் அப்பகுதி மக்கள். அவர்களுக்கு ஆதரவாக வந்த பா.ம.க, பா.ஜ.க மற்றும் தமிழக வாழ்வுரிமை கட்சி நிர்வாகிகள், `விளை நிலங்களை விட்டுக் கொடுக்க மாட்டோம்’ என்று ஆர்.டி.ஓ-விடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது, `விளை நிலமாக இருந்தாலும் இது அரசுக்குச் சொந்தமான நிலம். ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருக்கிது. முறைப்படி அவர்களுக்கு தெரிவித்த பிறகே அப்புறப்படுத்துகிறோம்’ என்ற அவர், மரங்களை அப்புறப்படுத்த உத்தரவிட்டார்.

கடலூர் ஆக்கிரமிப்பு

அதனடிப்படையில் அங்கிருந்த பலா மற்றும் முந்திரி மரங்களை வேரோடு சாய்த்தன ஜே.சி.பி இயந்திரங்கள். பல ஆண்டுகள் தங்கள் பிள்ளைகளைப் போல பார்த்துப் பார்த்து வளர்த்த மரங்கள் சாய்க்கப்படுவதை தாங்கிக் கொள்ள முடியாத பெண்கள்,  “அய்யோ என் புள்ளைங்களாம் போகுதே…” என்று கதறி அழுதனர். சிலர் மரங்களை கட்டிப்பிடித்துக் கொண்டு அழுதனர். அதையடுத்து போலீஸார் அவர்களை அப்புறப்படுத்தியதும் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி தொடர்ந்தது.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ನನ್ನನ್ನು ಬೆಳೆಸಿದಂತೆ ಯತೀಂದ್ರರನ್ನು ರಾಜಕೀಯವಾಗಿ ಬೆಳೆಸಿ-ಸಿಎಂ ಸಿದ್ದರಾಮಯ್ಯ

ಮೈಸೂರು,ಮಾರ್ಚ್13,2026 (www.justkannada.in):  ರಾಜಕೀಯವಾಗಿ ನನ್ನನ್ನು ಬೆಳೆಸಿದಂತೆ ಪುತ್ರ ಯತೀಂದ್ರರನ್ನು ಬೆಳೆಸುವಂತೆ...

കടന്നുവന്ന കനല്‍വഴികള്‍ മറ്റുള്ളവര്‍ മറന്നാലും ഞാന്‍ മറക്കില്ല; എന്റെ ചോരവീണ മണ്ണില്‍ തലയുയര്‍ത്തിത്തന്നെ നില്‍ക്കും: കെ. സുധാകരന്‍

കണ്ണൂര്‍: നിയമസഭാ സ്ഥാനാര്‍ത്ഥി നിര്‍ണയത്തിലെ അതൃപ്തി പരസ്യമാക്കി കോണ്‍ഗ്രസ് നേതാവ് കെ.സുധാകരന്‍....

பண்ணையாளர்கள் அறிமுகப்படுத்திய பரிசுகள்… வளைக்கப்பட்ட வாக்காளர்கள்! | நினைவுச் சுவடுகள் 09

பரிசுகளால் வளைக்கப்பட்ட வாக்காளர்கள்நினைவுச் சுவடுகள்தமிழ்நாட்டு அரசியலில் தேர்தல்கள் என்றால் பொதுக்கூட்டம், மாநாடு,...

Heroes Body Transformation: సినిమాల కోసం బాడీ ట్రాన్స్‌ఫర్మేషన్.. యంగ్ హీరోల సరికొత్త లుక్స్ వైరల్..!

Heroes Body Transformation: ప్రస్తుతం టాలీవుడ్‌లో మేకోవర్ సీజన్ నడుస్తోంది. కొత్త...